காதல் வானம் - பாகம் - 03


பட்டென்று வெடித்துப் பூக்கும் பருத்தியாய் இமை திறந்த சுரபி கைகளைமேலே தூக்கி சோம்பல் நீக்கி நெட்டி முறித்தாள்.


“ஒரு பொம்பிளைப் பிள்ளை நித்திரையால எழும்புற நேரத்தை பாரன்…அந்தப் புள்ளையும்இருக்குது அதைப் பாத்தெண்டாலும் வேளைக்கு எழும்பலாம் தானே…பாவம் அந்தப்பிள்ளைவிடியக்காலமையும் குருவிக் காவலுக்கு போட்டுது.”


செண்பகம் வாய்கு வந்தபடி பேசிக்கொண்டு தன் கருமங்களில் கண்ணுங்கருத்துமாயிருந்தாள்.


“அம்மா இத்தினை நாளும் நான் விடிய நாலு மணிக்கெல்லாம் எழும்புறனான்தானேஇப்பதானே இப்பிடி கனநேரம் நித்திரை கொள்ள கிடைச்சிருக்குது…கேட்டால் வேளைக்குஎழும்பி செய்து தருவன்தானே அதுக்கேனணை இப்பிடி கத்துறாய்…”


“அதில்லை மோனே கொப்பா வயலுக்கு வரப்பு வெட்ட போனவர்…சுமதியும் குருவிக் காவலுக்கு குளத்தடி வயலுக்கு போட்டாள். சாப்பாடு கொண்டுபோக வேணும்…சிறுபோக விதைப்பெண்டால் சும்மாயே…”


“நான் இண்டைக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு போகட்டே அம்மா…”


“என்ன மோனே லூசுத்தனமாய் கதைக்கிறாய் கொப்பான்ரை குணம் தெரியும் தானேவயல் பக்கம் உன்னை விடக்கூடாதெண்டு பொத்திப் பொத்தி அந்தாள் வளக்குது நீ என்னண்டால்…”


“இப்ப படிப்பு இல்லைத்தானேயம்மா ஒருநாளைக்கு…”


“முதல்லை நீ எழும்பி முகத்தை கழுவி குளி பாப்பம். உன்ரை வேலையை மட்டும்நீ ஒழுங்காய் செய்தால் அதுவே கோடி புண்ணியம்…”


வெங்காயம் வெட்டிப் போட்டு பால் விட்டு கரைத்த பழங்கஞ்சிப் பானையை எடுத்துபையில் வைத்தபடி…சுமதிக்கு போட்டு வைத்திருந்த புட்டுப் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு,


“நான் போட்டு வாறன் மோனே…”

என்றபடி செண்பகம் நடக்கத் தொடங்கினாள்.


“அம்மா நான் இண்டைக்கு காசிக்குஞ்சியோட பாலைப்பழம் வெட்ட காட்டுக்கு போறன்…அப்பாட்டை நேற்றைக்கே சொல்லிட்டன் அவர் போகச்சொல்லி சொன்னவர்எதுக்கும் ஒருக்கால் இப்பவும் சொல்லி விடுங்கோ…”


செண்பகம் தொலைவில் சென்று மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்தவள்தானும் காட்டுக்கு போக வெளிக்கிட்டாள். இதுவரை நாளில் அவள் பலமுறைபாலைப்பழம், வீரைப்பழம், உலுவிந்தம்பழம், கரம்பைபழம் பிடுங்க காட்டுக்குபோயிருக்கிறாள்.

அப்ப எல்லாம் தகப்பன் பக்கத்துணைக்கு போவது வழக்கம்.முதன்முறையாக தந்தையின் துணையின்றி காட்டுக்கு போகப்போகிறாள்.


“காசியண்ணையோடை எண்டால் பயமில்லை போட்டுவா…”


என்று தந்தை கூறியதுமுதல்அவளுக்கு எப்ப விடியும் எப்ப காட்டுக்கு போகலாம் என்றிருந்தது. இப்போதுஅதற்காக காத்திருக்கிறாள்…காசி பெரிய வேட்டைக்காரன் “குஞ்சி” என்றால் தான் ஊரிலை எல்லாருக்கும்அவரைத் தெரியும். “காசிக்குஞ்சி” என்றுதான் சின்ன வட்டனுகள் முதல் பெரிசுகள்வரை அவரை அழைப்பது வழக்கம்.

ஏந்தப் பெரிய மிருகம் என்றாலும் காசியை கண்டால்ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு ஓடிவிடுமளவிற்கு பெருத்த உடம்பு பலம் கொண்டமனிசன் அவர். கறுத்து பருத்த உடம்பு சுருண்டு திரண்ட கேசம் என காசியின் தோற்றமேமுதலில் பார்த்தவர்களுக்கு வயிற்றில் புளிகரைக்கும்.

ஆனால் அந்த உருவத்தினுள்இத்தனை தயவு தாட்சணியமா என்பதை அவருடன் பழகிப் பார்த்தவர்கள்தான்புரிந்து கொள்ள முடியும்.நீண்ட நேரமாக காத்திருந்த சுரபிக்கு இருப்புக்கொள்ளவில்லை எழுந்து அங்குமிங்குமாக நடந்தாள்.

காட்டுக்குப் போவதற்கான அடுக்குகளை எடுத்துக்கொண்டு வீதியை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

வேலிக் கடப்பை கடக்க… அவள் சற்றும் எதிர்பாராத விதமாக…


வளரும் ......

கருத்துகள்

  1. எவ்ளோ எளிமையா சின்ன சின்ன அலங்காரங்களோட எழுதி இருக்கீங்க நல்லா வந்திருக்குங்க

    பதிலளிநீக்கு
  2. //எவ்ளோ எளிமையா சின்ன சின்ன அலங்காரங்களோட எழுதி இருக்கீங்க நல்லா வந்திருக்குங்க
    //
    நன்றி நேசமித்ரன்

    பதிலளிநீக்கு
  3. ம்ம்ம். காணாத ஊரை, காணாத மனிதர்களை கண்முன் கொணரும் நடை. பாராட்டுக்கள் தியா.

    பதிலளிநீக்கு
  4. //
    ம்ம்ம். காணாத ஊரை, காணாத மனிதர்களை கண்முன் கொணரும் நடை. பாராட்டுக்கள் தியா.
    //

    நன்றி வானம்பாடிகள்
    என்னதான் என்றாலும் வாழ்ந்த மண்ணின் நினைவு மறக்காது
    தொடர்ந்து கருத்துக்களை எழுதிவருகிறீர்கள் நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி