கைப்பேசிக் காதல்








முந்தியெல்லாம் நான்
சிக்கனத்தில் வாழ்ந்த போது
சொப்பனத்தில் மிதந்திருந்தேன்
காசைச் சேர்த்து நல்ல
கனவானாய் வாழ எண்ணிக்
கனவில் மிதந்திருந்தேன்.
கைப்பேசி வந்த பின்னர் – என்
கனவெல்லாம் ஓடிப் போச்சு  – இனி
எப்போது பணம் சேர்த்து
பந்தாவாய் நான் வாழ்வேன்?
கைப்பேசிக் காதலாலே
கைப்பணமும் கரைந்து போச்சு
கண்மணியாள் வந்த பின்னர்
காதல் செய்த வேலையாலே
கைப்பேசி ஒன்றைக்
கடனுக்கு வாங்கி வந்தேன்.
செல்லுக்கு (Cell Phone) பில்லு (Bill) கட்டி
ஓடாய்த் தேய்ந்து போனேன்.
கைப்பேசிக் காதலாலே – அதை
நெஞ்சருகில் சொருகி வைத்தேன்.
சட்டைப் பையில் வைத்தால்
கான்சர் (Cancer) வந்து சேருமென்று
பலபேர் கதையுரைத்தார்.
சட்டைப் பையை விட்டு விட்டு
கால் சட்டைப் பையில் போட்டு வைத்தேன்.
ஆண்மை கெட்டுப் போகுமென்று
அன்புடையோர் சொல்லி நின்றார்.
ஐயகோ என் செய்வேன்?
கைப்பேசிக் காதலாலே
கடனாளி ஆன பின்னர் – என்
கனவான் நினைப்பும் போச்சு
காசும் கரைந்து போச்சு.
இந்த லச்சணத்தில்
நெஞ்சும் கெட்டு
ஆண்மை இன்றி
ஆதாயம் எதுமில்லாக்
கைப்பேசிக் காதலாலே
ஆனதென்ன மிச்சம்?
என்றாலும் விட்டேனா…
கைப்பேசிக்கென்றொரு
கணக்கான சட்டை தைத்தேன்.
கால் கொலுசு போலதனை – என்
காலணியில் கொலுவி விட்டேன்.
நெஞ்சுக்கும் நிம்மதி – என்
ஆண்மைக்கும் காப்புறுதி.

-தியா-

கருத்துகள்

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்