இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு நீயழுதாய் அடித்தாரை சொல்லியளு ஆய்கினைகள் பண்ணி வைப்பேன் காத்து நுழையாத வீட்டினுள்ளே காவாலி அவன் நுழைந்தான் பாத்துப்பாத்து கட்டி வைச்ச செல்வமெல்லாம் கொண்டுபோனான் முகமூடி கொண்டொருவன் படியேறி வருவானென்று அடிபாவி நான் நினைக்க ஆதாரம் ஏதுமுண்டோ கடிகாவல் செய்து வைக்க காவலர்கள் யாருமில்லை கடிநாயும் வளர்க்கவில்லை காவலுக்கு வைக்கவில்லை அந்தாளும் சிவனேன்னு ஆகாயம் போயிட்டார் இந்த உலகமதில் எங்களுக்கு வேறு துணை யாருமில்லை சிறுக்கி செம சிறுக்கி சின்னமகள் இவளிருக்க பொறுக்கி எடுத்த முத்து வேறெதற்கு உலகினிலே பொன்னனான பொன்மணியை பொத்திப் பொத்தி வளர்க்கையிலே கண்ணான கண்மணிகள் கருவிழியும் மங்குதடி கருவிழிகள் மங்கி மங்கி காவல் செய்யும் வேளையிலே இரவுதனில் எவன் வருவான் எதையெடுப்பான் என்று பயம் இரவு வரும் வேளையிலே காடையர்கள் வீடு வந்தால் இரவி வரும் வேளைக்குமுன் பாடையெல்லோ கட்டிடுவார் பொழுதேறிப் போகையிலே வருவதுவோ நித துக்கம் அழுதழுது கண்கள் மங்கும் அனுதினமும் முகஞ்சினுங்கும் கள்ளன்
இதற்கு முந்தைய கவிதையான ஆறாந்திணை - 03 என்னைக் கவர்ந்தது
பதிலளிநீக்கு//உண்ட சோற்றில் உப்பில்லை
பதிலளிநீக்குகண்ணீர் துளி விழுந்து
கசக்கிறது சோறு… //
வரிகளில் தெரிகிறது வலி:(!
நன்றி நந்தா(அணையா)விளக்கு
பதிலளிநீக்கு//
இதற்கு முந்தைய கவிதையான ஆறாந்திணை - 03 என்னைக் கவர்ந்தது
//
புரிகிறது இது பிடிக்கவில்லையா?
//
பதிலளிநீக்குவரிகளில் தெரிகிறது வலி:(!
//
விழுந்தால்தானே நோவு தெரியும்
நன்றி ராமலக்ஷ்மி
வலி கூட உங்கள் கவிதையில் அழகாகிறது தியா
பதிலளிநீக்குவலிகண்டு தானே வழி பிறக்கும் . நம்பிக்கையுடன் காத்திருப்போம் . வரும் காலங்களில் வழி ஒன்று பிறக்குமென்று ....வலிக்காமல் வாழ்கை இல்லை.
பதிலளிநீக்குநிலாமதி அக்கா
//
பதிலளிநீக்குவலி கூட உங்கள் கவிதையில் அழகாகிறது தியா
//
நன்றி வானம்பாடிகள்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி
//
பதிலளிநீக்குவலிகண்டு தானே வழி பிறக்கும் . நம்பிக்கையுடன் காத்திருப்போம் . வரும் காலங்களில் வழி ஒன்று பிறக்குமென்று ....வலிக்காமல் வாழ்கை இல்லை.
//
நன்றி நிலாமதி அக்கா
உங்கள் பதிலுக்கு நன்றி
நீங்கள் சொல்வது உண்மைதான்
ஆனால் பொறுத்திருந்து பார்ப்போம்.
உதயங்கள் சுடுவதில்லை
பதிலளிநீக்குஅஸ்தமனங்கள் அழிவதில்லை
இதில் வரும் வாழ்வு மட்டும்
புரிவதில்லை..
உதடுகளின் வார்த்தைகளை
இனம் கண்டு பல
இனம் கொன்ற தேசத்தில்
அகதிகளாய்
கதியின்றி கண்ணீர் சிந்திடிடும்
உள்ளங்களுக்கும் விடியல் தாராயோ!
ஆதவனே..
என் பங்கிற்கும்...
வாழ்த்துக்கள்..
நன்றி சந்தான சங்கர்
பதிலளிநீக்குஉங்கள் கவிதை உண்மையின் உரைகல்