எங்கள் சாம்பல் மேட்டில்...



காட்டுமிராண்டித்தனமாகவும்

நயவஞ்சகமாகவும்

எம் முன்னோர்கள்

தோற்கடிக்கப்பட்ட

எங்கள் மண்ணில்,

கனவான்களாகவும்

கடவுளர்களாகவும்

எங்களில் தம்மைத் திணித்தபடி

இன்னும் எங்கள்மேல்

தம்வன்மங்களைக் கொட்டித் தீர்க்கப்

புறப்பட்டுக் கொண்டிருக்கிறது

ஒரு கூட்டம்.


மீட்பர்கள் என்று

தம்மை அழைத்தபடி

தமக்குத் தாமே பட்டங்கள் சூட்டிப்

பாணங்கள் ஏவி

எம்மைச் சூழ்ந்து கொண்டனர்.


தம்பக்கம் சார்ந்தால் அரியாசனம்

இல்லையேல் அரக்கர் நாமம்

காலங் கடந்தும்

இதுவே தொடர்கதையாய்

நீண்டு கொண்டிருந்தது.

மறைந்திருந்து பாணங்கள்

ஏவுவதில் வல்லவர்கள்

மீண்டும் நாவாய்கள் ஓட்டிப்

புதர்களைக் கடந்து

கரையைத் தொட்டனர்.


அம்புகள் வீழ்ந்து மீண்டும்

ஆயிரம் துளைகள் போட்டன.

நஞ்சு தடவிய பாணங்கள் நடுவில்

பிஞ்சுகள் கூட வெந்து வதங்கினர்.


உமது பாணத்தின் நுதியல்

தர்மம் குடியிருப்பதால்

பாராமுகமாய் உலகம் இருக்குமா?

உங்கள் தர்மம், நீதி, அகிம்சையென்ற

பசப்பு வார்த்தைகள்

வரும் நாளில் காற்றில் பறக்கலாம்.

தன்நெஞ்சே தன்னைச் சுட்டு

நீவீர்

செத்தும் போகலாம்.


அன்றி,


காலங் கடக்கும் பின்னொரு நாளில்

உங்கள் பாதங் கழுவி

திருவடி தொழுதோரை

அரக்கர் என்ற அவப் பெயர் நீக்கி

அரியணை ஏற்றி ஆட்சியில் அமர்த்தலாம்.

அவர் காலந்தோறும் வாயில் காத்து

நன்றியுடன் உம் காலடி கிடக்கலாம்.


ஆனால்!!!


எங்கள் சாம்பல் மேட்டில்

எருக்கலைகள் பூக்காது.

ஒரு இனத்தின் சாபம்,

அவர்தம் வேட்கை

காலங்கடந்தும்

இன்னும் நீளும்

வலிமையாக....

கருத்துகள்

  1. சத்தியம் தோய்ந்த வலிகள் இவை தியா. நடக்கும்.

    பதிலளிநீக்கு
  2. //தன்நெஞ்சே தன்னைச் சுட்டு

    நீவீர்

    செத்தும் போகலாம்.
    //

    கண்டிப்பா....

    பதிலளிநீக்கு
  3. //
    சத்தியம் தோய்ந்த வலிகள் இவை தியா. நடக்கும்.
    //

    வானம்பாடிகள், உண்மைகள் நீண்ட காலம் உறங்காது

    பதிலளிநீக்கு
  4. வசந்த் உங்கள் பதிலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அனல் தெறிக்கும் கனமான வரிகள்

    பதிலளிநீக்கு
  6. //எங்கள் சாம்பல் மேட்டில்

    எருக்கலைகள் பூக்காது.

    ஒரு இனத்தின் சாபம்,

    அவர்தம் வேட்கை

    காலங்கடந்தும்

    இன்னும் நீளும்

    வலிமையாக.... //

    உண்மையான வரிகள்....

    பதிலளிநீக்கு
  7. //
    நல்லா இருக்கு தியா

    வலி வாதை
    //

    நன்றி நேசமித்ரன் உங்கள் பதிலுக்கு.

    என்று தணியும் இந்த வலியும் வேதனையும் ?

    பதிலளிநீக்கு
  8. //
    அனல் தெறிக்கும் கனமான வரிகள்
    //

    நன்றி ஈ ரா உங்கள் பதிலுக்கு.

    முதல் முறையாக வந்திருக்கிறீர்கள் தொடர்ந்து கருத்துரையுங்கள்

    பதிலளிநீக்கு
  9. //
    உண்மையான வரிகள்....
    //

    புலவன் புலிகேசி உங்கள் பதிலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. வார்த்தைகள் மீதமில்லை தியா ...

    ஆர்த்தெழும் கோபம் சொல்ல

    பதிலளிநீக்கு
  12. //அம்புகள் வீழ்ந்து மீண்டும்

    ஆயிரம் துளைகள் போட்டன.

    நஞ்சு தடவிய பாணங்கள் நடுவில்

    பிஞ்சுகள் கூட வெந்து வதங்கினர்//

    எமக்கு மட்டும் தான் இப்படி.... உலகத்தின் கண்ணில் அது பயங்கரவாதத்திடம் இருந்து மீட்பு....மனிதம் தொலைந்து விட்து..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி