ஆறாந்திணை - 02

முல்லை:- காடும் காடு சார்ந்த இடமும்ஆயிரமாயிரம் நினைவலைகள்


முட்டி மோதின.


நினைவழியாப் பொழுதுகளில்


உடும்பு முயல் மான்


வேட்டையாடிய காடுகள்


தனிமையில் உறையக் கண்டேன் .


காட்டாற்றின் கரையினிலே


கதையளந்த காலம் போய்


மாயத் தோற்றங்கள்


மனத் திரையில்


கோலமிடக் கண்டேன்.


மவுனமாக வரையப்பட்ட


என் கவிதையின் வரிகள் போல்


அசைவற்றுக் கிடக்கிறது


என் பூர்வீகக் காடு.

கருத்துகள்

 1. //என் கவிதையின் வரிகள் போல்
  அசைவற்றுக் கிடக்கிறது
  என் பூர்வீகக் காடு. //

  உணர்வுப்பூர்வமான வரிகள். அழுத்தமான கவிதை அன்பரே...

  பதிலளிநீக்கு
 2. //:(.என்ன சொல்ல.//


  ஏதாவது சொல்லுங்கள்
  சொல்லாமல் விடாதீர்கள்

  நன்றி வானம்பாடிகள்

  பதிலளிநீக்கு
 3. //

  உணர்வுப்பூர்வமான வரிகள். அழுத்தமான கவிதை அன்பரே...

  //

  நன்றி க.பாலாஜி

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்