ஈழத்து சிறுகதைக் களம் ஓர் அறிமுகம் ( தொடர்- 01 ).

ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றுச் செல்நெறியில் சிறுகதைக்கு என்று ஓர் நிலையான தளம் கிடைத்து விட்ட நிலையில்: அவற்றினைப்

* போராட்டத் தளம்
* சமூக விடுதலைத் தளம்
* தனிமனித விடுதலைத் தளம்

எனக் கூறுபோட்டுப் பார்க்கும் இலட்சியவாதமும் ரொமாண்டிசிசமும் கதைப் பொருட்களாக மேலெழுந்தன.

தமிழ்ச் சிறுகதையின் செல்நெறி பற்றியோ அதன் வளர்ச்சிப் போக்குப் பற்றியோ இத் தொடரில் நான் பெரிதாகக் குறிப்பிடவில்லை. இவை பற்றிய குறிப்புக்கள் வாதப்பிரதிவாதங்கள் என்பன ஏற்கனவே நிகழ்ந்தேறி விட்டன.

ஆரம்ப காலத்து சிறுகதைகளில் வேலையில்லாத் திண்டாட்டம், சாதிக்கொடுமை போன்றன அவற்றின் நிறங்களுடன் அப்படியே தீட்டப் பட்டது.

* யதார்த்தவாதம் என்றும் சோஷலிஸ யதார்த்தவாதம் என்றும் முற்போக்கு இலக்கிய வாதிகள்
என்றும் தத்துவ சார்புடைய எழுத்துக்கள் என்றும் பின்னர் மேற்கிளம்பின.

* இன்னொரு பக்கம் தமது கொள்கைகளைப் பிரகடனம் செய்து கொண்டு புரட்சியால் உலகைப்
புரட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை கொண்ட முற்போக்கு வாதிகள்,

என இருவருமே யதார்த்த வாதத்தை ஆயுதமாகக் கருதிப் படைக்கத் தொடங்கினர். ஆனால் திட்டவட்டமான வரையறைக்குள் அடக்கிவிட முடியாத சிறுகதை ஆசிரியர்களும் நிறையத் தோன்றினர்.

ஒருவருடைய எழுத்துக்கும் அவரது செயற்பாடு;, சமூகம் மீதான அவரது கரிசனை எல்லாவற்றுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. இவற்றில் ஒன்றை விட்டு இன்னொன்றைப் பிரித்துப்பார்க்க இயலாது.

யதார்த்தத்தைப் புரிந்து தனக்குள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து கொண்டு படைப்புக்களினைப் படைக்கின்ற போதுதான் அவை உச்ச நிலையினை அடைய முடியும். எனவே ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதோ ஒரு வகையில் தன்னைச் சுற்றியுள்ள விடயங்கள், சமூகம், இனம் போன்றவற்றில் கரிசனை உடையவனாக இருத்தல் அவசியம்.

* 1956ஆம் ஆண்டு தொடக்கம் இனங்களுக்கிடையிலான உடன்பாடற்ற நிலையினைக்
கொண்டு விளங்கி வந்திருக்கின்றது.

* 1983ஆம் ஆண்டு; வரையில் ஒரு வகையான புனைகதை, புனைவியல், கற்பனையியல்
முறையே நடைமுறையில் இருந்தது எனக் கூறுவாரும் உள்ளனர்.

* 1960களின் பின்னர் மத்தியதரவர்க்க எழுச்சியும், முற்போக்குவாதச் சிந்தனைகளும்
மேற்கிளம்பிய போது ஒரு வகையான நடுத்தர மக்கள் சார்புடைய இலக்கியங்கள்
உற்பத்தியாகத் தொடங்கின.

தொடரும் ...

கருத்துகள்

  1. தொடருங்கள் .... வாழ்த்துகளுடன்

    ப்ரிய ராஜன்

    பதிலளிநீக்கு
  2. மிக நல்ல துவக்கம் !!!தொடருங்கள்....
    பயனுள்ள பகுப்பாக மேற்கோள்கள், திசை பிரித்த புத்தகங்கள் அடிகோடிடப் பெறுவது வேண்டுமென தோன்றுகிறது .இது எனது கருத்து மட்டுமே :)

    பதிலளிநீக்கு
  3. நல்ல ஆரம்பம் பிரியோசனமான தகவல்

    பதிலளிநீக்கு
  4. நல்ல, அவசியமான அலசல்.
    தொடருங்கள்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. நல்ல ஆக்கபூர்வமான பதிவு. தொடருங்கள்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. தொடருங்கள் தியா வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. //
    rajan RADHAMANALAN கூறியது...

    தொடருங்கள் .... வாழ்த்துகளுடன்

    ப்ரிய ராஜன்

    November 5, 2009 5:07
    //

    நிச்சயமாக ராஜன் நல்ல தொடராக வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  8. //
    வானம்பாடிகள் கூறியது...

    தொடருங்கள் தியா. நன்றி.

    November 5, 2009 5:30 P
    //

    நன்றி வானம்பாடிகள்

    பதிலளிநீக்கு
  9. //
    நேசமித்ரன் கூறியது...

    மிக நல்ல துவக்கம் !!!தொடருங்கள்....
    பயனுள்ள பகுப்பாக மேற்கோள்கள், திசை பிரித்த புத்தகங்கள் அடிகோடிடப் பெறுவது வேண்டுமென தோன்றுகிறது .இது எனது கருத்து மட்டுமே :)

    November 5, 2009 6:55 PM
    //


    நன்றி நேசமித்ரன்,


    சில வருடங்களுக்கு முன்னர் எனது பட்டப்படிப்பு ஆய்வுக்காக எழுதிச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேட்டின் ஒரு பகுதியைத் தான் இங்கு நான் தொடராக எழுதுகிறேன்.

    ஆகவே முடிந்தவரை உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் வகையில் எழுத முயற்சி செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. //
    கவிக்கிழவன் கூறியது...

    நல்ல ஆரம்பம் பிரியோசனமான தகவல்

    November 5, 2009 7:13 PM
    //

    நன்றி கவிக்கிழவன்

    பதிலளிநீக்கு
  11. தோழரே! அருமையான துவக்கம்!
    எங்களைப் போன்றோர்க்குக் கலங்கரை விளக்கம்!

    தொடருங்கள்!

    -கேயார்

    பதிலளிநீக்கு
  12. //
    ஆரூரன் விசுவநாதன் கூறியது...

    நல்ல, அவசியமான அலசல்.
    தொடருங்கள்
    வாழ்த்துக்கள்

    November 5, 2009 7:48 PM
    //

    ஆரூரன் விசுவநாதன் உங்கள் வாழ்த்துக்கும் ஆசிக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  13. //
    சுசி கூறியது...

    நல்ல ஆக்கபூர்வமான பதிவு. தொடருங்கள்.

    வாழ்த்துக்கள்.

    November 5, 2009 9:12 P
    //


    சுசி உங்கள் வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  14. //
    RAMYA கூறியது...

    தொடருங்கள் தியா வாழ்த்துக்கள்!

    November 5, 2009 10:31 PM
    //

    நன்றி RAMYA

    பதிலளிநீக்கு
  15. //
    இன்றைய கவிதை கூறியது...

    தோழரே! அருமையான துவக்கம்!
    எங்களைப் போன்றோர்க்குக் கலங்கரை விளக்கம்!

    தொடருங்கள்!

    -கேயார்

    November 5, 2009 10:55 PM
    //

    உங்கள் வாழ்த்துக்கும் ஆசிக்கும் நன்றி இன்றைய கவிதை

    பதிலளிநீக்கு
  16. மிகவும் அவசியமானது தியா! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  17. //
    புலவன் புலிகேசி கூறியது...
    தொடருங்கள் ....தியா

    November 6, 2009 11:16 AM
    //

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி புலவன் புலிகேசி

    பதிலளிநீக்கு
  18. //
    அனுபவம் கூறியது...
    மிகவும் அவசியமானது தியா! தொடருங்கள்!

    November 6, 2009 3:14 PM
    //

    நன்றி அனுபவம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி