
வேலை முடித்து
மாலை வேளையில்
சாலை நெரிசலில்
சிக்கித் தவித்து
விரையும் வண்டியில்
வீடு விரைந்து
இருட்டும் பொழுதிலே
கட்டியணைத்து
நெஞ்சில் புதைத்து
முத்தம் கொடுத்து
ஆரத் தழுவி
உச்சி மோர்ந்து
உள்ளம் குளிர
என்
செல்லக் குழந்தை
சொல்லி அழைக்கும்
"அம்மா" என்ற
ஒற்றை வார்த்தையில்
அத்தனை களைப்பும்
அமுங்கிப் போகும்
//"அம்மா" என்ற
பதிலளிநீக்குஒற்றை வார்த்தையில்
அத்தனை களைப்பும்
அமுங்கிப் போகும் //
உண்மைதான் அனுபவிக்க வேண்டிய வரிகள்...
கவிதை நல்லாயிருக்கு நண்பரே...
//உண்மைதான் அனுபவிக்க வேண்டிய வரிகள்...
பதிலளிநீக்குகவிதை நல்லாயிருக்கு நண்பரே...//
நன்றி பாலாஜி
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு