வலைப்பூக்களில் சிக்கிய சில கவிதைகள் (கவிஞர்கள்) பற்றிய எனது பார்வை
கவிஞன், தான் எண்ணும் பொருளை எடுத்துரைக்கக் கையாளும் நடைச்சிறப்பே கவிதைமொழி எனப்படும். கவிதைக்கு உணர்ச்சியை ஊட்டுவதற்கு அதன் மொழி இன்றியமையாதது. இது வடிவத்தின் ஒரு கூறாக இருப்பினும் நுணுக்கமானது. மொழி என்பது கவிஞனின் மேலாடையல்ல மேனியே அதுதான். உணர்த்துமுறையில் கவிஞனின் தனித் தன்மை புலப்படுவது போல, மொழி அமைப்பிலும் கவிஞனின் தனித்தன்மை புலப்படும். உதாரணமாகப் பாரதியாரின் நடையழகினைப் பாரதிதாசனில் முழுமையாக இல்லாவிடினும் ஓரளவுக்கெனினும் காணமுடிகின்றமையினைக் கூறலாம்.
ஒரு கவிஞனின் நடையழகென்பது அவரது உள்ளத்து இயல்பை ஒட்டி அமைவதாகும். தெளிந்த மொழியியல் அறிவே, மொழி பற்றிய ஆய்வினை முழுமைப்படுத்துகின்றது. கவிதை மொழி என்பது அடிப்படையில் பேச்சு அல்லது கருத்து மாற்றத்தைக் குறிப்பதாகும். பொதுவாக கவிதை மொழியில் பல உறழ்ச்சிகளும் இலக்கண மீறல்களும் காணப்படும். கவிதை மொழியானது வழக்கு மொழியிலிருந்து மாறுபடும் தன்மை கொண்டது. அது கவிஞனின் உரிமம். அதற்காக மொழியை அலட்சியம் செய்யாமல் கவிஞன் ஏதோ ஒருவகையில் பொருள் உணர்த்தக் கையாண்ட உத்தியாக அதைக் கருதுவதே கவிதை மொழியை ஆழமாகப் பார்க்க வழிவகுக்கும்.
கவிதை மொழியை அமைக்கும் ஆற்றல் பற்றிச் சொற்களால் விளக்குவது கடினம். அது வியக்கத்தக்க வகையில் நம் உணர்ச்சியைத் தூண்டுகின்றது. கவிஞர் தம் மனதில் உணர்ச்சிக்குத் தக்க சொற்களைக் கவிதைகளில் அமைக்கிறார். அவருடைய சொற் கோர்வையின் தன்மைதான் என்றும் புதுமை, எழிலுடன் கவிதையை வைத்திருக்கத் துணை புரிகின்றது. ஆக, ஒரு கவிஞன் உணர்ச்சியை விளக்குவதற்குப் பொருந்தாத எந்தச் சொல்லையும் கவிதையில் வலிந்து திணிக்கக் கூடாது.
கவிஞன் எதையும் எந்த வடிவிலும் எப்படியும் பாடலாம்; யாரும் குறுக்கே நிற்க முடியாது. ‘இப்படித்தான் உணர்த்த வேண்டும்’ என்று எந்தக் கவிஞனுக்கும் ஆணையிட முடியாது. ஆனால் இவ்வாறுதான் உணர்த்தப்பட்டுள்ளது என்று உய்த்தறிந்து காட்ட முடியும்.
ஒரு கவிஞன் புகைப்படக் கலைஞனைப் போன்றவன். இயல்பாகப் படம் பிடிப்பதற்குப் புகைப்படக் கருவி போதும். ஆனால் கலைக் கண்ணுடன் படம் பிடிக்க ஒரு கலைஞன் தேவைப்படுகிறான். இதே போலத்தான் எளிமையாக ஒரு விடயத்தை விவரிப்பதற்கு யாராலும் முடிகிறது. ஆனால் அதை கவிநயத்துடன் சாதிப்பதற்குக் கவிஞனால்தான் முடிகிறது.
நான் இங்கு வலைப்பூக்களில் என்னால் விரும்பிப் படிக்கப்பட்ட ஐந்து கவிஞர்களின் கவிதைகளில் ஒவ்வொன்றைச் சுட்டலாம் என எண்ணுகிறேன். வசந்த், நேசமித்ரன், மலிக்கா, கலகலப்ரியா, இன்றைய கவிதை(சந்தர்) ஆகிய ஐந்து கவிஞர்களின் கவிதைகளைப் இங்கு முடிந்தளவுக்குச் சொல்லப்போகிறேன்.
வசந்த்…
கவிதை மொழியில் உணர்ச்சிகளின் அடையாளமாக, இயல்பாகக் கருத்தை விளக்கும் சாதனமாக நின்று உணர்ச்சியைத் தூண்டிக் கிளர்ச்சியை உண்டுபண்ணுபவை சொற்கள். பொருத்தமான இடங்களில் பொருத்தமான சொற்கள் அமைத்து அழகு படுத்தும்போது கவிதை மொழி சிறப்புற அமைந்து விடுகின்றது. ஒரு எழுத்தாளன் தனது ஆளுமையின் மூலம் சொற்களை எளிமையான முறையில் நளினமாகக் கையாண்டு கவிதையைப் படைக்கின்ற போது அது அவருக்கேயுரிய “சொல்லாட்சி” என்று பெயர் பெறுகின்றது. எளிய நடையில் இயல்பாகச் சொற்களைத் திரட்டி எடுத்து படைத்திருக்கும் வசந்தின் இந்தக் கவிதை தப்பித்தவறியும் வெளியே வாசகனின் புலன் சென்றுவிடாமல் கவிதைக்குள் அவனை மூழ்கடித்துவிடுகிறது.
தன்மானம் காக்க
அன்றொரு நாள்
முறத்தை தூக்கினாள்
மறத்தமிழச்சி
இன்றோ
தமிழ்மானம் காக்க
துப்பாக்கியை தூக்குகிறாள்
மறத்தமிழச்சி..
இளமை,
கனவு,
குடும்பம்,
நாடு,
பாசம்,
சிரிப்பு,
சந்தோசம்,
காதல்,
அழகு,
உறக்கம்,
நிம்மதி,
நாடு,
மக்கள்,
அனைத்தும்
இழந்திவள்..
பெற்ற விருது இந்த ஏகே 47...
பிறந்தோம்
வாழ்ந்தோம்
என்றில்லாமல்
வாழப்பிறந்தவள்...
http://priyamudanvasanth.blogspot.com/2009/11/blog-post_17.html
ஒப்பில்லாத சமூக உருவாக்கமே ஒரு இலக்கியத்தின் உயிர்த் துடிப்பாக இருக்க வேண்டும். சிலர் தம்மால் ஒப்பற்ற சமூகத்தை உருவாக்க முடியாத போது இறைவனிடம் மன்றாடிக் கேட்கிறார்கள். வேறுசிலர் பேனா முனையின் மூலம் எழுத்துப் புரட்சி செய்து பெறத் துடிக்கிறார்கள். இன்னும் சிலர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் அதனை அடைந்து விடலாம் என நினைக்கிறார்கள்.
இதனால் ஒப்பில்லாத சமூக அமைப்புக் கானல் நீராகி ஆயுத கலாசாரம் மேலோங்கி அதுவே முதன்மைப்படுத்தப்பட தவிர்க்க முடியாது அதனையே கவிஞன் எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றான் என்பதை இந்தக் கவிதையின் மூலம் உணர முடிகின்றது.
போர் எந்தளவுக்கு விடுதலையின்மீது அதிகாரத்தைக் கட்டவிழ்த்து விடுகிறதேர் அந்தளவுக்கு முனைப்பாகவும் பிரக்ஞை பூர்வமாகவும் அது படைப்புக்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இங்கு தமிழ், தமிழச்சி என்று இன, மொழி உணர்வின் பால் பற்றுக் கொண்டலையும் ஒரு சராசரி மனிதனின் உணர்வுகள் எளிமையான வரிகளில் சொல்லப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
இன உணர்வு என்பது எல்லா இனத்தினர்க்கும் உரித்தானதொன்று. தத்தம் இனம் சார்ந்து சிந்திக்கப் பழகிக் கொண்டவர்கள் மனிதர்கள் மட்டுமல்லர். காகங்கள் கூடத் தம்மினத்தில் ஒன்று இறப்பினும் கூடி அழும். சிறிதளவு உணவு கிடைப்பினும் கூடி உண்ணும். இத்தகைய இனமான உணர்வு தமிழரிடத்தில் இன்னும் சொற்ப அளவில் இருப்பதை எண்ணிப் பெருமை கொள்வோம்.
இனி:- நேசமித்ரன் , மலிக்கா இவர்கள் இருவருடைய ஒவ்வொரு கவிதைகளை ஒன்றாக நோக்கலாம் என எண்ணியுள்ளேன் முதலில்,
நேசமித்ரன்
பெண்களது இலக்கிய மரபை நிறுவுதல் என்பது எப்போதும் சவால்களை எதிர்கொள்வதாகவே இருக்கிறது. சங்க இலக்கிய காலந் தொட்டு இன்றுவரை பல இடைவெளிகள், கேள்விகள் இருந்துகொண்டுதான் உள்ளன. இன்று பாரதி கண்ட கனவு புதுப் பிறப்பெடுக்கத் தொடங்கியது. ஆண்-பெண் சமத்துவ உணர்வு பாராட்டல், பெண்ணடிமை விலங்குடைத்தல், பெண்மையின் தனித்துவம் பேசுதல், ஆணாதிக்க எதிர்ப்புப் பேசல், பாலியல் சிக்கல்கள், சீதனப் பிரச்சினைகள் என முன்னர் பேசப்படாத பல சேதிகளைத் தாங்கியனவாகப் பெண்ணிலைவாதக் கவிதைகள் வெளிவரத் தொடங்கின.
நேசமித்ரனின் இந்தக் கவிதை சமூகத்தில் ஆணாதிக்கத்தில் நலிந்துபோன ஒதுக்கப்பட்ட மாதர்களைப் பற்றிப் பேசுகின்றது. மிகவும் கட்டிறுக்கமான சொற்களாலான சிக்கனக் கலவையாக காய்ச்சி வடிக்கப்பட்ட இந்தக் கவிதை பெண்மையின் மென்மையான உணர்வுகளை மௌனமொழியால் பேசுகின்றது.
புல்லாங்குழலின் கருத்த
தேமலில் உதிரம் படிந்த கைக்குட்டை
ஒற்றை கடவுளுக்கு எத்தனை கல்லறைகள்
முதிர்ந்த மரம் மண்ணுள் நீண்டிருக்கும்
ஆழத்தில் விழிக்க நேர்கிறது
புகைப்படத்தின் மூலச் சுருள்
மட்டும் மீதமிருக்கிறது ஓரம் சிதைந்து
செயல் செத்த செயற்கைக்கோள்
பறக்கும்
பறவையின் கால்கள்
உள்மடியும் உச்சி ஆகாயத்தில்
முதல் துளி நனைக்கிறது
இறைஞ்சிக் கொண்டிருக்கிறாள்
பிராயம் தொலைந்த பெண் பழைய
வாடிக்கையாளனை
அற்புதம் நிகழும் நாளுக்கான சுழற்சியை
இந்தக் கிரகம் எய்தும் அச்சுதூரம்
நேயத்தால் பகிரும் முத்தங்களால் ஆனது
http://nesamithran.blogspot.com/2009/08/blog-post_26.html
ஆண்-பெண் ஊடாட்டம் என்பது எமது வாழ்வியல் சமூகத்தில் கட்டுப்பாடுகள் நிறைந்ததொன்றாகவே காலத்துக்குக் காலம் நோக்கப்பட்டு வந்துள்ளது. மேலை நாடுகளில் இவ்வுறவு முறை நேரடியான நெருங்கிய தன்மையினைக் கொண்டமைந்தது. சுயமான முடிவினடிப்படையில் ஆண்-பெண் ஊடாட்டங்கள் அமைந்தன. புற அழுத்தங்களுக்கு முதன்மை தரப்படவில்லை. தம் உணர்வுகள், விருப்பு வெறுப்புக்களைப் பாலியல் சார் சிக்கல்களைத் தமக்குள் மனம் விட்டுப் பேசுவதனூடாகத் தீர்த்துக் கொண்டனர்.
எமது சமுதாயத்தில் கணவன் மனைவியிடையே கூட இத்தகைய சம்பாசனைகள் சுயாதீனமாக நிகழ்வது அரிதாகவேயுள்ளது. பாலுறவில் பேசாப்பொருளாகவிருந்த உணர்வுகளும் கவிதைகளில் பேசப்பட்டன என்பதற்கு இக்கவிதை நல்ல சான்று.
பெண்ணாகப் பிறந்ததால் பாலுறவின் இயந்திரமாகவும், அமைதியின் அடையாளமாகவும், தியாகத்தின் உருவமாகவும், தாய்மையின் அடக்கமாகவும் தன்னை உணரும் நிலை வந்துவிட்டது என வேதனைப்பட்டுப் பாலுறவில் வெறுப்பும் சலிப்புத் தன்மையும் கொண்ட நிலையும் இங்கு உணரப்பட்டது. யுத்த நெருக்குதற் காலத்தில் பாலியல் வன்புணர்ச்சிகள், பாலியல் துன்புறுத்தல்கள் முதலியனவற்றால் பாதிக்கப்பட்ட ஈழப் பெண்கள் பற்றிய கவிதைகளினைக் குறிப்பாக கலாவின் “கோணேஸ்வரிகள்” கவிதை பற்றிய நினைவை இக் கவிதை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது.
மலிக்கா
கற்பு என்ற சொல்லால் பழிக்கப்பட்டு, சுயம் மறுக்கப்பட்ட பெண்கள் அக் கற்பிகைக் களவாடியதாக நினைத்து தங்களால் விரும்பப்படாத, மதித்தறியாத தம் இனத்தாரையும் சாடினர். அத்தகைய சாடலினு}டாக தம் இருப்பையும் நிலைநாட்டிக் கொண்டனர்.
அடுப்பங்கரையில் சாம்பர் படலங்களாக ஒதுங்கிக் கிடந்த பெண்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி, பெண்களின் ஆவேசக் குரலாகவும், அடக்குமுறைக்கெதிரான வெளிப்பாடாகவும் கவிதைகள் படைக்கப்பட்டன. பெண்களின் தனிமனித ஆசை, மோகம், ஏக்கம், பரிதவிப்பு என்பன கவிதைகளில் அதிகம் பேசப்பட்ட நிலையில், அகவய உலகிலிருந்து விடுபடத் துடிக்கும் பெண்களின் அடக்குமுறைக்கெதிரான குரல்களாகவும் பெண்கள் சிலரின் கவிதைகள் ஒலித்தன என்பதற்கு இக்கவிதை நல்ல சான்று.
அடி ஓவியப்பெண்ணேஉன்னையும்
விட்டுவைக்கவில்லை இந்த நவநாகரீக
உலகம்
ஓவியத்தில்கூட ஒளிவு மறைவு
வேண்டாமென்கிறது ஒட்டுத்துணி
கலைக்காகத்தானே என்று
கலைந்துஎறிப்படுகிறது கன்னியமான ஆடை
உலகமே அசந்துபோய் பார்க்கிறது
ஆதாம் ஏவாளின் அந்தகால ”நிஜமாய்”
இந்தக்கால உருவஅழகியை
இறைவன் கொடுத்த அற்புதபெண்ணழகு
கலைகளுக்காக பலவிதத்தில் காவுகொடுக்கப்படுகிறது
கற்புஎன்ற மானமே காற்றில் பறக்கவிடப்படுகிறது..
http://niroodai.blogspot.com/search?updated-max=2009-10-17T18:35:00%2B04:00&max-results=4
பெண்ணடிமை விலங்குடைக்கும் முயற்சியில் புதுமைப் பெண்களாகத் தம்மை உணர்ந்தவர்களின் உரிமைக் குரலாக இக் கவிதைகள் ஒலித்து நின்றமையினையும் காணக்கூடியதாக உள்ளது. சாதாரணமாக பெண்களின் ஓவியத்தைப் நோக்காமால்: “கலை கலைக்காக” என்ற கொள்ளைப் பிடிப்புள்ளவர்கள் நாகரிகத்தைப் பழித்துரைப்பதாகவும் கலைக்காக பெண்களை இழித்து கவிதை படைப்பதாகவும் ஆதங்கப்படும் ஒரு சராசரி மனிதனின் உணர்வுநிலையினை இக்கவிதையில் பார்க்க முடிகின்றது.
தொன்மம் என்பது ஆங்கிலத்தில் ‘மித்’ (myth) என்ற சொல்லினால் அழைக்கப்படும். தொன்மைக் காலத்து இதிகாசங்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்ட பாத்திரங்களைக் கவிதையில் எழுதி அவைகளின் செயற்பாடுகள் மூலம் தான் சொல்ல வந்த கருத்தினைக் கவிஞன் உணர்த்துவதனால் அது தொன்மம் எனப்பட்டது. கவிதைகள் நயமுடையனவாக அமைந்திடவும் சிக்கல்களை விளக்கித் தெளிவு பெறவும் தொன்மக் கூறுகள் பயன்பட்டன. தொன்மங்களின் மூலம் கவிதைகள் படைக்கப்படுகின்ற போது அவை படிமமாக, குறியீடாக வந்து சூழலுக்குத் தக்கவாறு சுருங்கச் சொல்லி விரிய வைக்கின்றன.
இத்தகைய தொன்மக் கூறின் சாயலையும் இக்கவிதையில் உணரமுடிந்தமை மேலும் சிறப்பான விடயமாகும். ஆதாம் - ஏவாளை நம் மனக்கண்முன் நிறுத்தி அவர்களின் அந்தக்கால நிஜமாய் இந்தக்கால உருவ ஓவியத்தைக் கூறி மனஞ் சலிப்பதாகவும் இக் கவிதை அமைகின்றது.
கலகலப்ரியா
கற்பனையாலும் உணர்ச்சியாலும் உந்தப்பட்டுக் கவிதைகள் பிறக்கின்றன. உலக மொழிகள் எல்லாவற்றிலும் கவிதைகள் உண்டு. கவிதைக்கு மூல காரணமாகக் கற்பனை அமைகின்றது. கற்பனை பொங்கிப் பிரவாகித்து முட்டி மோதுகின்ற போது அதனை வடிவமாக வெளிக்காட்டி ‘கவிதை’ என்ற பெயர் சூட்டி அழகு பார்க்க மொழி துணை செய்கின்றது. மனிதர்கள் எல்லோருமே கற்பனையில் சிறந்தவர்கள். ஆனால் எல்லோரும் கவிதை எழுதுவோரல்லர். அதேபோல் கற்பனையுடன் எழுதப்படுபவை எல்லாமே கவிதை ஆகிவிடுவதுமில்லை.
கவிஞன் சொல்ல நினைக்கும் கருப்பொருளுக்குத் தகுந்தவாறு அதன் “வடிவம்” இருக்க வேண்டும்.
கருப்பொருளின் அனைத்து உணர்ச்சிகளுக்கும் இடந்தந்து நிற்பதாக அதன் வடிவம் அமைந்திருத்தல் அவசியம். கவிஞன் சொல்ல நினைக்கும் உணர்ச்சிக்கு நேர்மாறாக வடிவ வார்ப்பு அமைந்து விடக் கூடாது. கவிஞன் கூறுவதை அவன் சொல்ல நினைக்கும் மொழியில்தான் சொல்ல முடியும். மற்ற வழியாகச் சொல்ல முடியாது.
அவனுடைய கவிதைகளில் காதல், அவலம், சினம், இன்பம், துன்பம், அழுகை, சிரிப்பு, போர், வீரம் இன்னும் அவனுடன் என்னவெல்லாம் உள்ளனவேர் அவன் எதையெல்லாம் சொல்ல நினைக்கிறானேர் அவையெல்லாம் அவனுடைய உணர்வுகள் பொங்கித் ததும்புகின்றபோது கவிதைகளாக உருவாகி அவனது உணர்வுக்கு ஏற்ப கவிதைகளும் அழும்; விழும்; பாடும்; சிரிக்கும். இவ்வாறு எதையெல்லாம் கவிஞன் சொல்ல நினைக்கின்றானோ அதையெல்லாம் அவனது கவிதை செய்து முடித்துவிடும்.
அமெரிக்க நாட்டவன்..
அந்தமான்..
எகிப்து..
ஐரோப்பா..
அறிமுகங்களிடையே..
யார் நீ..
இதயத்தின்..
ஆழத்திலிருந்து..
அடையாளப் படுத்திச் சொல்..
என்றார்கள்..
சற்றும் யோசிக்காமல்..
தமிழச்சி..
என்றேன்..
நீ காயப் பட்டிருக்கிறாய்..
நாட்டைத் தவிர்க்கிறாய்..
இல்லை...
என்ன இல்லை எனக்கு..
ஐரோப்பாவின் அழகு தேசம்..
எனை அங்கீகரித்திருக்கிறது..
பிரஜா உரிமை..
அடையாள அட்டை..
கடவுச் சீட்டு..
இங்கே பிறந்தாயா..
மற்றவர் தடுமாறும்..
மொழித் திறன்...
ஆனாலும்..
அட்டையொன்று..
என் அடையாளமன்று..
இம்மொழி என்..
செம்மொழியன்று..
இந்நாடு..
என் நாடன்று..
என்...
தந்தையும் தாயும்..
மகிழ்ந்து குலவிய..
மண்..
நான் பிறந்த மண்..
தவழ்ந்த மண்..
தழும்பேறி..
அடையாளம்..
அற்றிருக்கையில்..
என்..
உடன் பிறப்பின்..
எஞ்சிய எலும்புகள்..
சிதைந்து..
சுண்ணாம்புப்..
பாறையாகி...
அதுவும்..
உதிர்க்கப்பட்டு..
அதை வைத்தே..
துருப்பிடித்திருக்கும்..
தூண்களுக்கு...
வெள்ளை பூசி...
ஓ.. !
மறந்து விட்டேன்..
சில...
நேரங்களில் நீவிரும்..
நியாயம் பேசுகிறீர்..
ஆம்.. நான்..
காயப் பட்டிருக்கிறேன்..
தயவு செய்து..
மன்னிக்கவும்..
வெண் சுண்ணாம்பு..
நானென்று..
என்னை நான்..
அடையாளம் காட்ட..
என்னால் இயலாது..
சுட்ட மண்..
ஒட்டாது...
என்..
தோற்றம்..
நிகழ்ந்து விட்டது..
வசிப்பிடம்..
பதிவு செய்யப்பட்டது..
மறைவு..
நிச்சயிக்கப்பட்டது..
நீறாக்கும் இடம் கூட..
ஆனால் அஃதை..
அறிந்து கொள்ளும்..
ஆற்றல் எனக்கில்லை..
நிச்சயமானது..
நீக்கமற..
நிறைந்திருக்கும்..
நிலையான..
தமிழ் என்..
தாய் மொழி...
அதுவே..
என்..
அழியாத..
அடையாளம்..
http://kalakalapriya.blogspot.com/2009/10/blog-post_9449.html
வளர்ச்சியடைகின்ற எல்லாம் மாறும் என்ற தத்துவத்துக்கேற்ப கவிதையும் காலச் சூழலில் மாறும் தன்மை கொண்டமைந்தது.
புகலிடத்தின் புதிய சூழல் தரும் அனுபவங்களின் வெளிப்பாடாகவும், மொழி, பண்பாடு, அரசியல், வாழ்வியல்சார் தவிப்புக்களாகவும், தம்மைத் தமக்குள்ளேயே தேடும் சுயத்தைப் புதுப்பிக்கும் முயற்சியாகவும், பிரிவாற்றாமையினை வெளிப்படுத்தும் படைப்பாகவும் என பல கோணத்தில் இக்கவிதை முனைப்புப் பெறுகின்றது. குறிப்பாக வேறுபட்ட சூழலில் அகப்பட்டுக் கொண்ட மனிதனின் தவிப்பை வெளிப்படுத்துதல், இழந்துவிட்ட தாய்நாட்டின் பற்றை நிலை நிறுத்துதல் என்பன இக் கவிதையின் முக்கிய குறிக்கோளாக இருந்திருக்கவேண்டும்.
புலம்பெயர்ந்த கவிஞர்கள் அனைவரும் சுமூகமான நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயரவில்லை. அவர்கள் ஏதோ ஒருவிதத்தில் வாழ்வுரிமை மறுக்கப்பட்டவர்களாக, அல்லது எதிர்த்து வாழப் பயந்தவர்களாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள் என்பது முக்கியமான விடயமாக மேலெழுகின்றது. எந்தவொரு படைப்பாளன் மீதும் சூழ்நிலை தாக்கத்தை ஏற்படுத்துவதியல்பு. இதனடிப்படையில் புலம்பெயர்ந்தோரின் வலிகளை வரிகளாக்கித் தந்தமை சிறப்பானது.
புலம்பெயர்ந்த நாடுகளின் வேறுபட்ட காலநிலை, தரைத்தோற்றம், சுற்றாடல், தாவரம், விலங்குகள், பறவைகள் என்பன எமது கவிஞர்களின் கற்பனையைப் பெரிதும் கவர்கின்றன. வித்தியாசமான கலாசாரம், வேறுபட்ட மொழிகளுடன் அன்றாடம் ஊடாடுகின்றனர்.
இதனால் புதிய உணர்வுகளையும் அனுபவங்களையும் தமது கவிதைகளில் வரையறுக்கின்றனர். அகதி உணர்வுநிலை, இன - நிறவெறித் தாக்கம், புதிய காலநிலை, தாய்நாடு பற்றிய ஏக்கம், பிரிவுத்துயர், தகுதிக்கேற்ற தொழிலின்மை, வீசாச் சிக்கல், பண்பாட்டுச் சிக்கல், வேலைப்பளு, அந்நிய மனோநிலை உணர்வு, எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும், பிரயாண அவலம் போன்ற எண்ணற்ற பாடுபொருட்கள் முனைப்புப் பெற்றாலும் இந்தக் கவிதையில் தன்னின உணர்வுநிலை மேலோங்கக் காணலாம். அதன் விளைவாகவே “தமிழ், தமிழச்சி” என்ற சொற்பிரயோகங்கள் அமைந்து விளங்கின போலும். கவிதையின் ஒவ்வொரு வரியிலும் தமிழ் என்ற இனமான உணர்வு மேலெழுந்து கவிதை முழுவதும் இழையோடி கவிதைக்கு அழகு சேர்த்த பண்பினையும் காணமுடிகின்றது.
இன்றைய கவிதை
சொந்த மண்ணின் சுகமதனை எந்த மண்ணும் தந்திடாது என்ற உண்மையினை உணர வைக்கும் கவிவரிகள் இவை. எமது ஆழ்மனதில் உள்ள நிறைவேறாத ஆசைகளும் கற்பனைகளும் கனவுகளாக மேலெழுகின்றன. நீண்ட காலமாக ஊரைப் பிரிந்த ஏக்கத்தில் புலம்பெயர் தேசத்தில் வசித்துவரும் ஒருவனின் கனவிலும் கூட தனது கிராமம் பற்றிய சிந்தனை வந்து போவதென்பது இன்று மிகவும் சாதாரண விடயம்.
பள்ளத்தாக்கினின்றும் சுழன்று எழும்
மேகப்புகை போலும் என்
எண்ணங்கள்....
கள் உண்போர்
களைப்பாறுதலும்
காய் நகர்த்தி
சூதாடுதலும்
பின்னிரவின்
நிழல் காரியங்களும்
அவ்வப்போது நிகழ்ந்தாலும்...
காய்ந்த காக்கை எச்சம்
கண்களில் சீற்றம்
கை உடைந்த ஐய்யனார் சிலை!
வருடங்களாகியும்
வாய் மூடாமல்
வாசலில் நிற்கும்
குதிரைகள் மட்டும்
துணையாய்.. ..
கேட்பாரற்றுக்கிடக்கும்
ஊரின் எல்லையில்!
வாழ்க்கை நீரின் வட்டத்தில்
வளைந்த தென்னையினின்றும்
குதித்து மறைந்த சிறுவர்கள்...
வெற்றிலை இடிக்கும்
கிழவியின் வயோதிகம்
உணர்த்தும்
காய்ந்த அரசமரச் சருகுகள்...
இயல்பு மறந்து
புரிதலற்றுப்போகும்
பொய் முகங்களின்
வாழ்க்கை
கனவுகளின் சுவாசத்தில்...
ஆசுவாசம் தொலைத்து
சுயம் தேயும்
அவசர வாழ்க்கையிலும்
அவ்வப்போது நிகழும்
இத்தகைய அற்புத
கணங்கள்!
http://inkavi.blogspot.com/2009/10/blog-post_14.html
இங்கு குடும்ப உறவுகளைப் பிரிந்த ஏக்கம் வெளிப்படுத்தப் பட்டாலும், தன் தேசம் எரிகின்ற போதும் அது எழுகின்ற போதும் தானும் ஒரு பங்காளியாக இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தொக்கு நிற்பதையும் உணர முடிகின்றது.
பொதுவாக ஒரு நாடென்பது இயற்கை அம்சங்கள் மட்டும் நிறைந்ததல்ல. அதற்கும் மேலாக உறவுகளின் பிணைப்பினால் உருவான குடும்பம், குடும்பங்கள் கூடிக் கட்டிய சமூகம், சமூகங்களின் திரட்சியினால் உருவான சமுதாயம், சமுதாயத்தின் கூட்டிலான நகரம், நகரங்களின் கூட்டிலான நாடு என ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்து விரிந்து செல்லும் இயல்புடையது. தமிழர்கள் பொதுவாகவே கட்டுப்பாடுடைய கலாசாரத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள், அதிலேயே ஊறித் திளைத்தவர்கள். சென்ற இடமெல்லாம் தம் பண்பாட்டை, நாகரிகத்தை நிலைநிறுத்த முனைபவர்கள் என்பதையும், தம் மண்ணின்மீது இடையறாத பற்றுடையவர்கள் என்பதையும் மேற்கண்ட கவிதை வரிகள் அச்சொட்டாகப் பிரதிபலித்து நிற்கக்காணலாம்.
படிமம் படைப்பு மேதையின் அடையாளமாகக் கருதப்படுகின்றது. கருத்துக்களை ஆழமாகச் சொல்வதற்குப் பயன்படும் ஒரு கூர்மையான ஆயுதமாகவும் இது பயன்படும். வடித்துக் காய்ச்சிய சிக்கனச் சொற்களின் வண்ணக் கலவையாய் சிறகு விரிக்கின்ற மின்னற் பொழுது படிமமாகும். இங்கு இயல்பாகப் படிமங்களை அமைத்து (வலிந்து திணிக்காமல்) கவிதை சொல்லப்பட்ட விதம் பாராட்டுதற்குரியதாகும். “வாழ்க்கை நீரின் வட்டம்” “கையுடைந்த ஐயனார் சிலை” “காய்ந்த அரசமரச் சருகுகள்” என்பன குறிப்பிட்டுச் சொல்லக்கூடியன. மேகப்புகை போல எண்ணங்களும் நிலையற்றவை, வாழ்வும் நிலையற்றது, எல்லாம் பொய்மையின் சின்னங்கள் என்பதாகச் சொல்லி முடிகிறது கவிதை.
நன்றி
நிறைகளை
மனதுள் பூட்டுங்கள்
குறைகளை
எடுத்துச் சொல்லுங்கள்
மகிழ்வுடன் ஏற்று
மனம் நிறைவடைவேன்
------ ------ ------
நிறைகளை
மனதுள் பூட்டுங்கள்
குறைகளை
எடுத்துச் சொல்லுங்கள்
மகிழ்வுடன் ஏற்று
மனம் நிறைவடைவேன்
------ ------ ------
மீ த பர்ஸ்ட்
பதிலளிநீக்குஅருமை தியா...
பதிலளிநீக்குவசந்தும் நேசமித்ரனும் மட்டுமே எனக்கு பரிச்சயமானவர்கள். மற்றவர்களின் கவிதைகளும் அருமை....
தொடருங்கள்.
ada...! ty thiya..! nithanama padichu.. appuram pinnoottam poduren... ! ennoda peru.. kalakalapriya.. kalagapriyaa akkitteenga..=))..
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி தியா
பதிலளிநீக்குஇந்தகவிதை நான் மிகவும் நேசிக்கும் ஒரு உறவின் வலியறிந்து எழுதியது...
நேசமித்ரன் ரொம்ப பிடிக்கும் அது அவருக்கே தெரியும் ஆனால் பல கவிதைகள் என் மரமண்டைக்கு புரியாததால் பின்னூட்டம் போடாமலே வந்துவிடுவேன் இதுவும் அவருக்கு தெரியும் ஆனால் அனைத்து கவிதைகளையும் மூன்று நான்குமுறைக்கு மேல் வாசிப்பது பட்டும் நிஜம் இது அவரறியவாய்ப்பில்லை..அவர் வலையுலகை தவிர்த்து எங்கோ ஒரு சிறப்பான இடம் நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பதும் நிஜம்,
*******************************
கலகலபிரியா
என் உடன்பிறப்பு சும்மா எதுவும் எழுதுவதில்லை எல்லாமே சொற்கள் வார்த்தைகள் அனைத்தும் வாசிக்கும் நம் அனைவரையும் புரட்டிப்போட்டுவிடும் ஆளுமைத்திறன் மிக்கவள்.கவிதையையும் தாண்டி நகைச்சுவையிலும் கொடிகட்டி பறக்கிறாள்....
மலிக்கா
சகோதரா என்று பாசமழை பொழிவது போல்..கவிதை மழையும் பொழிந்துகொண்டிருக்காங்க இந்த பெங்களூர் பைங்கிளி...
மற்றபடி தங்களின் இந்த கவனிப்புதிறன் வாசிப்பின் இஷ்டம் தாங்கள் எவ்வளவு கவிதையை விரும்பி சுவாசிக்கிறீர்கள் என்று தெரிகிறது...
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்..
என்ன சொல்வதென்று தெரியவில்லை தியா, படித்ததும் என்னை மறந்து அமர்ந்திருக்கிறேன்,
பதிலளிநீக்குகவிதைகளுக்குள் இத்தனை இருக்கிறதா,
மனம் வாடுவதை கவியில் வடிக்கவேண்டும்
உலகில் நடப்பதை கவியில் உணர்த்தவேண்டும்.
சிலநேரங்களில் வெதும்பித்ததும்புவதையும் கவியில் கொட்டவேண்டும் என்ற நோக்கில்தான் கவிதை எழுதத்தொடங்கினேன்..
உங்களின் இந்த ஆய்வு மிகவும் பிடித்திருக்கிறது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொருவிதமான பரிமாணங்கள் அதை அவரவரின் உணர்வுகளுக்கு உணர்ச்சிகளுக்கேற்ப வெளியிடுகிறார்கள்..
அதை உற்றுநோக்கி அதற்கான விளக்கங்களும் கொடுப்பதென்பது நீங்கள் எந்தளவுக்கு மற்றவரின் எழுத்துக்களை உற்றுநோக்கியிருப்பீர்கள் என்பது புரிகிறது..
அதில் என் எழுத்துக்களையும் ஆராய்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி சந்தோஷம் தியா..
[மலிக்கா வெகுகவனமாக எழுது உன்னையும் கவனிக்க நிறைய கண்களிருக்கு எது எனக்கே நான்]
அப்புறம். பிரியமான சகோதரா, நான் பெங்களூர் பைங்கிளின்னு யாருப்பா சொன்னது??????
மற்ற கவிஞர்களின் கவிதைகளும் வெகு அருமை..
மீண்டும் நன்றி தியா..
தியா!
பதிலளிநீக்குஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை, தோழரே!
கவிதைக்குள் 'புகுந்து' எழுந்திருக்கிறீர்கள் ஐயா!
ஏனைய கவிதைளுடன் எங்களையும் சேர்த்தது...
தங்களுடைய பெருந்தன்மையைக் காட்டுது!
ஊக்கத்திற்கு மிக்க நன்றி!
-இன்றைய கவிதை நண்பர்கள்
அருமையான கவிதைத் தேர்வுகள். கலகலப்ரியா பெயரை திருத்துங்கள் தியா! கலகப்ரியாவாகியிருக்கிறது:)
பதிலளிநீக்குபல படிக்காத கவிதைகளைத் தங்களின் இடுகையின் வாயிலாக படிக்க முடிந்தது. மிக்க நன்றிங்க
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குrajan RADHAMANALAN கூறியது...
மீ த பர்ஸ்ட்
November 20, 2009 2:21 PM
//
நன்றி rajan RADHAMANALAN
இந்த வரிசையில் வானம் வெளித்தபின்னும் ஹேமா பெயர் இல்லாதது ஏன்?
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குசுசி கூறியது...
அருமை தியா...
வசந்தும் நேசமித்ரனும் மட்டுமே எனக்கு பரிச்சயமானவர்கள். மற்றவர்களின் கவிதைகளும் அருமை....
தொடருங்கள்.
November 20, 2009 3:01 பம்
//
நன்றி சுசி உங்களின் வாசிப்புக்கும் பதிலுக்கும் நானும் பலரைத் தவற விட்டிருக்கலாம் ஏனெனில் இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.
//
பதிலளிநீக்குகலகலப்ரியா கூறியது...
ada...! ty thiya..! nithanama padichu.. appuram pinnoottam poduren... ! ennoda peru.. kalakalapriya.. kalagapriyaa akkitteenga..=))..
November 20, 2009 3:01 பம்
//
கலகலப்ரியா நீங்கள் படித்து பார்த்தபின் பின்னூட்டமிடுங்கள் மறக்க வேண்டாம்.
அறிமுகத்திற்கு நன்றி.சிலர் எனக்குப் புதியவர்கள்.
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குகலகலப்ரியா கூறியது...
ada...! ty thiya..! nithanama padichu.. appuram pinnoottam poduren... ! ennoda peru.. kalakalapriya.. kalagapriyaa akkitteenga..=))..
November 20, 2009 3:01 பம்
//
கலகலப்ரியா நீங்கள் படித்து பார்த்தபின் பின்னூட்டமிடுங்கள் மறக்க வேண்டாம்.
உங்களின் பெயரும் சரியாக பதிவுசெய்துள்ளேன்
//
பதிலளிநீக்குபிரியமுடன்...வசந்த்கூறியது...
மிக்க மகிழ்ச்சி தியா
இந்தகவிதை நான் மிகவும் நேசிக்கும் ஒரு உறவின் வலியறிந்து எழுதியது...
நேசமித்ரன் ரொம்ப பிடிக்கும் அது அவருக்கே தெரியும் ஆனால் பல கவிதைகள் என் மரமண்டைக்கு புரியாததால் பின்னூட்டம் போடாமலே வந்துவிடுவேன் இதுவும் அவருக்கு தெரியும் ஆனால் அனைத்து கவிதைகளையும் மூன்று நான்குமுறைக்கு மேல் வாசிப்பது பட்டும் நிஜம் இது அவரறியவாய்ப்பில்லை..அவர் வலையுலகை தவிர்த்து எங்கோ ஒரு சிறப்பான இடம் நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பதும் நிஜம்,
*******************************
கலகலபிரியா
என் உடன்பிறப்பு சும்மா எதுவும் எழுதுவதில்லை எல்லாமே சொற்கள் வார்த்தைகள் அனைத்தும் வாசிக்கும் நம் அனைவரையும் புரட்டிப்போட்டுவிடும் ஆளுமைத்திறன் மிக்கவள்.கவிதையையும் தாண்டி நகைச்சுவையிலும் கொடிகட்டி பறக்கிறாள்....
மலிக்கா
சகோதரா என்று பாசமழை பொழிவது போல்..கவிதை மழையும் பொழிந்துகொண்டிருக்காங்க இந்த பெங்களூர் பைங்கிளி...
November 20, 2009 3:18 PM
//
நல்ல பின்னூட்டம் இட்டுள்ளீர்கள் நன்றி வசந்த்
பிரியமுடன்...வசந்த்கூறியது...
பதிலளிநீக்குமற்றபடி தங்களின் இந்த கவனிப்புதிறன் வாசிப்பின் இஷ்டம் தாங்கள் எவ்வளவு கவிதையை விரும்பி சுவாசிக்கிறீர்கள் என்று தெரிகிறது...
வாழ்க வளமுடன்..
November 20, 2009 3:20 பம்
//
உங்களின் வாழ்த்துக்கும் நன்றி
பொதுவாக நான் எதையும் தேடித் திரிந்து படிக்க விரும்புவேன் அதன் விளைவுதான் இது
எனது பட்டியலில் இன்னும் பல பெயர்கள் உள்ளன அவர்களின் ஆக்கங்கள் பற்றியும் நேரம் கிடைக்கும்போது எழுதுவேன்
அன்புடன் மலிக்கா கூறியது...
பதிலளிநீக்குஎன்ன சொல்வதென்று தெரியவில்லை தியா, படித்ததும் என்னை மறந்து அமர்ந்திருக்கிறேன்,
கவிதைகளுக்குள் இத்தனை இருக்கிறதா,
மனம் வாடுவதை கவியில் வடிக்கவேண்டும்
உலகில் நடப்பதை கவியில் உணர்த்தவேண்டும்.
சிலநேரங்களில் வெதும்பித்ததும்புவதையும் கவியில் கொட்டவேண்டும் என்ற நோக்கில்தான் கவிதை எழுதத்தொடங்கினேன்..
உங்களின் இந்த ஆய்வு மிகவும் பிடித்திருக்கிறது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொருவிதமான பரிமாணங்கள் அதை அவரவரின் உணர்வுகளுக்கு உணர்ச்சிகளுக்கேற்ப வெளியிடுகிறார்கள்..
அதை உற்றுநோக்கி அதற்கான விளக்கங்களும் கொடுப்பதென்பது நீங்கள் எந்தளவுக்கு மற்றவரின் எழுத்துக்களை உற்றுநோக்கியிருப்பீர்கள் என்பது புரிகிறது..
அதில் என் எழுத்துக்களையும் ஆராய்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி சந்தோஷம் தியா..
[மலிக்கா வெகுகவனமாக எழுது உன்னையும் கவனிக்க நிறைய கண்களிருக்கு எது எனக்கே நான்]
அப்புறம். பிரியமான சகோதரா, நான் பெங்களூர் பைங்கிளின்னு யாருப்பா சொன்னது??????
மற்ற கவிஞர்களின் கவிதைகளும் வெகு அருமை..
மீண்டும் நன்றி தியா..
November 20, 2009 4:00 பம்
உங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி மலிக்கா
//
பதிலளிநீக்குஇன்றைய கவிதை கூறியது...
தியா!
என்ன சொல்வதென்றே தெரியவில்லை, தோழரே!
கவிதைக்குள் 'புகுந்து' எழுந்திருக்கிறீர்கள் ஐயா!
ஏனைய கவிதைளுடன் எங்களையும் சேர்த்தது...
தங்களுடைய பெருந்தன்மையைக் காட்டுது!
ஊக்கத்திற்கு மிக்க நன்றி!
-இன்றைய கவிதை நண்பர்கள்
November 20, 2009 4:30 பம்
//
இன்றைய கவிதை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
இதில் ஒன்றும் பெருந் தன்மை இல்லை
இது ஒருவகையான தேடல் மட்டுமே
//
பதிலளிநீக்குவானம்பாடிகள் கூறியது...
அருமையான கவிதைத் தேர்வுகள். கலகலப்ரியா பெயரை திருத்துங்கள் தியா! கலகப்ரியாவாகியிருக்கிறது:)
November 20, 2009 5:39 பம்
//
வானம்பாடிகள் உங்களின் கருத்துக்கு நன்றி கலகலப்ரியாவின் பெயர் திருத்தப்பட்டு விட்டது
//
பதிலளிநீக்குதிகழ் கூறியது...
பல படிக்காத கவிதைகளைத் தங்களின் இடுகையின் வாயிலாக படிக்க முடிந்தது. மிக்க நன்றிங்க
November 20, 2009 5:58 பம்
//
திகழ் உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி
//
பதிலளிநீக்குஸ்ரீராம். கூறியது...
இந்த வரிசையில் வானம் வெளித்தபின்னும் ஹேமா பெயர் இல்லாதது ஏன்?
November 20, 2009 7:46 பம்
//
ஸ்ரீராம் நீங்கள் சொல்வது சரிதான்
ஹேமாவின் நிறைய கவிதைகள் படித்துள்ளேன் நான் ஐவருடன் மட்டுப்படுத்தியதால் குறிப்பிடவில்லை மற்றப்படி ஒன்றுமில்லை
நான் யாரையும் முதன்மைப் படுத்தவில்லை இனிவரும் பதிவுகளில் இன்னும் சிலரின் படைப்புகள் பற்றி எழுதுவேன்
//
பதிலளிநீக்குஸ்ரீ கூறியது...
அறிமுகத்திற்கு நன்றி.சிலர் எனக்குப் புதியவர்கள்.
November 20, 2009 7:51 பம்
//
நன்றி ஸ்ரீ
மிக நுட்பமான உங்கள் பார்வையும்
பதிலளிநீக்குதிரண்ட மொழியறிவும் ஆய்வுத்திறனும் மிளிர தாங்கள் வடித்திருக்கும் இந்த இடுகை மிக நுண்ணிய செய்திகளை தந்தபடி இருக்கிறது
இந்த இடுகையில் எனது கவிதைகளும் இடம் பெற்றது குறித்து நன்றிகள்
சக கவிஞர்கள் அனைவரையும் வாசித்து வருகிறேன்
உஙகளின் நேயத்திற்கு மீண்டும் நன்றிகள்
தியா அருமையான தேர்வுக் கவிதைத் தொகுப்பாளர்கள்.எனக்கு எல்லோருமே அறிமுகமானவர்கள்.
பதிலளிநீக்குநேசனின் கவிதைகளோடு நான் படும் பாடு அப்பப்பா !
வசந்தின் நகைச்சுவையோடு கூடிய சிந்திக்க வைக்கும் பதிவுகளுக்குள் இந்தக் கவிதை சிகரமாகிறது.
ப்ரியாவின் கவிதைகள் வித்தியாசமான ஓட்டம்.
மல்லிக்கா,இன்றைய கவிதைகள் கவிதைகளும் சமூகம் காதலோடு கலந்து ரசிக்கக்கூடியவையே.
//
பதிலளிநீக்குநேசமித்ரன் கூறியது...
மிக நுட்பமான உங்கள் பார்வையும்
திரண்ட மொழியறிவும் ஆய்வுத்திறனும் மிளிர தாங்கள் வடித்திருக்கும் இந்த இடுகை மிக நுண்ணிய செய்திகளை தந்தபடி இருக்கிறது
இந்த இடுகையில் எனது கவிதைகளும் இடம் பெற்றது குறித்து நன்றிகள்
சக கவிஞர்கள் அனைவரையும் வாசித்து வருகிறேன்
உஙகளின் நேயத்திற்கு மீண்டும் நன்றிகள்
November 20, 2009 9:44 பம்
//
உங்களின் பாராட்டுடன் கூடிய பின்னூட்டலுக்கு நன்றி
//
பதிலளிநீக்குஹேமா கூறியது...
தியா அருமையான தேர்வுக் கவிதைத் தொகுப்பாளர்கள்.எனக்கு எல்லோருமே அறிமுகமானவர்கள்.
நேசனின் கவிதைகளோடு நான் படும் பாடு அப்பப்பா !
வசந்தின் நகைச்சுவையோடு கூடிய சிந்திக்க வைக்கும் பதிவுகளுக்குள் இந்தக் கவிதை சிகரமாகிறது.
ப்ரியாவின் கவிதைகள் வித்தியாசமான ஓட்டம்.
மல்லிக்கா,இன்றைய கவிதைகள் கவிதைகளும் சமூகம் காதலோடு கலந்து ரசிக்கக்கூடியவையே.
November 20, 2009 10:18 PM
//
நன்றி ஹேமா உங்களின் பதிலுக்கு
உங்களின் கவிதைகளையும் நேசமித்ரனின் கவிதைகளையும் ஒன்றாக பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்
விரைவில் உங்களின் கவிதைகள் பற்றியும் எழுதுவேன்
பக்கத்து ஊரைச் சேர்ந்த (கோண்டாவில்) உங்களின் கவிதையையும் நான் விரும்பி படிக்கிறனான்.
நாடு விட்டு சென்றாலும் நாடுபற்றிய ஏக்கம் உங்களின் கவிதைகளில் இருந்து உணர முடிகிறது
தியா... வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொள்கின்றன..! அருமையான ஆய்வுக் கட்டுரை...! என்னுடைய கவிதையை படித்து விமர்சித்தமைக்கு மிக்க மிக்க நன்றி..!
பதிலளிநீக்குவசந்தின் விளையாட்டான ஆராய்ச்சிப் பதிவுகளுக்கு நடுவே... சிதறிக் கிடக்கும் முத்துக்களில்.. இதுவும் ஒன்று..! :)
நேசமித்திரன் அவர்களின் கவிதைகள்... மிகவும் ஆழமானவை... சிலவற்றை மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறேன்..! ஆனாலும் விடாமல் படித்துக் கொண்டிருக்கிறேன்..!
மல்லிகா கவிதைகள் ஒன்றிரண்டு படித்திருப்பேன்...! இன்கவி அறிமுகமில்லை... அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி..! அருமையான எழுத்துகள்...!
//இவங்க ரொம்ப நல்லவங்க//
நீங்க ரொம்ப நல்லவங்க... =).. மெச்சுறதுக்கு என் கிட்ட வார்த்தைகள் இல்லை...!
உங்களின் பதிவும்... வசந்தின் பின்னூட்டமும்... இதயத்தை நெகிழச் செய்து... கண்ணின் ஓரங்களைக் கரிக்க வைக்கின்றன...! ஹேமாவுக்கும் எனது நன்றிகள்..!
நல்ல தொகுப்பு பகிர்வுக்கு நன்றிகள்
பதிலளிநீக்குகவிதைகளின் அணிவகுப்பு...அருமை தியா...
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு,ஆய்வு தியா.
பதிலளிநீக்குவசந்த் நேசமித்திரன் கலகலப்பிரியா மலிக்கா இன்றைய கவிதைகள் பற்றி மிக அருமையாக தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள் தியா
பதிலளிநீக்குஉங்களை ஒரு தொடருக்கு அழைத்து இருக்கிறேன் நண்பரே
பதிலளிநீக்குபிடித்த பத்தும் பிடிக்காத பத்தும்
தொடருங்கள்
வாழ்த்துக்கள்
சந்ரு கூறியது...
பதிலளிநீக்குநல்ல தொகுப்பு பகிர்வுக்கு நன்றிகள்
November 21, 2009 12:27 AM
//
சந்ரு நன்றிகள்
புலவன் புலிகேசி கூறியது...
பதிலளிநீக்குகவிதைகளின் அணிவகுப்பு...அருமை தியா...
November 21, 2009 10:53 அம
//
புலவன் புலிகேசி உங்களின் வாழ்த்துக்கும் நன்றி
//
பதிலளிநீக்குகலகலப்ரியா கூறியது...
தியா... வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொள்கின்றன..! அருமையான ஆய்வுக் கட்டுரை...! என்னுடைய கவிதையை படித்து விமர்சித்தமைக்கு மிக்க மிக்க நன்றி..!
வசந்தின் விளையாட்டான ஆராய்ச்சிப் பதிவுகளுக்கு நடுவே... சிதறிக் கிடக்கும் முத்துக்களில்.. இதுவும் ஒன்று..! :)
நேசமித்திரன் அவர்களின் கவிதைகள்... மிகவும் ஆழமானவை... சிலவற்றை மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறேன்..! ஆனாலும் விடாமல் படித்துக் கொண்டிருக்கிறேன்..!
மல்லிகா கவிதைகள் ஒன்றிரண்டு படித்திருப்பேன்...! இன்கவி அறிமுகமில்லை... அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி..! அருமையான எழுத்துகள்...!
//இவங்க ரொம்ப நல்லவங்க//
நீங்க ரொம்ப நல்லவங்க... =).. மெச்சுறதுக்கு என் கிட்ட வார்த்தைகள் இல்லை...!
உங்களின் பதிவும்... வசந்தின் பின்னூட்டமும்... இதயத்தை நெகிழச் செய்து... கண்ணின் ஓரங்களைக் கரிக்க வைக்கின்றன...! ஹேமாவுக்கும் எனது நன்றிகள்..!
November 21, 2009 12:03 அம
//
நன்றி கலகலப்ரியா உங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் என் மனப்பூர்வமான நன்றி
பா.ராஜாராம் கூறியது...
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு,ஆய்வு தியா.
November 21, 2009 5:00 பம்
//
நன்றி பா.ரா
thenammailakshmanan கூறியது...
பதிலளிநீக்குவசந்த் நேசமித்திரன் கலகலப்பிரியா மலிக்கா இன்றைய கவிதைகள் பற்றி மிக அருமையாக தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள் தியா
November 21, 2009 8:35 பம்
//
நன்றிங்க
thenammailakshmanan கூறியது...
பதிலளிநீக்குஉங்களை ஒரு தொடருக்கு அழைத்து இருக்கிறேன் நண்பரே
பிடித்த பத்தும் பிடிக்காத பத்தும்
தொடருங்கள்
வாழ்த்துக்கள்
November 21, 2009 8:36 பம்
//
அழைத்ததுக்கு மிக்க நன்றி நான் முன்னரே எனது விருப்பத் தேர்வுகளை சொல்லிவிட்டேன்
http://theyaa.blogspot.com/2009/11/blog-post_04.html
இருந்தாலும் அழைப்புக்கு நன்றி
அறிமுகங்கள் சுவாரஸியமானவை. வானிலை அறிக்கை போன்ற மர்மமும் ஆவலும் கொண்டவை. நீங்கள் குறிப்பிட்ட மூவர் எனக்கு புதிது. ஐ நோ நேசன் ஒன்லி!
பதிலளிநீக்கு-
தியாவின் பேனா.. நல்லாயிருக்கு பேரு!!!
ஆனா நீங்க தியாவின் கீபோர்டில் இருந்து அதிரும் அதிர்வுகள் என்றல்லவா சொல்லணும்??
ம்?
ஜெகநாதன் கூறியது...
பதிலளிநீக்குஅறிமுகங்கள் சுவாரஸியமானவை. வானிலை அறிக்கை போன்ற மர்மமும் ஆவலும் கொண்டவை. நீங்கள் குறிப்பிட்ட மூவர் எனக்கு புதிது. ஐ நோ நேசன் ஒன்லி!
-
தியாவின் பேனா.. நல்லாயிருக்கு பேரு!!!
ஆனா நீங்க தியாவின் கீபோர்டில் இருந்து அதிரும் அதிர்வுகள் என்றல்லவா சொல்லணும்??
ம்?
November 22, 2009 1:38 அம
//
நன்றி ஜெகநாதன் உங்களின் பொன்னான பதிலுக்கு .
தியாவின் பேனா நன்றெனச் சொன்னதற்கும் நன்றி
அன்பு தியாவிற்க்கு நன்றி
பதிலளிநீக்குஏனை கவிவலைகளுடன் எங்களது இன்றைய கவிதையையும் இணைத்து எழுதியதற்க்கு...
இப்பொழுது இதன் மூலம் எங்களுக்கு தங்களையும் சேர்த்து புது நண்பர்கள் அமைந்து விட்டார்கள் அதிலும் மட்டற்ற மகிழ்ச்சி...நன்றி தியா
ஜேகே
அன்பு தியாவிற்க்கு நன்றி
பதிலளிநீக்குஏனை கவிவலைகளுடன் எங்களது இன்றைய கவிதையையும் இணைத்து எழுதியதற்க்கு...
இப்பொழுது இதன் மூலம் எங்களுக்கு தங்களையும் சேர்த்து புது நண்பர்கள் அமைந்து விட்டார்கள் அதிலும் மட்டற்ற மகிழ்ச்சி...நன்றி தியா
ஜேகே
இன்றைய கவிதை கூறியது...
பதிலளிநீக்குஅன்பு தியாவிற்க்கு நன்றி
ஏனை கவிவலைகளுடன் எங்களது இன்றைய கவிதையையும் இணைத்து எழுதியதற்க்கு...
இப்பொழுது இதன் மூலம் எங்களுக்கு தங்களையும் சேர்த்து புது நண்பர்கள் அமைந்து விட்டார்கள் அதிலும் மட்டற்ற மகிழ்ச்சி...நன்றி தியா
ஜேகே
November 23, 2009 10:51 AM
//
இன்றைய கவிதை உங்களின் பொன்னான பதிலுக்கு நன்றி