இன்றுடன் ஏழுமாசம்...



அழகான அந்தக் குருவிக்கூடு
கலைபட்டுச் சிதைந்துபோய்
இன்றுடன் ஏழுமாசம்...

பொட்டின்றிப் பூவின்றி
ஆன உடையின்றி
முகத்தில் எதுவித சலனமுமின்றி
புகமறுக்கும் உணவை
சுவை மறந்து
வலிந்து திணித்துண்டு
வயிறு வளர்த்துக் காலம் கழிகிறது...





அவள் கணவன் மறைந்து
இன்றுடன் ஏழுமாசம்
அழகிய வதனம் களையிழந்து
ஒளியிழந்து - அவள்
சிரிக்க மறந்து
கவலையில் மூழ்கித்
தனக்குள் தன்னை மறைத்தபடி
தனிமையில் கல்லாய் இறுகி
இன்றுடன் ஏழுமாசம்...

அதன்பின் முதல் முறையாக
அவள் இன்று சிரிக்கக் கண்டேன்.
இன்று பிறந்த அவள் குழந்தை
"அவன் மழலைச் சிரிப்பு
கன்னக்குழி
பெரிய முழி
அத்தனையும் அவன்
அப்பன் போலவே."
பிறர் சொல்லக் கேட்டு
மீண்டும் அவள் சிரிக்கிறாள்.

கருத்துகள்

  1. ஆஹா தியா. அற்புதம். மிக மிக நெகிழ்வான கவிதை.

    பதிலளிநீக்கு
  2. ம்ம்... ரொம்ப நல்லாருக்கு தியா... எங்கயோ எதுவோ மனதைத் தொடுகிறது...

    பதிலளிநீக்கு
  3. எங்கே என் அப்பா.....மனதை நெருடுகிறது.

    பதிலளிநீக்கு
  4. நெகிழ்வான பதிவு....அப்பெண்ணின் மன நிலையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.....

    பதிலளிநீக்கு
  5. ம் இப்போ சிரிக்குமவள் குழந்தை தகப்பன் எங்கே எனும் போது, ஊரார் தகப்பனில்லா பய எனும் போதும்....நினைக்கவே கொடுமை....

    பதிலளிநீக்கு
  6. இன்றுடன் ஏழுமாசம்... இனி என்றும் நெகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  7. வானம்பாடிகள் கூறியது...

    ஆஹா தியா. அற்புதம். மிக மிக நெகிழ்வான கவிதை.

    22 டிசம்பர், 2009 9:56 பம்


    //


    நன்றி வானம்பாடிகள்

    பதிலளிநீக்கு
  8. இன்றைய கவிதை கூறியது...

    கலக்ஸ்!

    -கேயார்

    22 டிசம்பர், 2009 10:05 பம்


    //


    நன்றி கேயார்

    பதிலளிநீக்கு
  9. கலகலப்ரியா கூறியது...

    ம்ம்... ரொம்ப நல்லாருக்கு தியா... எங்கயோ எதுவோ மனதைத் தொடுகிறது...

    23 டிசம்பர், 2009 12:33 அம


    //


    நன்றி கலகலப்ரியா நீங்கள் சொல்வது சரிதான்....

    பதிலளிநீக்கு
  10. நிலாமதி கூறியது...

    எங்கே என் அப்பா.....மனதை நெருடுகிறது.
    23 டிசம்பர், 2009 2:51

    //

    நன்றியக்கா அதேதான்

    பதிலளிநீக்கு
  11. ஆரூரன் விசுவநாதன் கூறியது...

    நெகிழ்வான பதிவு....அப்பெண்ணின் மன நிலையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.....

    23 டிசம்பர், 2009 6:06 am
    நீக்கு
    //

    நன்றி ஆரூரன் விசுவநாதன் இப்படி எத்தனை எத்தனை வடுக்கள் நம்மவர் வாழ்வினில்......

    பதிலளிநீக்கு
  12. புலவன் புலிகேசி கூறியது...

    ம் இப்போ சிரிக்குமவள் குழந்தை தகப்பன் எங்கே எனும் போது, ஊரார் தகப்பனில்லா பய எனும் போதும்....நினைக்கவே கொடுமை....

    23 டிசம்பர், 2009 7:43 அம


    //

    அத்தனையும் உண்மை புலவன் புலிகேசி.

    உங்களின் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. சி. கருணாகரசு கூறியது...

    இன்றுடன் ஏழுமாசம்... இனி என்றும் நெகிழ்ச்சி!

    23 டிசம்பர், 2009 7:55 அம

    //

    நன்றி சி.கருணாகரசு

    பதிலளிநீக்கு
  14. அருமையான நெகிழவைக்கும் கவிதை தியா

    பதிலளிநீக்கு
  15. நல்ல கவிதை இது தியா
    (முதன் முதலில் உங்களின் கவிதைகளை வாசித்தேன்.
    அனைத்திற்கும் வாழ்த்துக்கள். இனி உங்களுடன் நானும்)

    பதிலளிநீக்கு
  16. ஒவ்வொரு வரியும்

    வலியைச் சொல்கிறது.

    மனதைக் கொல்கிறது

    பதிலளிநீக்கு
  17. வருத்தமும், மகிழ்ச்சியும் கலந்த உணர்வாக இருக்கும் அத்தாய்க்கு... நெகிழ்ந்தேன்..

    பதிலளிநீக்கு
  18. நெகிழ்வான கவிதை.

    எளிமையா எழுதியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  19. இது கவிதையென்று நான்
    உங்களைப் பாராட்டப்போவதில்லை

    இது ஒரு அபலையின் வாழ்வு அதை
    நீங்கள் அச்சிட்டிருக்கின்றீர்கள்
    பாச,பரிதாப,வேதனையில்.......
    வந்துதித்தது உங்கள் வலையில்!

    அப் பெண்ணுக்கு!! தையிரியம்,துணிவு
    எதிர்நீச்சல்
    தன்னம்பிக்கை ஊட்டி வளர்போம்!


    நடந்ததை சுட்டிக் காட்டாமல்...!!!

    நன்றி உங்கள் பாச உணர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  20. கலக்கல் வரிகளில் கலங்க வைத்த கவிதை.

    படிக்க சற்றே சிரமமாக உள்ளது..

    பதிலளிநீக்கு
  21. அன்புடன் மலிக்கா கூறியது...

    நெகிழ்ச்சியின் உச்சம் அருமை தியா.

    23 டிசம்பர், 2009 10:09 அம

    //


    உங்களின் பின்னூக்கத்துக்கு நன்றி மலிக்கா.

    பதிலளிநீக்கு
  22. thenammailakshmanan கூறியது...

    அருமையான நெகிழவைக்கும் கவிதை தியா

    23 டிசம்பர், 2009 10:31 அம

    //

    நன்றி thenammailakshmanan

    பதிலளிநீக்கு
  23. velkannan கூறியது...

    நல்ல கவிதை இது தியா
    (முதன் முதலில் உங்களின் கவிதைகளை வாசித்தேன்.
    அனைத்திற்கும் வாழ்த்துக்கள். இனி உங்களுடன் நானும்)

    23 டிசம்பர், 2009 11:22 அம


    //

    நன்றி velkannan உங்களின் வரவும் மகிழ்வு தருகின்றது. அடிக்கடி இந்தப்பக்கமும் வந்திட்டு போங்கள்.

    பதிலளிநீக்கு
  24. S.A. நவாஸுதீன் கூறியது...

    நெகிழ்ந்தேன்.

    கவிதை அருமை தியா

    23 டிசம்பர், 2009 11:36 அம


    //


    உங்களின் பதிலுக்கு நன்றி S.A. நவாஸுதீன்

    பதிலளிநீக்கு
  25. பிளாகர் ஈ ரா கூறியது...

    நல்ல வெளிப்பாடு தோழரே..

    //

    நன்றி ஈ.ரா என்ன இரண்டுமுறை பதில் தந்துள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  26. அம்பிகா கூறியது...

    ஒவ்வொரு வரியும்

    வலியைச் சொல்கிறது.

    மனதைக் கொல்கிறது

    23 டிசம்பர், 2009 1:56 பம்


    //


    உங்களின் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அம்பிகா

    பதிலளிநீக்கு
  27. PPattian : புபட்டியன் கூறியது...

    வருத்தமும், மகிழ்ச்சியும் கலந்த உணர்வாக இருக்கும் அத்தாய்க்கு... நெகிழ்ந்தேன்..

    23 டிசம்பர், 2009 2:02 பம்


    //


    PPattian : புபட்டியன் உங்களின் கருத்துக்கும் வரவுக்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  28. அக்பர் கூறியது...

    நெகிழ்வான கவிதை.

    எளிமையா எழுதியிருக்கீங்க.

    23 டிசம்பர், 2009 2:12 பம்


    //


    நன்றி அக்பர்

    பதிலளிநீக்கு
  29. கலா கூறியது...

    இது கவிதையென்று நான்
    உங்களைப் பாராட்டப்போவதில்லை

    இது ஒரு அபலையின் வாழ்வு அதை
    நீங்கள் அச்சிட்டிருக்கின்றீர்கள்
    பாச,பரிதாப,வேதனையில்.......
    வந்துதித்தது உங்கள் வலையில்!

    அப் பெண்ணுக்கு!! தையிரியம்,துணிவு
    எதிர்நீச்சல்
    தன்னம்பிக்கை ஊட்டி வளர்போம்!


    நடந்ததை சுட்டிக் காட்டாமல்...!!!

    நன்றி உங்கள் பாச உணர்வுக்கு.

    23 டிசம்பர், 2009 2:31 பம்


    //


    நன்றி கலா உங்களின் கருத்துக்கு. மிகவும் நீண்ட மடலில் பின்நூட்டியுள்ளீர்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. ஸ்ரீ கூறியது...

    அருமை.

    23 டிசம்பர், 2009 3:18 pm
    நீக்கு
    //

    நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு
  31. Sivaji Sankar கூறியது...

    ஆகா அருமை

    23 டிசம்பர், 2009 3:20 பம்

    //


    நன்றி Sivaji Sankar

    பதிலளிநீக்கு
  32. ஸ்ரீராம். கூறியது...

    கலக்கல் வரிகளில் கலங்க வைத்த கவிதை.

    படிக்க சற்றே சிரமமாக உள்ளது..

    23 டிசம்பர், 2009 4:44 பம்


    //

    நன்றி ஸ்ரீராம்

    என்ன புரியலை.

    எந்த இடத்தில் சிரமம் சுட்டிக்காட்டினால் நல்லது.

    பதிலளிநீக்கு
  33. பூங்குன்றன்.வே கூறியது...

    உணர்வும்,வலியும் சேர்ந்த கவிதை..

    23 டிசம்பர், 2009 6:01 பம்


    //

    உங்களின் கருத்துக்கும் வரவுக்கும் நன்றி பூங்குன்றன்.வே

    பதிலளிநீக்கு
  34. ஒவ்வொரு வரியும்

    வலியைச் சொல்கிறது....

    பதிலளிநீக்கு
  35. எங்கள் தேசத்தின் அவலம்.எத்தனை இளம் பெண்களின் வாழ்வு இப்படி !

    பதிலளிநீக்கு
  36. நசரேயன் கூறியது...

    நல்லா இருக்கு

    23 டிசம்பர், 2009 9:43 பம்


    //

    உங்களின் பாராட்டுக்கு நன்றி நசரேயன்

    பதிலளிநீக்கு
  37. சே.குமார் கூறியது...

    அற்புதம்

    23 டிசம்பர், 2009 10:06 பம்


    //

    நன்றி சே.குமார்

    பதிலளிநீக்கு
  38. kamalesh கூறியது

    ...

    ஒவ்வொரு வரியும்

    வலியைச் சொல்கிறது....

    24 டிசம்பர், 2009 2:28 அம


    //

    உண்மையை அப்படியே சொல்லியுள்ளேன். நன்றி கமலேஷ்

    பதிலளிநீக்கு
  39. ஹேமா கூறியது...

    எங்கள் தேசத்தின் அவலம்.எத்தனை இளம் பெண்களின் வாழ்வு இப்படி !

    24 டிசம்பர், 2009 5:45 அம


    //


    உண்மைதான்,

    நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  40. நல்ல நெகிழ்ச்சியான கவிதை.... வாழ்த்துக்கள் தியா....

    பதிலளிநீக்கு
  41. காவிரிக்கரையோன் MJV கூறியது...
    நல்ல நெகிழ்ச்சியான கவிதை.... வாழ்த்துக்கள் தியா....

    //

    நன்றி காவிரிக்கரையோன் MJV கூறியது...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி