இனிவரும் காலம்...

உலகம் இப்போ
ஒரு உருண்டை வீடு
அதில் மனிதர் எல்லாம் -தினம்
அலையும் வெறும் கூடு
இயந்திரங்கள் மனிதராகி
வேர்வை சிந்தாது உழைக்கலாம்
மனிதரெல்லாம் ஒன்று கூடி
இயந்திரமாய்ப் பிளைக்கலாம்
காலம் போற போக்கில் நாளை
கலியாணங்கள் நடக்கலாம்
ஒற்றைப் பிள்ளை பெற்றிடாத
தம்பதியர் கூடியே
தத்துப் பிள்ளை தத்தெடுக்க
இயந்திரங்கள் சமைக்கலாம்
வீட்டுக் காவல் வேலைகென
இயந்திரத்தில் நாய்களாய்
தோட்டம் முதல்
தொலைவு வரை
ஓடியோடி உழைத்திட
இயந்திரமாய் மனிதனை
சந்தையிலும் வாங்கலாம் .
காலம் போற போக்கில் நாளை
பதிலளிநீக்குகலியாணங்கள் நடக்கலாம்
ஒற்றைப் பிள்ளை பெற்றிடாத
தம்பதியர் கூடியே
தத்துப் பிள்ளை தத்தெடுக்க
இயந்திரங்கள் சமைக்கலாம்
அழுத்தமான எள்ளல். இப்படிக்கவிதைகள் படித்து மிக நாளானது
அருமை தியா, அருமை.
நன்றி காமராஜ்
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும்...
நல்ல கற்பனை
பதிலளிநீக்குநடக்கலாம் இல்ல நடக்கும்...
"நடக்கலாம் இல்ல நடக்கும்..."
பதிலளிநீக்குநன்றி வசந்த்
nalla irukku nanbare
பதிலளிநீக்குviththiyaasamaana sinthanai
thattachchuppizhaikaLai sari seyyungkal nanbaree
ple remove the world verification
பதிலளிநீக்குநன்றி மண்குதிரை நண்பரே
பதிலளிநீக்கு