ஆறாந்திணை - 01

மருதம் :- வயலும் வயல்சார்ந்த இடமும்



எதுவும் விதைக்கப்படாத

வயல்வெளிகள்

யாரும் புதிதெடுக்காத

தரிசுநிலங்களாக…

கண்மூடித் திறப்பதற்குள்

கற்சிலையாய் அமைந்துபோன

மனிதர்கள்


வாழ்தல் எப்படிக் கொடூரமானது?

கரடுமுரடான பாதை போல்

கடினமானதா என்ன?

எதுவுமே புரிவதில்லை…


கால் பதிக்க முடியாத

சேற்று வயல்வெளிகள்

கட்டாந்தரையாகிக்

கண்ணீர் வடிக்கக் கண்டேன்.



ஆற்றுப்படுக்கைகளில்

ஆங்காங்கே

பிளவுகள்.. வெடிப்புகள்.


உடைப்பெடுத்துப் பாயும்

வெற்றுக்குளங்களில்

செத்துக் கிடந்தன

நீர்க்காக்கைகள்.

குளக்கட்டின் மரநிழலில்

சிலையாகச் சமைந்திருந்தார்

பிள்ளையார்…

கருத்துகள்

  1. நிஜ‌ம் சுடுகின்ற‌து. ந‌ல்லா இருக்கு க‌விதை

    பதிலளிநீக்கு
  2. //கால் பதிக்க முடியாத


    சேற்று வயல்வெளிகள்


    கட்டாந்தரையாகிக் //

    அருமைங்க

    பதிலளிநீக்கு
  3. வார்த்தைகள் உங்களிடம் கை கட்டி நிற்கின்றன போலும். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. //
    நிஜ‌ம் சுடுகின்ற‌து. ந‌ல்லா இருக்கு க‌விதை
    //


    நன்றி உயிரோடை உங்கள் பாராட்டுக்கு.
    நிஜம் சுடுகிறதா எனக்கும்தான் .

    பதிலளிநீக்கு
  5. //
    சொல்லாடல்கள் அழகு

    நிதர்சணத்தோடு.
    //
    நன்றி ஜமால்

    பதிலளிநீக்கு
  6. //
    வார்த்தைகள் உங்களிடம் கை கட்டி நிற்கின்றன போலும். பாராட்டுகள்.
    //

    நன்றி வானம்பாடிகள்

    எல்லாம் பட்டறிவும் பார்த்தறிவும்தான்

    பதிலளிநீக்கு
  7. உண்மைகள் பேனா நுனியில் புறப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  8. //
    உண்மைகள் பேனா நுனியில் புறப்படுகிறது.
    //

    நன்றி மலிக்கா

    பதிலளிநீக்கு
  9. //
    நல்லா இருக்குங்க...!
    //

    நன்றி ♠ ராஜு ♠

    பதிலளிநீக்கு
  10. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் வருத்தம் தோய்ந்த வரிகளையே நினைவுபடுத்துகிறது உங்கள் கவிதை...வாழ்த்துக்கள் தோழா!

    பதிலளிநீக்கு
  11. //
    வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் வருத்தம் தோய்ந்த வரிகளையே நினைவுபடுத்துகிறது உங்கள் கவிதை...வாழ்த்துக்கள் தோழா!

    //
    நன்றி anto

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி