சமாந்தரக் கோடுகள்

வெட்டிப் போட்ட
என் தோட்டத்து
வேலிக் கதிகாலாய்
முளைத்துவிட ஆசை கொண்டேன்.

வெட்டி எறிந்த நகமென
உமிழ்ந்து துப்பினர் ஒருசிலர்.

சுவரில் எறிந்த பந்தாகி
மீண்டும்
அவரிடமே மீண்டன
அவர் தம் சுடுசொற்கள்.

கட்டையில் கட்டிய மாடாகி
உன் கொல்லையில்
முன்னர் வட்டமிட்ட
என்வலி புரிய
நியாயமில்லைத்தானே உனக்கு.

கணக்காளன் வீட்டுக்
கணிணி விசைப் பலகையின்
இலக்கங்கள் போல
செத்துக் கொண்டிருக்கிறேன்
நானிங்கு.

நீயோ !

முள்ளுக் கரண்டியில்
இறைச்சி ஊட்டி
"பீட்ஸா" கடித்து
"பியர்" குடித்து
மகிழ்ந்துகொண்டிருப்பாய்
இந்நேரம்.........


கருத்துகள்

  1. கவிதையின் ஆரம்பமே அசத்தல்.வலித்தாலும் கவிதை சுகமாயிருக்கிறது தியா.

    பதிலளிநீக்கு
  2. யார் மீது கோபம்..........நீங்கள் கட்டையில் கட்டிய அதுவாய் சுற்றி கொண்டிருக்க அங்கு இறைச்சியும் பிசாவும் பியரும் சுவைக்கும் அது(அவன்) மீது கோபமா? வலி கண்டு தானே வழி பிறக்கும் . நம்பிக்கையுடன் இருங்கள். வழி இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. ////

    ஹேமா கூறியது...
    கவிதையின் ஆரம்பமே அசத்தல்.வலித்தாலும் கவிதை சுகமாயிருக்கிறது தியா.

    October 31, 2009 2:44 அம

    ///


    நன்றி ஹேமா உங்கள் பாராட்டுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. ////

    நிலாமதி கூறியது...
    யார் மீது கோபம்..........நீங்கள் கட்டையில் கட்டிய அதுவாய் சுற்றி கொண்டிருக்க அங்கு இறைச்சியும் பிசாவும் பியரும் சுவைக்கும் அது(அவன்) மீது கோபமா? வலி கண்டு தானே வழி பிறக்கும் . நம்பிக்கையுடன் இருங்கள். வழி இருக்கும்.

    October 31, 2009 4:43 AM
    ////

    ஐயோ அக்கா, யார் மீதும் கோபமில்லை இது சும்மா எழுதினது.

    சும்மா பொதுவா சொன்னேன் அவ்வளவுதான் .

    பதிலளிநீக்கு
  5. //கட்டையில் கட்டிய மாடாகி
    உன் கொல்லையில்
    முன்னர் வட்டமிட்ட
    என்வலி புரிய
    நியாயமில்லைத்தானே உனக்கு. //

    தியா,

    ம்ம்ம்...மறந்திருப்பாங்கள்.

    எல்லாரும் இப்படித்தான் போல...!

    பதிலளிநீக்கு
  6. //கணக்காளன் வீட்டுக்
    கணிணி விசைப் பலகையின்
    இலக்கங்கள் போல
    செத்துக் கொண்டிருக்கிறேன்
    நானிங்கு. //

    கணக்காளன் வீட்டுக் கணிணிப் பலகை....நல்ல உதாரணம் தியா....நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. //
    கட்டையில் கட்டிய மாடாகி
    உன் கொல்லையில்
    முன்னர் வட்டமிட்ட
    என்வலி புரிய
    நியாயமில்லைத்தானே உனக்கு. //

    அருமை...

    மாடு என்று பொதுவிலேயே கூறிஇருப்பதால் இது காளைக்கும் பசுவிற்கும் சேர்ந்தே பொருந்தும் என்றும் நினைக்கிறேன் - இன்றைய சூழலில்...

    பதிலளிநீக்கு
  8. நல்லா இருக்குங்க....

    வாழ்த்துகள் !

    அன்பின்
    ராஜன்

    பதிலளிநீக்கு
  9. கோபம் கலந்த ...அதே சமயம் இயலாமையையையும் சொல்ல்கிறது கவிதை...ந‌ல்லாயிருக்கு...வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. ///

    சத்ரியன் கூறியது...
    //கட்டையில் கட்டிய மாடாகி
    உன் கொல்லையில்
    முன்னர் வட்டமிட்ட
    என்வலி புரிய
    நியாயமில்லைத்தானே உனக்கு. //

    தியா,

    ம்ம்ம்...மறந்திருப்பாங்கள்.

    எல்லாரும் இப்படித்தான் போல...!

    October 31, 2009 8:47 AM

    ///

    என்ன சத்திரியன் வழியும் விரக்தியும் தெரியுது ஏதும் அனுபவமா?

    பதிலளிநீக்கு
  11. ///

    புலவன் புலிகேசி கூறியது...
    //கணக்காளன் வீட்டுக்
    கணிணி விசைப் பலகையின்
    இலக்கங்கள் போல
    செத்துக் கொண்டிருக்கிறேன்
    நானிங்கு. //

    கணக்காளன் வீட்டுக் கணிணிப் பலகை....நல்ல உதாரணம் தியா....நல்லா இருக்கு.

    October 31, 2009 9:38 AM

    ///


    ஆமாம் புலவன் புலிகேசி நானும் எழுதியபின் பார்த்தேன் பொருத்தமாகத்தான் இருக்கிறது.
    நன்றி உங்கள் பதிலுக்கு.

    பதிலளிநீக்கு
  12. ///

    ஈ ரா கூறியது...
    //
    கட்டையில் கட்டிய மாடாகி
    உன் கொல்லையில்
    முன்னர் வட்டமிட்ட
    என்வலி புரிய
    நியாயமில்லைத்தானே உனக்கு. //

    அருமை...

    மாடு என்று பொதுவிலேயே கூறிஇருப்பதால் இது காளைக்கும் பசுவிற்கும் சேர்ந்தே பொருந்தும் என்றும் நினைக்கிறேன் - இன்றைய சூழலில்...

    October 31, 2009 10:20 AM

    ///

    ஆமாம் பொதுவாத்தான் சொன்னேன். உங்களுக்கு கற்பூர மூளை
    டப்பெண்டு பிடிச்சிட்டிங்கள்
    நன்றி ஈ ரா.

    பதிலளிநீக்கு
  13. ////

    வானம்பாடிகள் கூறியது...
    வழக்கம்போல் அருமை தியா.

    October 31, 2009 11:19 AM


    /////


    நன்றி வானம்பாடிகள்

    பதிலளிநீக்கு
  14. //
    rajan RADHAMANALAN கூறியது...
    நல்லா இருக்குங்க....

    வாழ்த்துகள் !

    அன்பின்
    ராஜன்

    October 31, 2009 11:31 AM
    //

    நன்றி ராஜன்

    பதிலளிநீக்கு
  15. ////

    சி. கருணாகரசு கூறியது...
    கோபம் கலந்த ...அதே சமயம் இயலாமையையையும் சொல்ல்கிறது கவிதை...ந‌ல்லாயிருக்கு...வாழ்த்துக்கள்.

    October 31, 2009 12:02 PM

    ///

    ஐயோ எனக்கு கோபப்படத் தெரியாதுங்க சார்
    உங்கள் பதிலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சி. கருணாகரசு.

    பதிலளிநீக்கு
  16. அருமை ஆனால் மனசு இன்னும் எதிர்பார்க்கிறது உஙகள் கவிதைகளிடம் இருந்து
    :)

    பதிலளிநீக்கு
  17. ////
    கலகலப்ரியா கூறியது...
    அருமை..

    October 31, 2009 1:49 PM

    ///

    கலகலப்ரியா நன்றி

    பதிலளிநீக்கு
  18. ////

    நேசமித்ரன் கூறியது...
    அருமை ஆனால் மனசு இன்னும் எதிர்பார்க்கிறது உஙகள் கவிதைகளிடம் இருந்து
    :)

    October 31, 2009 5:46 PM

    ////

    நன்றி நேசமித்திரன் முடிந்தவரை முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. ////

    ஸ்ரீ கூறியது...
    அழகான கவிதை.

    October 31, 2009 6:17 PM
    ////


    நன்றி ஸ்ரீ.

    பதிலளிநீக்கு
  20. ஒரு வித இயலாமையோடு உங்களின் ஆதங்கம் வெளிப்படுகிறது.. நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. ////
    iNbAh கூறியது...
    ஒரு வித இயலாமையோடு உங்களின் ஆதங்கம் வெளிப்படுகிறது.. நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்

    November 1, 2009 4:05 PM

    ////

    ஐயோ இயலாமை எதுவும் இல்லை சும்மாதான் எழுதினேன். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்