தொடரும் காதல்
இப்போதுதான்
பத்து ஆண்டுகள் கழித்து

திரும்பி வந்திருக்கிறேன்.


எம் இரு விழிகள் சந்தித்து

கதைபயின்ற அந்தக் கட்டிடம்

வெட்டிச் சாய்க்கப்படாமல்

இன்னும் கிளை விட்டு

நிழல் பரப்பும் பெருமரம்...

'சில்' என்ற காற்று வீசும்

பெருவெளி மைதானம்

கல்லில் வடிக்கப்பட்ட இருக்கைகள்

எல்லாம் அப்படியே இருந்தன

எம் இருவரது இதயம் போல்.


பெருமரத்தின் நிழற்பரப்பில்

நிலம் மறைத்துப் போர்வையாக

உதிர்ந்திருந்த இதழ்கள்

காற்றில் தாளம் போட்டன.


எம் கண்கள் கதை பயின்ற

பல்கலை வளாகம்

இப்போது அந்நியமாய் போனாலும்

எம் இருவர் காதல் மட்டும்

வாழ்வாகி வலம் கொளிக்க

கண்டேன் இன்று.கருத்துகள்

 1. அர்த்தமுள்ள கவிதை! அழகான வார்த்தைகள்!

  பதிலளிநீக்கு
 2. அழகாய்ச் சொல்கிறீர்கள் தியா. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. அழகான கவிதை. ரீடரில் படிக்கும் போது எழுத்தின் மஞ்சள் வண்ணம் படுத்துகிறது. தயவு செய்து மஞ்சள் நிறத்தை மாற்றுங்களேன்.

  --வித்யா

  பதிலளிநீக்கு
 4. நல்ல மனதில் அழமாக உலாவக் கூடிய கவிதை.

  பதிலளிநீக்கு
 5. //வெட்டிச் சாய்க்கப்படாமல்
  இன்னும் கிளை விட்டு
  நிழல் பரப்பும் பெருமரம்...//

  கேட்கவே அச்சரியமாக இருக்கிறது...

  //இப்போது அந்நியமாய் போனாலும்
  எம் இருவர் காதல் மட்டும்
  வாழ்வாகி வலம் கொளிக்க
  கண்டேன் இன்று.//

  நல்லாருக்கு அன்பரே...வாழ்த்துக்களுடன்...
  க.பாலாஜி..

  பதிலளிநீக்கு
 6. நன்றி ,
  நன்றி விதூஷ் வெள்ளையாக மாற்றிவிட்டேன் இப்போ சரியா

  பதிலளிநீக்கு
 7. //அழகாய்ச் சொல்கிறீர்கள் தியா. வாழ்த்துகள்//

  நன்றி வானம்பாடிகள் எல்லாம் அனுபவம்தான்

  பதிலளிநீக்கு
 8. //நல்ல மனதில் அழமாக உலாவக் கூடிய கவிதை.//

  நன்றி புலவன் புலிகேசி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 9. //வெட்டிச் சாய்க்கப்படாமல்
  இன்னும் கிளை விட்டு
  நிழல் பரப்பும் பெருமரம்...//

  கேட்கவே அச்சரியமாக இருக்கிறது...

  //இப்போது அந்நியமாய் போனாலும்
  எம் இருவர் காதல் மட்டும்
  வாழ்வாகி வலம் கொளிக்க
  கண்டேன் இன்று.//

  நல்லாருக்கு அன்பரே...வாழ்த்துக்களுடன்...
  //

  நன்றி க.பாலாஜி எல்லாம் உண்மை

  பதிலளிநீக்கு
 10. //எல்லாம் அப்படியே இருந்தன

  எம் இருவரது இதயம் போல்.//

  அருமை

  //எம் இருவர் காதல் மட்டும்

  வாழ்வாகி வலம் கொளிக்க

  கண்டேன் இன்று.//  //வளம் கொழிக்க//என்று இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.


  இருவர் காதல் மட்டும்.....
  மட்டும் எதற்காக புரியவில்லையே...

  வாழ்த்துக்கள்

  அன்புடன்
  ஆரூரன்

  பதிலளிநீக்கு
 11. //வளம் கொழிக்க//என்று இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

  நன்று,
  ஆரூரன் விசுவநாதன்நீங்கள் சொல்லாது சரி நானும் பார்த்தேன் அது தவறுதான் .

  //
  இருவர் காதல் மட்டும்.....
  மட்டும் எதற்காக புரியவில்லையே...
  //
  சின்ன பிள்ளையளுக்கு விளங்காது விடுங்கோ

  நன்றி

  பதிலளிநீக்கு
 12. //வலம் கொளிக்க//

  நானும் பார்த்தேன்


  அருமை
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 13. //
  நானும் பார்த்தேன்


  அருமை
  வாழ்த்துகள்
  //


  நன்றி நேசமித்ரன்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்