ஆறாந்திணை
பனியும் பனி சார்ந்த இடமும்
(குறிப்பு :- முன்னர் ஐந்து நிலங்கள் பற்றி எழுதியுள்ளேன்.
அவை அன்பின் ஐந்திணை பற்றிய புதிய பார்வை. ஆனால் இது ஆறாந்திணை இதற்கு பொருத்தமான (குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பதைப்போல்) ஒரு மரத்தின் பெயரை வைப்பீர்களா? எனக்கு புலம் பற்றிய அனுபவம் கிடையாது அதனால்தான் )மேலை நாடெங்கும்
ஈழத்தின்
ஏழைப் புத்திரர்கள்
உழைத்துழைத்து
வரி கட்டிவளம் பெருக்கி;
வாழ எண்ணித்
திசை நகர்ந்து
சமுத்திரத்து மீன்களாக
சகதியிலேமாட்டி மாட்டி
யாசித்துக் கிடக்கின்றார்.
*** *** ***
தன் தேசம் அங்கே
தீப்பற்றி எரிகையிலே
மக்களங்கே
தெருத் தெருவாய் அலைகையிலே
வாயில் நுழைய மறுக்கும்
ஓர் மேலை நாட்டில்
ஓர் வீட்டில்,
இன்றைய துயர்ச் செய்தியை
தொலைக்காடசி பார்த்தோ
அன்றி;
யாதொன்றில் கேட்டோ
மனம் சோர்ந்து
தூங்கிப் பின்கண் விழிப்பான்.
*** *** ***
காலத்தின் சதியினாலே
அவனுமோர்அகதிதான்.
நகர் நகராய்நாடு நாடாய்
விட்டலையும்
ஈழத்து அகதியவன்.
இணைபிரிந்த
தனியாடு.
*** *** ***
ஊரில் உறவுகள்
நிலை அறிவான்
தீ எரியும் தேசமாக
துயர் பெருகும்
உறவுகளின்கதை அறிவான்.
நாளை துயர் முட்டி
வந்த திசைச்சுவடு தெரியாமல்
மடிந்தும் போகலாம்.
கடல் வந்து அலை மோதி
மணல் மூடித் திட்டாகி
சிறு நண்டுப்படம் போல
சிலவேளைஅவர் வாழ்வு
மறைந்தும் போகலாம்.
*** *** ***
வாழ்க்கை சீவியமாகி...
போராட்டமாய் இன்னும்
தொடர்கிறது நாட்கள்...
ஆனால்?
பின்னொரு நாளில்
அகதித் தேசத்து
அடிமைகள் அனைவரும்
முடிவிலாப் பெருவெளி கடந்து
நாடு மீள்கையில்...
அவலம் மட்டுமே
பேசித் துயருறும்
அந்தர நிலைக்குள்ளும்
தள்ளப் படலாம்.
*** *** ***
பிணங்களால் நிறைந்து
இரத்தத்தில்குளித்து
இன்னும் நிறம் மாறி
வெண்மணல்சிவக்கிறது.
வயிறொட்டும் பட்டினியும்
உடலுருக்கும்நோயும் வந்து
உயிரறுக்கும்.
கந்தகப் புகையாலே எழுதப்பட்ட
தினச் சாவுக் குறிப்புக்கள்
இல்லாமல் என் ஊர்
என் நகரம்
என் நாடு
இனிஎன்று மீளும்???
விடை தெரியாத கேள்வி நண்பா:(
பதிலளிநீக்குகனக்க செய்த வரிகளும் கேள்விகளும்..
பதிலளிநீக்கு//பிணங்களால் நிறைந்து
பதிலளிநீக்குஇரத்தத்தில்குளித்து
இன்னும் நிறம் மாறி
வெண்மணல்சிவக்கிறது.//
முடிவில்லா துயரம்
முடிவுருமா!!
மடிந்த வடுக்களின்
நிறம் சிவந்து சிவந்து
சீவியமாய்...
இந்த வரத்தையும் பாருங்கள்...
http://sankar-mylyrics.blogspot.com/2009/10/blog-post_11.html
//
பதிலளிநீக்குவிடை தெரியாத கேள்வி நண்பா:(
//
வானம்பாடிகள் என்ன உங்களுக்குமா
நன்றி
//
பதிலளிநீக்கு:(
//
நேசமித்ரன் நன்றி
//
பதிலளிநீக்குகனக்க செய்த வரிகளும் கேள்விகளும்..
//
ஈ ரா உண்மைதான் என்ன செய்வது
//
பதிலளிநீக்குமுடிவில்லா துயரம்
முடிவுருமா!!
மடிந்த வடுக்களின்
நிறம் சிவந்து சிவந்து
சீவியமாய்...
இந்த வரத்தையும் பாருங்கள்...
http://sankar-mylyrics.blogspot.com/2009/10/blog-post_11.html
//
நன்றி சந்தான சங்கர்
நான் பார்த்தேன்
//வயிறொட்டும் பட்டினியும்
பதிலளிநீக்குஉடலுருக்கும்நோயும் வந்து
உயிரறுக்கும்.//
கொடுமை...மனம் வலிக்கிறது தியா...என்னைப் போன்றவர்கள் வருத்தம் மட்டும் தான் பட முடிகிறது.
வலியை உணர்த்தும் வார்த்தைகள்!
பதிலளிநீக்குவலியாய் போன வாழ்க்கை!
என்றுதான் விடியல் வருமோ?
புலவன் புலிகேசி, அழுவதை தவிர நாம் என்னதான் செய்வது ?
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குவலியை உணர்த்தும் வார்த்தைகள்!
வலியாய் போன வாழ்க்கை!
என்றுதான் விடியல் வருமோ?
//
நன்றி தமிழ் நாடன் ,
விடிவா அப்படிஎன்றால் என்ன என்றுதான் கேட்க தோணுது
//கந்தகப் புகையாலே எழுதப்பட்ட
பதிலளிநீக்குதினச் சாவுக் குறிப்புக்கள்
இல்லாமல் என் ஊர்
என் நகரம்
என் நாடு
இனிஎன்று மீளும்???//
ம்...... எப்போது மீளுமோ!!!!
நன்றாக இருக்கிறது...வாழ்த்துகள்
வலிகள் மட்டுமே மிச்சமிருக்குது தோழா...!
பதிலளிநீக்குஉங்களது வரிகள் சூடாக தெறிக்கிறது...
//"பிணங்களால் நிறைந்து
பதிலளிநீக்குஇரத்தத்தில்குளித்து
இன்னும் நிறம் மாறி
வெண்மணல்சிவக்கிறது" //
கனத்த இதயத்துடன் - உன்
கவிதைக்கான களமான நம்
தாய்மண்ணை கண்முன் நினைக்கிறேன்
தங்கச்சி!... - தாளமுடியா வருத்தத்துடன்...
மென்மேலும் உன் எழுத்துக்களை எதிர்நோக்கி...
இளவழுதி