நானும் வலையும் ( இது எனது 150வது பதிவு )

சிறுகச்சிறுகச் சேர்ந்த சொந்தங்களே வணக்கம்.
யாவரும் நலந்தானே!

நான் எழுதிய ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் கற்பித்து ஆதரவு நல்கி என்னையும் உங்களில் ஒருவனாக வலையுலகில் இணைத்துக் கொண்டமைக்கு மனந்திறந்து நான் கூறும் முதல் வணக்கம் இது.

“யாவரும் நலம்” சுசி யின் அழைப்பினை ஏற்று, நான் வலையமைப்புக்கு வந்த விதத்தினை எழுத நினைத்தபோதுதான் ஞாபகம் வந்தது இது எனது 150 வது இடுகை என்பது. அதனால் இந்த இடுகையிலேயே எனது வலையுலகப் பிரவேசம் பற்றிச் சொல்லிவிடுவது சிறப்பென நினைத்தேன். அதனால் விளைந்ததே இந்த இடுகையாகும்.

நான் இலங்கையைச் சேர்ந்தவன். 1992இல் நான் 9வது படிக்கும் போதுதான் முதன்முதலில் கவிதை எழுதியதாக ஞாபகம். அதன்பின் பல கவிதைகளை எழுதினேன். இருந்தாலும் 1999இல் “சரிநிகர்” சஞ்சிகையில் வந்த எனது முதல்ச் சிறுகதைதான் எனது (அப்போது வேறு பெயரில் எழுதினேன்) கலையுலகப் பயணத்துக்கான அத்திவாரமாக அமைந்தது.

அதன்பின்னர் “இடி” , “தமிழ்கேசரி” , “வீரகேசரி” , “சுடரொளி” , “தினக்குரல்” , “வெளிச்சம்” முதலான பல சஞ்சிகைகளிலும் இன்னும் பல நினைவு மலர்கள், சிறப்பு வெளியீடுகளிலும் பல கவிதை, சிறுகதை, கட்டுரைகளை எழுதியுள்ளேன். ஆனால்… எட்டாக்கனியாக இருந்த இணையம் சமாதான (2003) காலத்தின் பின்னர்தான் எங்களை வந்தடைந்தது.

அதன் பின்னர்கூட எனக்கு இணையம் பற்றிய சிந்தனை வரவில்லை. எழுதவேண்டும் என்றும் தோன்றவில்லை. இதற்கிடையில் நான் 14 வருடங்களாக எழுதிச் சேர்த்து ஆவணப்படுத்தி வைத்திருந்த அனைத்து ஆக்கங்களையும் தூரதிஸ்டவசமாக 2006ஆம் ஆண்டு இழக்கவேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.

அதன்பின்னர்தான் இணையத்தின் முக்கியத்தை உணர்ந்த நான் முதலில் கீற்று.கொம், கலகம்.கொம், யாழ்.கொம் போன்றவற்றில் எழுதினேன். ஓரளவுக்கு எந்தத் தமிழ் எழுத்துருவாயினும் என்னால் எழுத முடிந்தமையால் எனக்கு வலையில் எழுதுவது அவ்வளவு கடினமானதாகத் தெரியவில்லை. அதனால் நிறைய எழுதினேன். ஆனால் என் தூரதிஸ்டம் மீண்டும் என்னைத் துரத்தியது. தொழிநுட்பக் கோளாறு காரணமாக கலகம்.கொம் நிறுத்தப்பட்டபோது மீண்டும் எனது இரண்டுவருடப் படைப்புகளில் பலவற்றை நான் இழந்தேன்.

இதன் பின்னர்தான் எனக்கென நான் எழுதிய அனைத்ததையும் இனியாவது சிதையாமல் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உதயமானபோதுதான் “தியாவின் பேனா பேசுகிறது” என்ற வலைப்பூவைத் தொடங்கினேன்.

ஆரம்பம் முதலே பலர் என்னைத் தட்டிக்கொடுத்து ஆதரவு நல்கி வருகின்றீர்கள். இன்றுவரை எல்லோரும் சொந்தக்காரர்கள் போல நல்லதையும் கெட்டதையும் சொல்லி வருகின்றீர்கள். நல்ல நண்பர்களாகவும் இருந்து வருகின்றீர்கள்.

என்னினிய உறவுகளே!

இதுவரைநாளும் நான் உங்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் ஏதாவது கருத்துக் கூறியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். அத்துடன் எனது அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டம் எழுதி என்னை ஊக்கப்படுத்திவரும் உங்கள் அனைவரையும் இந்தநாளில் நான் நன்றியுடன் நினைவு கூருகிறேன். இன்றுபோல் இனிவரும் நாட்களிலும் உங்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்களின் மூலம் என்னைத் தூக்கி நிறுத்துங்கள். நாளும் நல்ல நண்பர்களாக இருப்போம்.

நான் இத் தொடரை எழுதும்படி யாரையும் அழைக்கப்போவதில்லை. உறவுகளே நீங்களும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது உங்களின் வலைபுகு படலம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

நிலைபெற்ற நம் வாழ்வினிலே என்றும்
தலைபெற்று வந்தவர்கள் நீங்கள்
கலையுலகில் என் ஆக்கங்களைக் கண்டு – உங்கள்
வலைதனிலே வாழ்த்தெழுதி மகிழ்வித்தீர்

கல்வியிலே பல திறத்திலுள்ளோர் கூடி
சொல் பொறுக்காச் சோர்விலராய் நின்று
பல் கருத்துக் கூறி உங்கள் - மனந்திறந்து
நல்லாசிகள் தந்தமைக்கு நன்றி.


கருத்துகள்

  1. வாழ்த்துக்கள் தியா....
    வளர்க மேலும்.

    பதிலளிநீக்கு
  2. 150 பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    பல ஆயிரம் கடக்க வேண்டும் என்பதே எங்கள் அவா!

    பதிலளிநீக்கு
  3. மகிழ்ச்சி ..! வாழ்த்துக்கள்...! வளர்க...!

    பதிலளிநீக்கு
  4. மிக மிக மகிழ்ச்சி தியா. உங்களைத் தொடர்வதில் மிகப் பெருமை எனக்கு. 150க்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் மேலும் பல இடுகைகள் வெளிவர வாழ்த்துக்கள்,,,,,,

    பதிலளிநீக்கு
  6. மிக மகிழ்ந்து அகம் நெகிழ வாழ்த்துகிறேன் தியா

    150 க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. ஸ்ரீ

    சி.கருணாகரசு

    வால்பையன்

    ஜீவன்

    D.R.Ashok

    வானம்பாடிகள்

    வசந்த்

    இன்றைய கவிதை (கேயார்)

    நேசமித்திரன்


    உங்கள் எல்லோருடைய வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துகள் தியா..! ரொம்ப சந்தோஷம்..!

    பதிலளிநீக்கு
  9. 150 க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் தியா....

    வளர்க வளர்க மேலும் வளர்க.

    பதிலளிநீக்கு
  10. கலகலப்ரியா

    நசரேயன்

    சுசி

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. 150க்கு வாழ்த்துக்கள்..இன்னும் நிறைய எழுதுங்கள்..பதிவு அருமை..

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் தியா...! சீக்கிரம் இரட்டை சதம் போடுங்க...!

    பதிலளிநீக்கு
  13. சாதனையாளனுக்கு அகம் மலர வாழ்த்துக்க.கள்."எண்ணும் எழுத்தும் கண் என தகும்".உங்கள் எழுத்தை கண் போல காத்து பேணி வைத்திருங்கள். மேலும் பல்லாயிரம் படைக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. புலவன் புலிகேசி
    ஈ ரா
    " உழவன் " " Uzhavan "
    ஸ்ரீராம்.
    லெமூரியன்
    நிலாமதி அக்கா
    உங்கள் எல்லோருடைய வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துகள் தியா...

    விரைவில் 200 தொட்டு விடுவீர்கள் என்றா நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

    நீங்கள் 150 இடுகை எழுதும் வரை எப்படி உங்களை கவினிக்காமல் விட்டேன். வாசிப்பை இன்னும் கூர்மையாக்க வேண்டும் போல் இருக்கின்றது.

    அழகாக எழுதுகின்றீர்கள். நன்றாகவும் எழுதுகின்றீர்கள். வாழ்த்துகள் நண்பரே மேன் மேலும் வளர.

    தங்களின் பல எழுத்துக்கள் காணாமல் போனது கேட்க மிகவும் வருத்தமாக இருக்கின்றது நண்பரே.

    பதிலளிநீக்கு
  16. கலைஞானம் கொண்டவனுக்கு
    கவிதை ஊற்றுகள் வற்றுவதில்லை
    வாழ்வியல் வற்றினாலும்..

    இழந்த கவிதைகளையும்
    புனையும் உன் முனை
    தியாவின் பேனாவாய்..

    வாழ்த்துக்கள் நண்பா...

    பதிலளிநீக்கு
  17. இராகவன் நைஜிரியாகூறியது...
    வாழ்த்துகள் தியா...

    விரைவில் 200 தொட்டு விடுவீர்கள் என்றா நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

    நீங்கள் 150 இடுகை எழுதும் வரை எப்படி உங்களை கவினிக்காமல் விட்டேன். வாசிப்பை இன்னும் கூர்மையாக்க வேண்டும் போல் இருக்கின்றது.

    அழகாக எழுதுகின்றீர்கள். நன்றாகவும் எழுதுகின்றீர்கள். வாழ்த்துகள் நண்பரே மேன் மேலும் வளர.

    தங்களின் பல எழுத்துக்கள் காணாமல் போனது கேட்க மிகவும் வருத்தமாக இருக்கின்றது நண்பரே.

    November 27, 2009 1:08 அம


    //



    நன்றி இராகவன் உங்களின் பின்னூட்டலுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  18. சந்தான சங்கர் கூறியது...
    கலைஞானம் கொண்டவனுக்கு
    கவிதை ஊற்றுகள் வற்றுவதில்லை
    வாழ்வியல் வற்றினாலும்..

    இழந்த கவிதைகளையும்
    புனையும் உன் முனை

    தியாவின் பேனாவாய்..

    வாழ்த்துக்கள் நண்பா...

    November 27, 2009 9:36 அம


    //



    சந்தான சங்கர் உங்களின் பதில் எனக்கு நம்பிக்கை தருகிறது

    பதிலளிநீக்கு
  19. ரொம்ப சந்தோஷம் தியா, 150,வது படைப்புக்கு..

    தொலைத்தவைகளை மறந்ததுபோல் நினைத்து தொடர்ந்து தாங்களின் படைப்புகளை தந்து உங்களுக்குள்ளிருக்கும் திறமைகளை வெளிப்படுத்துங்கள்..

    மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  20. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தியா.இன்னும் இன்னும் நிறைவாய் எழுத என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. இந்த எண்ணிக்​கை என்​னை மிரட்டுகிறது! இதில் ​பொதிந்துள்ள ஆர்வம், முயற்சி, உ​ழைப்பு, கவனம், தீவிரம் ​போன்றவற்​றை உங்களிடமிருந்து எடுத்து என்னிடம் ​கேட்டும் பார்த்துக் ​கொள்கி​றேன்!

    இந்த இருப்​பைப் விடாமல் பிடித்து ​வைத்துக் ​கொள்ளும் தீவிரத்துக்கு என் நன்றிகள் மட்டும் - இப்​போ​தைக்கு!

    பதிலளிநீக்கு
  22. //இதுவரைநாளும் நான் உங்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் ஏதாவது கருத்துக் கூறியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்//
    என்ற இந்த ஒரு வாசகம்தான் புண்படுத்துகிறது.. இ​தைத்தவிர வேறெதுவும் நீங்கள் ​புண் படுத்துகிற மாதிரி சொல்லியிருக்க மாட்டீர்கள் என உங்களின் 150 பதிவுகளில் ​இரண்டே இரண்டு மட்டும் படித்தவன் ​​சொல்கி​றேன்!

    பதிலளிநீக்கு
  23. //“தியாவின் பேனா பேசுகிறது” என்ற வலைப்பூவைத் தொடங்கினேன்//
    என்ற வ​கையில்... அ​னைவரும் பூவை வ​லையாகப் பின்னத் ​தொடங்கிய கணத்தில் நீங்கள் ஒரு வலை​யை பூவாக மாற்றி விட்டீர்கள் என எண்ணத் ​தோன்றுகிறது!

    அப்படி​யே.. இங்கு உங்களுக்கு வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  24. நன்றி மலிக்கா உங்களின் நம்ம்பிக்கையூட்டும் வரிகளுக்கு நன்றி.

    உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  25. ஜெகநாதன் கூறியது...
    இந்த எண்ணிக்​கை என்​னை மிரட்டுகிறது! இதில் ​பொதிந்துள்ள ஆர்வம், முயற்சி, உ​ழைப்பு, கவனம், தீவிரம் ​போன்றவற்​றை உங்களிடமிருந்து எடுத்து என்னிடம் ​கேட்டும் பார்த்துக் ​கொள்கி​றேன்!

    இந்த இருப்​பைப் விடாமல் பிடித்து ​வைத்துக் ​கொள்ளும் தீவிரத்துக்கு என் நன்றிகள் மட்டும் - இப்​போ​தைக்கு!

    November 28, 2009 11:03 PM


    ஜெகநாதன் கூறியது...
    //இதுவரைநாளும் நான் உங்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் ஏதாவது கருத்துக் கூறியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்//
    என்ற இந்த ஒரு வாசகம்தான் புண்படுத்துகிறது.. இ​தைத்தவிர வேறெதுவும் நீங்கள் ​புண் படுத்துகிற மாதிரி சொல்லியிருக்க மாட்டீர்கள் என உங்களின் 150 பதிவுகளில் ​இரண்டே இரண்டு மட்டும் படித்தவன் ​​சொல்கி​றேன்!

    November 28, 2009 11:07 PM


    ஜெகநாதன் கூறியது...
    //“தியாவின் பேனா பேசுகிறது” என்ற வலைப்பூவைத் தொடங்கினேன்//
    என்ற வ​கையில்... அ​னைவரும் பூவை வ​லையாகப் பின்னத் ​தொடங்கிய கணத்தில் நீங்கள் ஒரு வலை​யை பூவாக மாற்றி விட்டீர்கள் என எண்ணத் ​தோன்றுகிறது!

    அப்படி​யே.. இங்கு உங்களுக்கு வாழ்த்துக்களும்!

    November 28, 2009 11:11 பம்


    //



    நன்றி ஜெகநாதன் உங்களின் நீண்ட கருத்துக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  26. வாழ்த்துக்கள் தியா.நன்றி கூறல் பதிவும் அருமையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  27. பூங்குன்றன்.வே கூறியது...
    வாழ்த்துக்கள் தியா.நன்றி கூறல் பதிவும் அருமையாக இருந்தது.

    November 30, 2009 5:36 பம்


    //

    நன்றி பூங்குன்றன்.வே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி