டிசம்பர் 30, 2015

சாமக்கவி












வாயு தேவனும் வருண பகவானும்
சங்கமித்து இசை பயிலும்
ஒரு பனிக்கால இரவின்
முன்சாமப் பொழுதொன்றில்
கட்டிலில் சாய்ந்தபடி
கவிதை எழுதத் தொடங்கினேன்.
கவிதை நீண்டு கதையாகிப் பின்
தொடர்கதையாய் நீண்டது.
சாளரம் திறந்து எட்டிப் பார்த்தேன்.
தீபாவளிக்கு இல்லாத விடுமுறை
திருக்கார்த்திகையில் வந்ததால்
வானத்து விண்மீன்கள்
நிலாவைத் துணைக்கழைத்தன விளையாட .
ஆழ்மனதில் ஒரு கவிதை தோன்றியபோது
எழுந்து விளக்கை அணைத்தேன்
வீணை மீட்டியபடி
பாடத் தொடங்கினேன்
ஒரு சாமகானம்.

– தியா –


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-