ஆறாந்திணை - 03

நெய்தல்:- கடலும் கடல் சார்ந்த இடமும்பல்லாயிரம் உயிர் தின்றும்
அடங்காது ஆர்ப்பரிக்கும் கடல்
இரைச்சல் நிறைந்த உலகின்
சொந்தக்காரனாகிப் பயமுறுத்தும் பூதம்.

எம் மனம் போல்
அமைதியின்றிப் பாய்கிறது
நீல நீர்.

பெருகி வந்து உயிர் குடித்து
உயிர்ச் சுவடழித்து - எம்
நிம்மதியைக் குலைத்து
எம்மை நிர்க்கதியாக்கிய அலை.

மணல்த் திட்டால் மூடி
எதுவும் நடவாதது போல்
பாசாங்கு செய்யும்
நீண்ட கரை

எல்லாம் ஒன்றுகூடி
இரைகிறது
இன்னும் வேண்டுமென்று.


கருத்துகள்

 1. //எம் மனம் போல்
  அமைதியின்றிப் பாய்கிறது
  நீல நீர்.//

  அருமை தியா.

  பதிலளிநீக்கு
 2. //எதுவும் நடவாதது போல்
  பாசாங்கு செய்யும்
  நீண்ட கரை//

  அட நல்லாயிருக்குங்க...

  பதிலளிநீக்கு
 3. //எம் மனம் போல்
  அமைதியின்றிப் பாய்கிறது
  நீல நீர்.//

  அருமையான உவமை...

  பதிலளிநீக்கு
 4. மணல் திட்டு உவமை மூலம் கடல் திட்டும் கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 5. //
  கலங்க வைக்கிறீங்க தியா. :(
  //
  நன்றி வானம்பாடிகள்
  சுனாமியை நினைத்துதான் எழுதினேன்

  பதிலளிநீக்கு
 6. //
  அருமை தியா.
  //

  உங்கள் பாராட்டுக்கு நன்றி சுசி

  பதிலளிநீக்கு
 7. //
  அலைகள் ஓய்வதில்லை....
  அருமை!
  //

  உங்கள் பாராட்டுக்கு நன்றி anto

  பதிலளிநீக்கு
 8. //
  எதுவும் நடவாதது போல்
  பாசாங்கு செய்யும்
  நீண்ட கரை
  //

  //
  அட நல்லாயிருக்குங்க...
  //

  உங்கள் பாராட்டுக்கு நன்றி வசந்த்

  பதிலளிநீக்கு
 9. //
  எம் மனம் போல்
  அமைதியின்றிப் பாய்கிறது
  நீல நீர்.
  //

  //
  அருமையான உவமை...
  //

  இப்படி ஒரு நல்ல உவமை இருப்பதை இப்பதான் நான் பார்த்தேன்

  உங்கள் பாராட்டுக்கு நன்றி அகல் விளக்கு

  பதிலளிநீக்கு
 10. //
  மணல் திட்டு உவமை மூலம் கடல் திட்டும் கவிதை அருமை.
  //

  உங்கள் பாராட்டுக்கு நன்றி rajesh

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்