ஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 07 )

இடப்பெயர்வு அனுபவங்களும் போர்க்காலச் சித்திரிப்பும்
1995ஆம் ஆண்டு நிகழ்ந்த மாபெரும் இடப்பெயர்வானது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக அப்போதைய காலத்தில் இருந்த ‘பூட்றஸ் பூட்றஸ் காலி’ கூடக் கண்டிக்குமளவிற்கு மிகவும் கொடுமையானதாக அமைந்திருந்தது. 1996ஆம் ஆண்டு ஏப்றல் 18இல் தென்மாராட்சி மீது மேற்கொள்ளப்பட்ட ‘சூரியக்கதிர்-2’ தாக்குதல் மூலம் , அதன் விளைவாக , இடம்பெயர்ந்து வன்னிக்குச் சென்ற மக்களின் இடப்பெயர்வு அனுபவங்களினையும் புதிய பண்பாட்டுச் சூழலில் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடி நிலையினையும், வாழ்வில் ஏற்பட்ட இடர்பாடுகளினையும் அவற்றினைக்கூடச் சுகமென எண்ணி மனநிறைவு காணும் தன்மையினையும் நின்மதியாக வன்னி மண்ணில் கிடைத்த சுகவாழ்வு அனுபவங்களினையும் , சுதந்திர உணர்வுச் சித்திரிப்பினையும் , இராணுவச் சூழலில் நின்று விடுபடத் துடிக்கும் மக்களின் அவல நிலையினையும் இக்காலக்; கதைகள் பதிவு செய்தன.
அவலங்களுக்கும் அழிபாடுகளுக்கும் மத்தியிலே சிக்குண்டு சித்தம் கலங்கித் தடுமாறிப்போன மக்களின் அவலம் நிறைந்த , அகதி வாழ்வினை அவர்களின் கண்ணீர்க் கதையினை, போர்க்களத்திலே இராணுவத்திடம் சிக்குண்ட மக்களின் அவலம் நிறைந்த வாழ்வின் மத்தியில் இராணுவத்திடம் கஞ்சிக்குக்கூட வரிசையில் நிற்கும் அகதி வாழ்வின் அந்தர நிலையினைப் பல கதைகள் மிகவும் தத்துரூபமாக வடித்துக் காட்டின.
இடப்பெயர்வினால் பல இன்னல்களினை அனுபவித்து வந்த மக்களில் ஒரு பகுதியினர் சமகாலத்தில் இராணுவத்திடம் சிக்கி அன்றாட வாழ்வில் சொல்ல முடியாத பல இன்னல்களினையும் சொல்ல முடியாத பல துன்பங்களினையும் அனுபவித்து விரக்தியின் விளிம்புக்கே சென்று நியமங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் அல்லது நியமங்கள் அறுந்த நிலையில் வாழ்வில் வெறுப்புக் கொண்டு ‘அட இவ்வளவுதானா?’ என வாழ்க்கையைப் பார்த்தே கேட்பது போலவும் சில கதைகள் அமைந்துள்ளமையை நோக்க முடிகின்றது. அன்றாட வாழ்வின் அவலநிலை, கைது, சித்திரவதை, காணாமல் போதல் , கொலைகள் போன்ற வாழ்க்கைச் சித்திரங்களையும் காணாமல் போனவர்களின் பெற்றோர் படும் அவல நிலையையும் பல எழுத்தாளர்கள் தாங்கள் அனுபவித்து எழுதினர். இதைவிட வேறுசிலர்: இராணுவத்துக்கு ஆதரவளித்து அவர்களின் எச்சில் காசுக்காக குடை பிடிக்கும் அரச அதிகாரிகளின் மறுபக்கத்தையும் இடையிடையே அழகான முறையில் சித்திரித்துக் காட்டியுள்ளனர். போராட்டஉணர்வின் வெளிப்பாடும் விளைவும்
போராட்ட உணர்வுகள் கவிதைகளில் வெளிப்பட்ட அளவுக்கு சிறுகதைகளில் வெளிப்படவில்லை. எனினும் அதன் விளைவுகள் ஓரளவுக்காவது யதார்த்தப் பாங்குடன் வெளிப்படுத்தப் பட்டன. 1995இன் பின்னர் ஈழத்தில் எழுச்சிப் பாடல்கள் வடிவிலும் கவிதைகள் வெளி வந்தன. இவற்றை ‘அவசரப்படைப்புகள’; எனவும,; ‘வெறும் பிரசாரத் தன்மையும் சொற் செறிவும் மிக்க வரிகள’; எனவும், விமர்சிக்கப்பட்ட நிலையில் மக்களின் குரலாகச் சிறுகதைகளினை இலக்கிய உலகம் ஏற்றுக் கொண்டது.
போராட்ட சூழலில் படைப்பாளிகள் வாழ்ந்தமையினால் போராட்ட உணர்வும், தேசியப்பற்றும், அதன் விளைவுகளும் மேலோங்குவது தவிர்க்க முடியாதுபோக இக்காலத்து எழுத்தாளர்களுடைய படைப்புக்களிலும் இத்தகைய பார்வை இழையோடுவது யதார்த்தமானதுதானே. எனவே “இலக்கியம் நிகழ்கால உலகின் கண்ணாடி” என்ற கூற்றுக்கு அமைய இக்காலத்தில் தோன்றிய அனேகமான சிறுகதைகளில் மேற்படி பண்புகள் இயல்பாகவே அமைந்து விளங்கக் காணலாம்.
1996இல் வன்னிக்கு இடம் பெயர்ந்த மக்கள் கிளாலி கடந்த போது எங்கு போவது? எப்படி இருப்பது? எனப் புரியாது தவித்து, மாறிமாறி அலைந்து ஓர் நிலையான இடத்தில் தரித்த போதிலும் உணவு, வருமானம் இன்றிப் பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தமையினால் மாறிமாறிப் பல துன்பங்களினை அனுபவித்தனர்.
வன்னியில் யாழ்ப்பாண மக்கள் பட்ட இன்னல்களுக்கு மத்தியில் பல இளைஞர் யுவதிகள் இயக்கத்துக்கு உந்தித் தள்ளப்பட்டனர். இதனால் அவர்களின் பெற்றோர், உறவுகள் மேலும் பல துன்பங்களினை அனுபவிக்க வேண்டி இருந்தது. தனது பிள்ளையின் சாவுச்செய்தி எந்த வேளையில் வருமோ? என ஏங்கியவாறு பெற்றோர் இருக்கும் நிலையும், அலைச்சல் மிக்க வாழ்வின் சித்திரிப்பும் மிகவும் தத்துரூபமாகப் பல கதைகளில் வடிக்கப்பட்டுள்ளன. போராளிகளையும் இராணுவத்தினரையும் நேரடியாகச் சுட்டாமல் குறியீடு மூலம் உருவகித்து கதையை நகர்த்திச் செல்லும் பண்பை இக்காலத்தில் எழுந்த பல கதைகளில் அவதானிக்க முடிகின்றது. இறுக்கமான சூழலில் இருந்துகொண்டு கதைகள் எழுதப்பட்டமையினால் இத்தகைய உத்தி முறைமையை எழுத்தாளர்கள் கடைப்பிடித்திருக்க வேண்டிய தேவையும் இருந்திருக்கலாம்.
போராட்டத்தில் ஈடுபடும் மற்றும், ஈடுபட்டு மரணித்த இளைஞர்கள் ஒருபுறம் இருக்க அவர்களின் பெற்றோர் படும் அவலம்மிக்க வாழ்வையும் கதைகளினுடாக எடுத்துக் காட்டினர். மகனைப் போர்க்களத்தில் பலியிட்ட அன்னையின் மனக் குமுறலையும் பிறரின் முகத்தில் தன் மகனின் ஒளிவதனம் தேடும் அவல நிலையினையும் காட்டி, மகனைப் பற்றிய நினைவில் வாழும் தாய் ஒருத்தி மகனைப் பற்றிய நினைவினால் உருவாகின்ற பிரமை காரணமாக அவனது கல்லறைக்கே அழைத்துச் செல்லப்படுவதைக் காட்டும் போதும், மாவீரனான தன் மகனின் கல்லறைக்கு மலர் தூவும் போதும் மகன் தன்னுடன் ‘அசரீரி’யில் உரையாடுவதாக எண்ணி மனம் நெக்குருகும் பிரிவாற்றாத நிலையினையும் ஒருசில சிறுகதையில் வெளிப்படுத்துகின்றனர்.

கருத்துகள்

  1. தங்களின் அலசல்... மனதை பிழிகிறது தியா

    பதிலளிநீக்கு
  2. குறித்துக் கொள்ளுங்கள் தியா. உங்களின் இந்தத் தொகுப்பு படைப்பாளிகளிடயே பேசப்படும். அருமை.

    பதிலளிநீக்கு
  3. சி. கருணாகரசு கூறியது...
    தங்களின் அலசல்... மனதை பிழிகிறது தியா

    November 22, 2009 3:43 பம்


    //



    நன்றி சி.கருணாகரசு

    பதிலளிநீக்கு
  4. வானம்பாடிகள் கூறியது...
    குறித்துக் கொள்ளுங்கள் தியா. உங்களின் இந்தத் தொகுப்பு படைப்பாளிகளிடயே பேசப்படும். அருமை.

    November 22, 2009 3:58

    //

    நன்றி வானம்பாடிகள் உங்களின் கருத்து ஊக்கம் தருகிறது

    பதிலளிநீக்கு
  5. கலகலப்ரியா கூறியது...
    மிக அருமையான கட்டுரை தியா..!

    November 22, 2009 4:56 பம்
    //

    நன்றி கலகலப்ரியா

    பதிலளிநீக்கு
  6. அருமையா எழுதி இருக்கீங்க தியா....

    உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன்...

    பதிலளிநீக்கு
  7. நன்றி சுசி உங்களின் அழைப்புக்கு
    நான் என்னைத் தயார்ப் படுத்திவிட்டு எழுதுகிறேன்

    பதிலளிநீக்கு
  8. நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  9. //
    MALARVIZHI கூறியது...
    நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி .

    November 23, 2009 7:19 AM
    //

    நன்றி MALARVIZHI

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி