காணாமல் போனவன்



“அம்மா எப்பம்மா அப்பா வருவார்? ”

இது தினசரி புவனாவின் மகன் தினேஷ் கேட்கும் கேள்வி.

“இந்தக் காலண்டர் முடிய அப்பா வருவாரடா”

கண் கலங்க பதில் கூறுவாள் புவனா.

“எப்ப அம்மா இந்தக் காலண்டர் முடியும்? ”

ஒண்டொண்டாய் ஒவ்வரு நாளும் கிழிக்க எப்பாவது ஒருநாள் முடியும்”

நாளுக்கு நாள் காலண்டர் பக்கங்கள் குறைந்து கொண்டு போனது… இப்போது பழைய இடத்தில் புதிய காலண்டர்

“அம்மா எப்பம்மா அப்பா வருவார்? ”

தினேஷின் அதே கேள்வி…

“இந்தக் காலண்டர் முடிய வருவாரடா……..”

கண் கலங்கினாள் புவனா.

கருத்துகள்

  1. நன்றி மண்குதிரை

    //palthu thonuthu kanama irukku//

    பரவாயில்லை தோணுறதை எழுதுங்கோ

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம். வலியும் ஓர் அழகுதான் போலும். பாராட்டுக்கள் தியா

    பதிலளிநீக்கு
  3. ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் வருவாரோ .....உண்மையை சொல்வது விளங்க படுத்துவது நலம்.பாவம் அந்த பிஞ்சு மனம். நட்புடன் நிலாமதி

    பதிலளிநீக்கு
  4. //பாராட்டுக்கள் தியா//

    நன்றி வானம்பாடிகள்

    //ம்ம்ம். வலியும் ஓர் அழகுதான் போலும்.//

    வலியும் அழகுதான் ஆனால் வழியே வாழ்வாகிவிட்டால்???

    பதிலளிநீக்கு
  5. //ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் வருவாரோ .....உண்மையை சொல்வது விளங்க படுத்துவது நலம்.பாவம் அந்த பிஞ்சு மனம். நட்புடன் நிலாமதி//


    நன்றி நிலாமதியக்கா உங்கள் வரவுக்கு
    நன்றி

    பதிலளிநீக்கு
  6. கவிதை நன்றாக இருக்கிறது என்று சொல்ல தடுக்கிறது அதனால் ஏற்படும் வலி.

    பதிலளிநீக்கு
  7. //கவிதை நன்றாக இருக்கிறது என்று சொல்ல தடுக்கிறது அதனால் ஏற்படும் வலி.//


    நன்றி S.A. நவாஸுதீன்

    பதிலளிநீக்கு
  8. அடிச்சு போடுது தியா.!//ஒன்டோண்டாய் ஒவ்வொரு நாளும் கிழிக்க எப்பவாவது ஒரு நாள்முடியும்//எவ்வளவு எளிதாய்,பாரமேற்றுகிறீர்கள் தியா!

    பதிலளிநீக்கு
  9. //பா.ராஜாராம் சொன்னது…
    அடிச்சு போடுது தியா.!//ஒன்டோண்டாய் ஒவ்வொரு நாளும் கிழிக்க எப்பவாவது ஒரு நாள்முடியும்//எவ்வளவு எளிதாய்,பாரமேற்றுகிறீர்கள் தியா!
    //


    நன்றி நண்பரே
    என்ன செய்வது இப்பிடியும் ஒருவித வாழ்வு நடக்கிறது உலகின் ஓர் மூலையில்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி