சொற்சிலம்பம் - இரண்டு



இலங்கையிலும்தமிழ் நாட்டிலும் தமிழ் பேசபட்டாலும் இரண்டுக்கும் இடையில்பெரியளவிலானஉச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம். இலங்கையிலும் பிரதேசத்துக்கு பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும்உண்டு. ஆனால், இலங்கைத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பலசொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம். அவற்றினை புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன்.

''மொழி என்பது ஒன்றை அடையாளப் படுத்தும் கருவி '' என்ற கொள்கை உடையவன் நான். ஆதலால் , இங்கு எது சரி எது பிழை என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் நான் இருந்துகொள்ள ஆசைப்பட்டு இதனைத் தொடர்கிறேன்.


(முக்கிய குறிப்பு - இவை என்னால் அவதானிக்கப் பட்ட சொற்கள் மட்டுமேயன்றி ஆய்வல்ல. சில சொற்கள் தமிழ் அல்லவெனினும் தமிழ்போல் வழங்கப்பட்டு வருகின்றமையால் நானும் அப்படியே சொல்லியுள்ளேன்.)

இலங்கைத் தமிழ்ச் சொற்கள்
தமிழ் நாட்டுத் தமிழ்ச் சொற்கள்


தடி-----------------------------------------------------------------------------------குச்சி
சூப்புத்தடி-------------------------------------------------------------------------குச்சி மிட்டாய்
ஐஸ்பழம்--------------------------------------------------------------------------குச்சிஐஸ்
இனிப்பு----------------------------------------------------------------------------தித்திப்பு
கைப்பு------------------------------------------------------------------------------கசப்பு
உறைப்பு---------------------------------------------------------------------------காரம்
பின்னேரம்------------------------------------------------------------------------சாயந்திரம்
மத்தியானம்----------------------------------------------------------------------மதியம்
இடம்-------------------------------------------------------------------------------லெப்டு
வலம்--------------------------------------------------------------------------------ரைட்


அவியவை
-------------------------------------------------------------------------வேகவை
தேத்தண்ணி ஊத்து-------------------------------------------------------------காப்பி கல
சோறு--------------------------------------------------------------------------------சாதம்
சம்பல்--------------------------------------------------------------------------------துவையல்
காலை, மாலை உணவு---------------------------------------------------------டிபன்
அடுப்பு மூட்டு---------------------------------------------------------------------அடுப்பு பத்தவை
வறை---------------------------------------------------------------------------------பொரியல்
பொரியல்---------------------------------------------------------------------------வறுவல்
பாண்---------------------------------------------------------------------------------ரொட்டி, பிரட்
ரொட்டி------------------------------------------------------------------------------சப்பாத்தி
அப்பம்-------------------------------------------------------------------------------ஆப்பம்



இன்னும் வளரும்.....


கருத்துகள்

  1. வித்தியாசமான ,உபயோகமான பதிவு.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. சூப்புத்தடி, ஐஸ்பழம், சம்பல், வறை, பாண் இவை தவிர மற்றையவையும் அதே சொல்லில் வழங்கப் படுகிறது. தேத்தண்ணி -டீத்தண்ணி
    இடம்-பீச்சாங்கை, லொட்டை
    வலம்-சோத்தாங்கை
    அப்பம் என்பது பணியாரம் போன்ற ஒரு இனிப்பு.
    ஆப்பம் என்பது தோசை போல் ஆனால் நடுவில் கனமாக செய்வது.

    பதிலளிநீக்கு
  3. இனிப்பு
    உறைப்பு
    மத்தியானம்
    இடம்
    வலம்
    அவியவை
    சோறு
    சம்பல்
    பொரியல்
    ரொட்டி
    அப்பம்
    இவ்வளவு சொற்களும் நெல்லையிலும் இதே சொல் வழக்கோடு பேசப் படுகிறது...!

    பதிலளிநீக்கு
  4. சிலத படிக்க சிரிப்பா இருக்கு.... தொடருங்க தொடருங்க...

    பதிலளிநீக்கு
  5. தியா உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன். பெற்றுக்கொள்ளவும்..http://pulavanpulikesi.blogspot.com/2009/11/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  6. பெரும்பாலான சொற்கள் , நெல்லையிலும் இதே வழக்கோடுதான் பயன்படுத்த படுகின்றன .

    நல்ல இடுகை நண்பரே !

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. பெரிய மாறுதல் இல்லை. இடப் பக்கம் உள்ள பெரும்பாலான சொற்கள் வலப் பக்கத்திலும் இடம் பெறலாம். இங்கும் உபயோகிக்கப் படும் சொற்களே அவை....

    பதிலளிநீக்கு
  8. தமிழ்நாட்டில் கொஞ்சம் ஆங்கிலம் அதிகம் தான்.....
    இடம்-----------லெப்டு
    வலம்--------ரைட்

    காலை, மாலை உணவு----------டிபன்
    தப்பு...சாப்பாடு...என்றுதான் பாவிப்போம்

    பதிலளிநீக்கு
  9. நல்லா இருக்குங்க. இன்னும் நிறைய சொற்கள் எழுதுங்க. நாங்களும் தெரிஞ்சுப்போம்.

    பதிலளிநீக்கு
  10. தமிழகத் தமிழ் வார்த்தைகள் என்று சொல்லிவிட்டு ஆங்கில வார்த்தைகள் பலவற்றைப் பிரயோகித்திருக்கிறீர்களே...குறும்பா?

    பதிலளிநீக்கு
  11. உங்கள் பேனா பேசிக்கொண்டே இருக்கிறது ....எனக்கும் இலங்கை கொஞ்சும் தமிழ் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  12. சுசி,
    velji ,
    ஸ்ரீ ,
    ஜீவன் ,
    சத்ரியன்
    புலவன் புலிகேசி
    விக்னேஷ்வரி

    உங்கள் அனைவரினது பின்னூட்டல்களுக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. //

    வானம்பாடிகள் கூறியது...

    சூப்புத்தடி, ஐஸ்பழம், சம்பல், வறை, பாண் இவை தவிர மற்றையவையும் அதே சொல்லில் வழங்கப் படுகிறது. தேத்தண்ணி -டீத்தண்ணி
    இடம்-பீச்சாங்கை, லொட்டை
    வலம்-சோத்தாங்கை
    அப்பம் என்பது பணியாரம் போன்ற ஒரு இனிப்பு.
    ஆப்பம் என்பது தோசை போல் ஆனால் நடுவில் கனமாக செய்வது.

    November 11, 2009 5:33 PM

    //


    //

    லெமூரியன் கூறியது...

    இனிப்பு
    உறைப்பு
    மத்தியானம்
    இடம்
    வலம்
    அவியவை
    சோறு
    சம்பல்
    பொரியல்
    ரொட்டி
    அப்பம்
    இவ்வளவு சொற்களும் நெல்லையிலும் இதே சொல் வழக்கோடு பேசப் படுகிறது...!

    November 11, 2009 11:03 PM

    //


    //


    ஜெனோவா கூறியது...

    பெரும்பாலான சொற்கள் , நெல்லையிலும் இதே வழக்கோடுதான் பயன்படுத்த படுகின்றன .

    நல்ல இடுகை நண்பரே !

    வாழ்த்துக்கள்

    November 12, 2009 11:57 AM

    //


    //

    ஸ்ரீராம். கூறியது...

    பெரிய மாறுதல் இல்லை. இடப் பக்கம் உள்ள பெரும்பாலான சொற்கள் வலப் பக்கத்திலும் இடம் பெறலாம். இங்கும் உபயோகிக்கப் படும் சொற்களே அவை....

    November 12, 2009 2:04 PM

    //


    உங்கள் அனைவரினது பின்னூட்டல்களுக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி.
    சில பிரதேசங்களில் நீங்கள் சொல்லப்பட்டதுபோல் பேசப்படலாம்.

    பதிலளிநீக்கு
  14. //

    Balavasakan கூறியது...

    தமிழ்நாட்டில் கொஞ்சம் ஆங்கிலம் அதிகம் தான்.....
    இடம்-----------லெப்டு
    வலம்--------ரைட்

    காலை, மாலை உணவு----------டிபன்
    தப்பு...சாப்பாடு...என்றுதான் பாவிப்போம்

    November 12, 2009 2:47 PM


    //

    அறிவன்#11802717200764379909 கூறியது...
    தமிழகத் தமிழ் வார்த்தைகள் என்று சொல்லிவிட்டு ஆங்கில வார்த்தைகள் பலவற்றைப் பிரயோகித்திருக்கிறீர்களே...குறும்பா?

    November 12, 2009 4:04 PM

    //


    உங்கள் பின்நூட்டல்களுக்கு நன்றி.

    இதுபற்றி நான் தொடக்கத்திலேயே () அடைப்புக்குள் கூறியுள்ளேன் நண்பர்களே.

    பதிலளிநீக்கு
  15. //

    வெண்ணிற இரவுகள்....! கூறியது...

    உங்கள் பேனா பேசிக்கொண்டே இருக்கிறது ....எனக்கும் இலங்கை கொஞ்சும் தமிழ் பிடிக்கும்

    November 12, 2009 7:28 PM

    //

    அப்படியா

    உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  16. நல்ல பதிவு தியா...

    நிறையச் சொற்கள் இலங்கையைப்போலவே இங்கேயும் பயன்படுத்தப்படுகிறது.

    இன்னும் தொடர்ந்து எழுதுங்க.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்