உதிர்கின்ற பூக்கள்...



தன்பாட்டில் கிழியும்

நாட்காட்டியின் பக்கங்களிடையே

நல்ல நேரமும் கெட்ட நேரமும்

எழுதிச் செல்கிறது கிரகநிலை.


கேள்வி கேட்டுச் சலித்துப்போன

என் கவிதை இன்றுடன்

திடீரென என்னைப் பிரிவதாக ஓர் ஒப்பந்தம்.




இன்னமும் பெயரிடப்படாத

என் கவிதைக்கு தலைமுதல் பாதம் வரை

அலங்காரம் செய்து

அழகு பார்த்தவன் நான்.


என் வார்த்தைகளும் கேள்விகளும்

முரண்பட்டுச் சண்டையிட்டபோது

பிறப்பெடுத்துக்கொண்ட என் கவிதை

இன்றுடன் என்னிடமிருந்து

விடைபெற்றுக் கொள்கிறது.


பிரிவுத் துயரில் அவிந்து புழுங்கும்

என் இதயம்

இருபக்க விலாக்களுக்குள்

அகப்பட்டுச் சிறைவாசம் கொண்டு

அழுது புலம்புகிறது.



கருத்துகள்

  1. கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க. அதுவும் அந்த படம் simply superb.

    பதிலளிநீக்கு
  2. D.R.Ashok கூறியது...
    நல்லாயிருக்குங்க :)

    December 4, 2009 6:22 பம்


    //



    உங்களின் வரவுக்கும் பின்னூக்கத்துக்கும் நன்றிங்க

    பதிலளிநீக்கு
  3. கல்யாணி சுரேஷ் கூறியது...
    கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க. அதுவும் அந்த படம் simply superb.

    December 4, 2009 7:34 பம்


    //



    கல்யாணி சுரேஷ், உங்களின் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  4. அதெல்லாம் விடை குடுக்கிறதில்லை. விடாதீங்க தியா. நல்லாருக்கு படமும் கவிதையும்

    பதிலளிநீக்கு
  5. அகல்விளக்கு கூறியது...
    நல்லாருக்கு நண்பா...

    December 4, 2009 8:17 பம்


    //
    நன்றிங்க அகல்விளக்கு

    பதிலளிநீக்கு
  6. வானம்பாடிகள் கூறியது...
    அதெல்லாம் விடை குடுக்கிறதில்லை. விடாதீங்க தியா. நல்லாருக்கு படமும் கவிதையும்

    December 4, 2009 8:24 பம்


    //



    நன்றி வானம்பாடிகள்

    சும்மா கவிதைக்காக எழுதினேன். அவ்வளவுதான் ,

    மற்றப்படி கவிதை மட்டுமல்ல முடிந்தவரை என் பேனா முனை ஓயாது சுரக்கும்.

    பதிலளிநீக்கு
  7. "இன்னமும் பெயரிடப்படாத
    என் கவிதைக்கு தலைமுதல் பாதம் வரை
    அலங்காரம் செய்து
    அழகு பார்த்தவன் நான்."
    ...........கவிதை, உருவாக்கும் கவிஞருக்கு ஒரு குழந்தைதான்.
    அழுகுபடுத்தியுள்ள வார்த்தைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  8. நேசமித்ரன் கூறியது...
    நல்லாருக்கு நண்பா

    December 4, 2009 8:51 பம்


    //



    நன்றி நேசமித்ரன்

    பதிலளிநீக்கு
  9. Chitra கூறியது...
    "இன்னமும் பெயரிடப்படாத
    என் கவிதைக்கு தலைமுதல் பாதம் வரை
    அலங்காரம் செய்து
    அழகு பார்த்தவன் நான்."
    ...........கவிதை, உருவாக்கும் கவிஞருக்கு ஒரு குழந்தைதான்.
    அழுகுபடுத்தியுள்ள வார்த்தைகள் அருமை.

    December 4, 2009 9:06 பம்


    //



    நன்றி Chitra முதல் முறையாக வந்திருக்கிறிங்கள்

    நன்றி மீண்டும் வருக

    பதிலளிநீக்கு
  10. பிரிவுத் துயரில் அவிந்து
    புழுங்கும் என் இதயம்
    இருபக்க விலாக்களுக்குள்
    அகப்பட்டுச் சிறைவாசம் கொண்டு
    அழுது புலம்புகிறது.....

    கவிதை சோகம் சொல்லி செல்கிறது இறக்கி வையுங்கள் கவிதைகளில், இதயம் அமைதி பெறும். .....

    பதிலளிநீக்கு
  11. நல்ல வேளை விடை கொடுத்தீங்க..! :).. இல்லைனா நாம மிஸ் பண்ணி இருப்போம்.. =)

    பதிலளிநீக்கு
  12. அதெப்பிடி உங்களுக்குள்ளேயே உணர்வோட ஊறியிருக்கிற கவிதைக்கு விடை கொடுக்கலாம் தியா !சூப்பர்.

    பதிலளிநீக்கு
  13. நிலாமதி கூறியது...
    பிரிவுத் துயரில் அவிந்து
    புழுங்கும் என் இதயம்
    இருபக்க விலாக்களுக்குள்
    அகப்பட்டுச் சிறைவாசம் கொண்டு
    அழுது புலம்புகிறது.....

    கவிதை சோகம் சொல்லி செல்கிறது இறக்கி வையுங்கள் கவிதைகளில், இதயம் அமைதி பெறும். .....

    December 4, 2009 9:55 பம்


    //

    நன்றி நிலாமதியக்கா அய்யய்யோ சோகம் எல்லாம் இல்லை .

    சும்மா எழுதினேன்.

    பதிலளிநீக்கு
  14. ஆ.ஞானசேகரன் கூறியது...
    படமும். வரிகளும் அழகு அருமை

    December 4, 2009 11:38 பம்


    //



    ஆ.ஞானசேகரன் உங்களின் பின்னூக்கத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  15. பிரியமுடன்...வசந்த் கூறியது...
    படம் கவிதை இரண்டும் சோகம்

    :(

    December 5, 2009 1:01 அம


    //

    நன்றி வசந்த் எனக்கு சோகமில்லை கவிதைக்காக மட்டுமே எழுதினேன்.

    பதிலளிநீக்கு
  16. கலகலப்ரியா கூறியது...
    நல்ல வேளை விடை கொடுத்தீங்க..! :).. இல்லைனா நாம மிஸ் பண்ணி இருப்போம்.. =)

    December 5, 2009 1:50 அம


    //



    நானாவது விடை குடுக்கிறதாவது ஏதோ என்னால முடிந்ததை தொடர்ந்து எழுதுவேன்.

    நன்றி கலகலப்ரியா

    பதிலளிநீக்கு
  17. ஹேமா கூறியது...
    அதெப்பிடி உங்களுக்குள்ளேயே உணர்வோட ஊறியிருக்கிற கவிதைக்கு விடை கொடுக்கலாம் தியா !சூப்பர்.

    December 5, 2009 4:50 அம


    //



    நன்றி ஹேமா உங்களின் பாராட்டுக்கு

    பதிலளிநீக்கு
  18. வரிகள் வீரியமாக இல்லை, இல்லை மென்மையாக விழுந்திருக்கின்றன....அருமை.

    பதிலளிநீக்கு
  19. //
    ஸ்ரீராம். கூறியது...
    வரிகள் வீரியமாக இல்லை, இல்லை மென்மையாக விழுந்திருக்கின்றன....அருமை.

    December 5, 2009 9:28 AM

    //

    உண்மைதான் ஸ்ரீராம் என்ன செய்வது ஒன்றுமே முடியலை
    நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  20. நன்று...

    தங்கள் பரிசுக்கு நன்றி தியா...தாமதத்திற்கு மன்னிக்கவும்..

    பதிலளிநீக்கு
  21. //இன்னமும் பெயரிடப்படாத


    என் கவிதைக்கு தலைமுதல் பாதம் வரை


    அலங்காரம் செய்து


    அழகு பார்த்தவன் நான்.//

    அருமை தியா உங்கள் பெயரிடப்படாத கவிதை மிக அழகு

    பதிலளிநீக்கு
  22. அடைத்து வைத்து அலங்காரம்
    செய்து அழகு பார்த்தால்.........
    போதுமா?
    {இது அந்தக் காலம்}
    வார்த்தை{வாழ்க்கை} சுதந்திரம்
    வேண்டாமா??

    இப்போது புதுமைப் பெண்
    புதுக் கவிதை
    எதிலும் புதுமை{அடக்குமுறை}
    அழிந்து விட்டது அதனால்......
    இன்னும் புதுமையாய் ...
    படைக்க புறப்பட்டது போலும்..
    உங்கள் கவிதை,.

    இது பிரிவல்ல...விடுதலை.

    பதிலளிநீக்கு
  23. //என் வார்த்தைகளும் கேள்விகளும்


    முரண்பட்டுச் சண்டையிட்டபோது


    பிறப்பெடுத்துக்கொண்ட என் கவிதை


    இன்றுடன் என்னிடமிருந்து


    விடைபெற்றுக் கொள்கிறது//

    கலக்ஸ்!

    -கேயார்

    பதிலளிநீக்கு
  24. ஈ ரா கூறியது...
    நன்று...

    தங்கள் பரிசுக்கு நன்றி தியா...தாமதத்திற்கு மன்னிக்கவும்..

    December 5, 2009 3:07 பம்


    //

    நன்றி ஈ.ரா

    பதிலளிநீக்கு
  25. thenammailakshmanan கூறியது...
    //இன்னமும் பெயரிடப்படாத


    என் கவிதைக்கு தலைமுதல் பாதம் வரை


    அலங்காரம் செய்து


    அழகு பார்த்தவன் நான்.//

    அருமை தியா உங்கள் பெயரிடப்படாத கவிதை மிக அழகு

    December 5, 2009 3:12 பம்


    //



    நன்றி thenammailakshmanan உங்களின் பின்னூக்கத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  26. //
    Kala கூறியது...
    அடைத்து வைத்து அலங்காரம்
    செய்து அழகு பார்த்தால்.........
    போதுமா?
    {இது அந்தக் காலம்}
    வார்த்தை{வாழ்க்கை} சுதந்திரம்
    வேண்டாமா??

    இப்போது புதுமைப் பெண்
    புதுக் கவிதை
    எதிலும் புதுமை{அடக்குமுறை}
    அழிந்து விட்டது அதனால்......
    இன்னும் புதுமையாய் ...
    படைக்க புறப்பட்டது போலும்..
    உங்கள் கவிதை,.

    இது பிரிவல்ல...விடுதலை.


    //
    நன்றி கலா என் கவிதை பற்றிய உங்களின் புரிதலுக்கும் பின்னூக்கத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  27. இன்றைய கவிதை கூறியது...
    //என் வார்த்தைகளும் கேள்விகளும்


    முரண்பட்டுச் சண்டையிட்டபோது


    பிறப்பெடுத்துக்கொண்ட என் கவிதை


    இன்றுடன் என்னிடமிருந்து


    விடைபெற்றுக் கொள்கிறது//

    கலக்ஸ்!

    -கேயார்

    December 5, 2009 6:58 பம்


    //

    நன்றி இன்றைய கவிதை

    பதிலளிநீக்கு
  28. வலி தரும் கவிதை.வார்த்தைகள் அற்புதம்.
    தாமதமான பின்னூட்டத்திற்கு வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  29. பூங்குன்றன்.வே கூறியது...
    வலி தரும் கவிதை.வார்த்தைகள் அற்புதம்.
    தாமதமான பின்னூட்டத்திற்கு வருந்துகிறேன்.

    December 6, 2009 10:32 அம


    //



    நன்றி பூங்குன்றன்.வே

    பதிலளிநீக்கு
  30. MAHA கூறியது...
    kavithai super

    December 6, 2009 10:39 AM


    MAHA கூறியது...
    kavithai super

    December 6, 2009 10:39 AM



    //
    நன்றி MAHA

    பதிலளிநீக்கு
  31. மொத்த அலங்காரங்களை உள்வாங்கி விட்டு பின்னூட்டம் பகுதிக்கு உள்ளே வரும் போது தான் மூச்சே வருகிறது. எத்தனை நாள் பாடுபட்டு உழைத்தீர்கள் இத்தனை அலங்காரங்களுக்கு.

    எத்தனை சிறப்பான விசயங்கள் உள்ள உங்கள் இடுகை பின்புலம் கருப்பு என்பது மொத்த இலங்கையின் குறிபொருளா?

    பதிலளிநீக்கு
  32. ஜோதிஜி கூறியது...

    மொத்த அலங்காரங்களை உள்வாங்கி விட்டு பின்னூட்டம் பகுதிக்கு உள்ளே வரும் போது தான் மூச்சே வருகிறது. எத்தனை நாள் பாடுபட்டு உழைத்தீர்கள் இத்தனை அலங்காரங்களுக்கு.

    எத்தனை சிறப்பான விசயங்கள் உள்ள உங்கள் இடுகை பின்புலம் கருப்பு என்பது மொத்த இலங்கையின் குறிபொருளா?

    December 8, 2009 4:24 பம்


    //

    ம்

    சந்தோசமாயிருக்கு

    அப்படித்தான் நானும் நினைக்கிறேன்

    நன்றி ஜோதிஜி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி