ஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 06 )

1995இன் பின்னர் இன்றுவரை உள்ள காலகட்டம்

1. மாறும் கதைக் களம்
2. வாழ்க்கைக்கான போராட்டச் சித்திரிப்பு

1. மாறும் கதைக் களம்

1994-1995 களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சந்திரிக்கா அரசுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கிய போது ஏற்பட்ட மகிழ்ச்சி ஆரவாரம் , 1995 ஏப்ரல் 19இல் தொடங்கிய போருடன் தணிந்து போனது. 1995 ஒக்ரோபர் 17ஆம் திகதி ‘சூரியக்கதிர்’ என்ற போர் நடவடிக்கை முடுக்கி விடப்பட்ட போது , நிலையற்ற எதிர்காலமும் பீதியும் தமிழ் மக்களைப் பீடித்தது. யாழ்ப்பாணம் ஒரு மரண களமாக மாறியது. தமிழர் வரலாற்றிலே என்றுமில்லாத பேரவலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து மக்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு பகுதி மக்கள் வன்னிக்குச் செல்ல எஞ்சிய தொகையினர் மீண்டும் ஜெனரல் ஜானக பெரேராவின் ஆக்கிரமிப்பு வலைக்குள் சிக்கிக் கொண்டனர். மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தவர்கள் மக்களின் ஒடுக்கு முறையாளர்களாக மாறினர். சுற்றி வளைப்பு , கைதுகள் , சித்திரவதை , கொலைகள் , கற்பழிப்பு ஆகியன ஆவணப்படுத்தப்பட்ட உண்மைகளாயின. பல நூற்றுக் கணக்கானோர் காணாமற்போக ஒரு தொகையினர் செம்மணியில் புதைக்கப்பட்டனர்.

வன்னிக்குச் சென்ற யாழ்ப்பாண மக்களும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தனர். தொடர்ச்சியான இடப்பெயர்வு , புதிய இடநெருக்கடி , வருமானம் இன்மை, உறவுகளைப் பிரிந்து வாழவேண்டிய அவலநிலை , மலேரியா , எல்லாவற்றுக்கும் மேலாகப் பொருளாதாரத் தடை ஆகியவற்றினால் பல இன்னல்களினை அனுபவித்தனர். இத்தகைய நெருக்கடியான சூழலில் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்ப துயரங்களுள் தாங்களும் இருந்து அனுபவித்தவர்கள் என்ற வகையில் ஓர் உள்நோக்கான பார்வையாகவும் , உள்ளிருந்து வெளிநோக்கிய பார்வையாகவும் இருவேறுபட்ட தளங்களில் நின்று கொண்டு கதைகளைப் இவர்கள் படைத்துள்ளனர்.

2. வாழ்க்கைப் போராட்டச் சித்திரிப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு இடம் பெயர்ந்தவர்களில் அதிகமானோர் எதுவிதமான முன்யோசனைகளுமின்றி உயிர் தப்பினால் போதும் என்ற குறிக்கோளுடன் சென்றவர்களே.அவர்கள் வன்னிக்குச் செல்ல முன்னர் வன்னி என்றால் என்ன? அதன் சூழல் எப்படி இருக்கும்? என்பது பற்றி எதுவும் தெரியாதவர்களாகவே சென்றனர். வன்னியுடன் எவ்விதமான சமூக உறவுநிலையும் அற்றவர்களும் அதிகம்பேர் வன்னிக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் அநேகர் இருக்க இடம் இன்றி அலைந்தனர்.

கிளிநொச்சி , திருவையாறு , மாங்குளம் , புளியங்குளம் , நெடுங்கேணி என நாளுக்கு நாள் தமது இடங்களினை மாற்றியமைத்துக் கொண்டனர். இதற்கு இராணுவ நகர்வுகள் காரணமாக அமைந்தன. இத்தகைய சூழலில் மக்கள் படும் அவலங்களினையும் , வன்னி தவிர்ந்த ஏனைய இடங்களிலுள்ள தமிழர்களின் இராணுவ சூழலுக்கிடையிலான வாழ்க்கை நிலையினையும் 1995இன் பின்னைய தமது சிறுகதைகளினுடைய பேசுபொருளாக்கினர். இவ்வகையில் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் நேர்ந்த இன்னல்களினை 1995இன் பின்னைய இவர்களது கதைகள் சுட்டுவதனால் இக்காலத்து எழுத்தாளர்களின் கதைகளின் உள்ளடக்கத்தினைக் கருத்திற் கொண்டு:

அ . இடப்பெயர்வு அனுபவங்களும் போர்க்காலச் சித்திரிப்பும்

ஆ . போராட்ட உணர்வின் வெளிப்பாடும் அதன் விளைவும்

இ . சமாதானச் சூழல்

என மூன்று உப தலைப்புக்களின் கீழ் நோக்க முடிகின்றது. இனி அவற்றினை ஒவ்வொன்றாக , தனித்தனியாக நோக்குவோம்.

தொடரும் ...


கருத்துகள்

 1. வாழ்த்துக்கள் தியா...உங்கள் பதிவுகள் தொடரட்டும்!

  பதிலளிநீக்கு
 2. வழமைபோல் அருமை. மேலும் தொடருங்கள் தியா.

  பதிலளிநீக்கு
 3. தியா அருமையான பெறுமதியான மதிக்கத்தக்க படைப்பு

  பதிலளிநீக்கு
 4. தியா. யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக்ஸ் பகுதியில் உங்களின் இந்த இடுகை வந்தமைக்கு வாழ்த்துகள்.
  http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp

  பதிலளிநீக்கு
 5. //
  anto கூறியது...
  வாழ்த்துக்கள் தியா...உங்கள் பதிவுகள் தொடரட்டும்!

  November 19, 2009 12:43 AM
  //

  நன்றி anto

  பதிலளிநீக்கு
 6. //
  வானம்பாடிகள் கூறியது...
  வழமைபோல் அருமை. மேலும் தொடருங்கள் தியா.

  November 19, 2009 9:35 AM

  //

  நன்றி வானம்பாடிகள்

  பதிலளிநீக்கு
 7. //
  கவிக்கிழவன் கூறியது...
  தியா அருமையான பெறுமதியான மதிக்கத்தக்க படைப்பு

  November 19, 2009 10:05 AM
  //

  நன்றி, கவிக்கிழவன் உங்கள் வாழ்த்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 8. //
  வானம்பாடிகள் கூறியது...
  தியா. யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக்ஸ் பகுதியில் உங்களின் இந்த இடுகை வந்தமைக்கு வாழ்த்துகள்.
  http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp

  November 19, 2009 5:36 பம்
  //  நன்றி வானம்பாடிகள் நீங்கள் சொன்ன பின்னர்தான் நானும் பார்த்தேன்.

  அறியத்தந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 9. //
  ஸ்ரீ கூறியது...
  நல்ல பதிவு.

  November 19, 2009 7:18 PM
  //

  நன்றி ஸ்ரீ

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்

என் பழைய நாட்குறிப்பில் இருந்து ஒரு பகுதி