அதிரூப நாயகியே


கண்களைப் பார்க்கிறேன்
கனிவு தெரிகிறது
உதடுகள் எதையோ
சொல்ல நினைக்கிறது
புருவம் உயர்ந்து
விரிந்து எழுந்து
தாளம் போடுகிறது
கூந்தல் வழிந்து
தோளில் தவழ்ந்து
நளினமாடுகிறது
போட்டுமின்றி
பூவுமின்றி-உன்
பிறைநுதலில் ஒரு
அழகிய கோலம் கண்டேன்
அலங்காரம் ஏதுமின்றி
அழகாகத் தெரிகிறாயே
அதிரூப நாயகியே
கருணை மலை பொழிந்து
காட்சி தரும் கன்னிகையே
இத்தனை அழகாக
உனைப் படைத்தான்
தாள் வணக்கம்

கருத்துகள்

 1. கவிதை ஒரு நூலில் கோர்க்கப்பட்டுள்ளது போல்

  அழகா இருக்கு.....

  பதிலளிநீக்கு
 2. "கவிதை ஒரு நூலில் கோர்க்கப்பட்டுள்ளது போல்

  அழகா இருக்கு....."  நன்றி வசந்த்

  பதிலளிநீக்கு
 3. "அழைப்பிதல்

  நிகழ்ச்சி : மூன்றாம்பிறை
  நாள் : உங்கள் நாள்
  நேரம்: உங்களின் நேரம்

  வரவேற்பு : கவிதைகள்

  அன்புடன்,
  சந்தான சங்கர்.

  (மொய் எழுதவேண்டாம்
  மெய் எழுதிவிட்டு செல்லுங்கள்.)"  சந்தான சங்கர்,

  உங்கள் அழைப்பிதழுக்கு நன்றி
  நேரம் கிடைக்கும்போதெல்லாம்
  நிச்சயமாக வருவேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
 4. நன்றி குடந்தை அன்புமணி

  "நல்லாருக்குங்க. வாழ்த்துகள்"

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்