தேவதைகள் உலவுகிற தேசம்




மீண்டும் கோடை

எட்டிப் பார்க்கிர்றது
எங்கள் ஊரின்
நினைவுகளைச்
சுமந்தபடி
நிழற்படமாய் நான்.....


கோடை எங்கள் ஊரின்
வசந்த காலம் .....
நெல்மணிகள் புதிதெடுத்துப்

பொங்கலிட்ட பின்னாளில்
சூடடிப்போம் - பின்னர்
'பொலி' பெருக்கி
வீட்டினிலே அடுக்கி வைப்போம்
மூட்டைகளில்.......


காக்கைகள் கூடு கட்ட

இடம் தேடும்....

குயில்கள் தேடிவந்து
முட்டை போடும்.....
பட்ட மரம் தேடிவந்து

மரங்கொத்தி துளைபோடும்....
கிளிகள் குஞ்சு பொரித்து அங்கு
குடும்பம் நடத்தும்......

மாரியம்மன் கோயிலிலே
திருவிழா நடக்கும்....
மான்கள் நீர் தேடி - நம்

குளக்கரைக்குப் படையெடுக்கும்....

பாம்புகள் கூடிப்
பிணைந்து
மீண்டும் மீண்டும்
சல்லாபிக்கும்.....
காளைகள் கொம்புக்கு
மண்ணெடுக்கும்.....
வற்றிய குளத்தில்
சிலர்
வரால் பிடிப்பர்......

மா பழுக்கும்.....

புளி காய்க்கும்......
தேன் சுவையுடன்
பலாச் சுளை தித்திக்கும்.....
இளநீர் குலையுடன் இறக்கிவந்து
தாகம் தீர்ப்போம் .......
வாழைத்தோட்டம் நடுவினிலே

சோளப்பொத்தி முறித்துப் போட்டு
தீயினிலே வாட்டி ருசித்திடலாம்......

ஆற்றினிலே நெய்வாளை

அள்ளி வந்து

கூழ் ஆக்கிக் குடித்திடலாம்.....

அயிரை மீனில் நல்ல
புளிக் குழம்பு ஆக்கிடலாம்........
குடும்பமாகக் கூடி முன்போல்
இனிதே வாழ்ந்திடலாம்..........


ஆனால்......

.............
.........
....
....
...
..
.

சிதைந்துபோன என் ஊர்
மீண்டும் மீள்வதெப்போ???
திசைக்கொன்றாய் பறந்துபோன
என் உறவுகள்
மீண்டும்
கூடுவது எப்போ???
இறந்து போன
என் சொந்தங்கள்

புதைக்கப்பட்ட அந்த மண்ணில் - என்
கால்கள் மீண்டும் படுமா???
???????????????
????????????
?????????

??????
????

??
?

கருத்துகள்

  1. உண்மையிலேயே அழகான வரிகள். என் தேசமும் கூட....

    பதிலளிநீக்கு
  2. கனவுலகில் மட்டும் தான் காண முடிகிறது. ஏக்கம் மட்டும் மிஞ்சுகின்ற கனவு..நம் சந்ததியின் காலத்திலாவது நிறைவேறட்டும். ...மாற்றம் காண்கின்ற உலகில் எல்லாமே
    மாறித்தான் போய் விட்டது

    பதிலளிநீக்கு
  3. சிதைந்துபோன என் ஊர்
    மீண்டும் மீள்வதெப்போ???
    திசைக்கொன்றாய் பறந்துபோன
    என் உறவுகள்
    மீண்டும் கூடுவது எப்போ???
    இறந்து போன
    என் சொந்தங்கள்
    புதைக்கப்பட்ட அந்த மண்ணில் .....\\\\\


    மண்ணோடு மண்ணாய் போய்விட்டன..
    எல்லாமே!!


    ???????????????\\\\\
    இவைகள் அத்தனையும் நிறைவேறா
    ஆசைகள் தியா...

    நாம் அனுபவித்தவைகள்...அனைத்தும்
    இறந்தகாலமாகிவிட்டது ஒரு போதும்
    திருப்பாது!! உங்கள் கவிவரிகள்
    வாழ்ந்த{வந்த} பாதையை நினைவூட்டியது
    படித்தவுடன் மனக்கலக்கம்.

    சித்தமே கலங்கி நாம்!!
    மனம் கலங்கி....!!!!!????

    பதிலளிநீக்கு
  4. தேவதைகள் உலவும் தேசமெல்லாம் இல்லாமலே போய் விட்டதே தியா

    பதிலளிநீக்கு
  5. மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் உங்களின் பதிவுகளைப் படிக்கின்றேன். நீங்கள் கூறியது எல்லாம் என் ஊருக்கும் பொருந்தும், அனால் கவிதையின் இறுதி வரிகளைத் தவிர. கண்டிப்பாக காலம் ஒரு நாள் மாறும்,உங்களின் ஏக்கங்களும் நினைவாகும். மாறிக் கொண்டே இருப்பதுதானே காலத்தின் நியதி. நன்றி தியா.

    பதிலளிநீக்கு
  6. கலகலப்ரியா சொன்னது…

    ........

    //

    என்னங்க ஒன்றும் ............................

    பதிலளிநீக்கு
  7. வானம்பாடிகள் சொன்னது…

    :(. பதிலே இல்லை:((

    //

    ஏதாவது சொல்லுங்க சார்

    பதிலளிநீக்கு
  8. ரவிசாந் சொன்னது…

    உண்மையிலேயே அழகான வரிகள். என் தேசமும் கூட....


    //
    நன்றி சாந்த்

    பதிலளிநீக்கு
  9. நிலாமதி சொன்னது…

    கனவுலகில் மட்டும் தான் காண முடிகிறது. ஏக்கம் மட்டும் மிஞ்சுகின்ற கனவு..நம் சந்ததியின் காலத்திலாவது நிறைவேறட்டும். ...மாற்றம் காண்கின்ற உலகில் எல்லாமே
    மாறித்தான் போய் விட்டது

    //

    நன்றி அக்கா

    பதிலளிநீக்கு
  10. கலா சொன்னது…

    சிதைந்துபோன என் ஊர்
    மீண்டும் மீள்வதெப்போ???
    திசைக்கொன்றாய் பறந்துபோன
    என் உறவுகள்
    மீண்டும் கூடுவது எப்போ???
    இறந்து போன
    என் சொந்தங்கள்
    புதைக்கப்பட்ட அந்த மண்ணில் .....\\\\\


    மண்ணோடு மண்ணாய் போய்விட்டன..
    எல்லாமே!!


    ???????????????\\\\\
    இவைகள் அத்தனையும் நிறைவேறா
    ஆசைகள் தியா...

    நாம் அனுபவித்தவைகள்...அனைத்தும்
    இறந்தகாலமாகிவிட்டது ஒரு போதும்
    திருப்பாது!! உங்கள் கவிவரிகள்
    வாழ்ந்த{வந்த} பாதையை நினைவூட்டியது
    படித்தவுடன் மனக்கலக்கம்.

    சித்தமே கலங்கி நாம்!!
    மனம் கலங்கி....!!!!!????

    //

    நன்றி கலா காலம்தான் எல்லாத்துக்கும் பதில் சொல்ல வேணும்

    பதிலளிநீக்கு
  11. thenammailakshmanan சொன்னது…

    தேவதைகள் உலவும் தேசமெல்லாம் இல்லாமலே போய் விட்டதே தியா
    //
    என்ன செய்வது விதியை நோவோம்
    நன்றி thenammailakshmanan

    பதிலளிநீக்கு
  12. புலவன் புலிகேசி சொன்னது…

    பதிலை எங்கு தேட...?

    //

    நமக்குள் நாம் ...................

    பதிலளிநீக்கு
  13. பித்தனின் வாக்கு சொன்னது…

    மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் உங்களின் பதிவுகளைப் படிக்கின்றேன். நீங்கள் கூறியது எல்லாம் என் ஊருக்கும் பொருந்தும், அனால் கவிதையின் இறுதி வரிகளைத் தவிர. கண்டிப்பாக காலம் ஒரு நாள் மாறும்,உங்களின் ஏக்கங்களும் நினைவாகும். மாறிக் கொண்டே இருப்பதுதானே காலத்தின் நியதி. நன்றி தியா.

    //

    உண்மைதான் நண்பா
    பொதுவாக யார்தான் நகர வாழ்வை விரும்பி ஏற்றார்கள்
    அதுவும் சொந்த ஊர் போல் எந்த ஊரும் வராதுதானே

    பதிலளிநீக்கு
  14. முதலில் அழகிய ஒரு கிராமத்துப் பயணம்.. கடைசியில் கலங்க வைத்து விட்டீர்கள்.. அந்த நல்ல நாள் வரும் என்று நம்பிக்கையுடன்..

    பதிலளிநீக்கு
  15. இருக்கற இடத்தல சந்தோஷமா இருங்க தியா... Happy life.. அழகிய நினைவுகள்

    பதிலளிநீக்கு
  16. மகிழ்ச்சியான நினைவுகளுக்கு வார்த்தைகள் பதில் ஆகலாம். விடை தெரியா சோக நினைவுகளுக்கு மௌனம் தான் பதில். நாங்கள் இருக்கிறோம் என்ற ஆறுதல் தவிர அந்த மௌனம் என்ன சொல்லப் போகிறது?

    பதிலளிநீக்கு
  17. Friend,புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

    http://illuminati8.blogspot.com/2010/03/blog-post.html

    பதிலளிநீக்கு
  18. hmmm

    nice to read it.

    and also the picture so cute..
    then

    i dont know what to say but

    i can say one thing..

    all will change except"change"

    change is the law of the universe."

    hope it worry all will change..

    your blog nice.

    Valga valamudan
    Varuthapadtha valibarsangam sarbaga
    complan surya.

    பதிலளிநீக்கு
  19. மிக எளிதாக உள்ளே நுழைய முடிகிறது. அந்த Flash தேவையா?

    தொழில் நுட்ப அறிவோடு படைக்கும் உங்கள் படைப்பு நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை எனக்கு உணர்த்துகிறது.

    பதிலளிநீக்கு
  20. PPattian : புபட்டியன் சொன்னது…

    முதலில் அழகிய ஒரு கிராமத்துப் பயணம்.. கடைசியில் கலங்க வைத்து விட்டீர்கள்.. அந்த நல்ல நாள் வரும் என்று நம்பிக்கையுடன்..

    //

    நன்றி புபட்டியன் அது என் சொந்த ஊர் பற்றிய ஏக்கம்தான்

    பதிலளிநீக்கு
  21. D.R.Ashok சொன்னது…

    இருக்கற இடத்தல சந்தோஷமா இருங்க தியா... Happy life.. அழகிய நினைவுகள்
    2 மார்ச், 2010 5:21 pm
    //
    அப்படியே ஆகட்டும் நண்பா
    என்றாலும் சொந்த ஊர்போல வருமா?

    பதிலளிநீக்கு
  22. ஸ்ரீராம். சொன்னது…

    மகிழ்ச்சியான நினைவுகளுக்கு வார்த்தைகள் பதில் ஆகலாம். விடை தெரியா சோக நினைவுகளுக்கு மௌனம் தான் பதில். நாங்கள் இருக்கிறோம் என்ற ஆறுதல் தவிர அந்த மௌனம் என்ன சொல்லப் போகிறது?

    //
    ஓ....
    அப்படியா
    அதுதான் கலகலப்ரியாவும் வானம்படிகளும் மௌனம் சாதித்தவையோ

    பதிலளிநீக்கு
  23. ILLUMINATI சொன்னது…

    Friend,புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

    http://illuminati8.blogspot.com/2010/03/blog-போஸ்ட்

    //


    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  24. Complan Surya சொன்னது…

    hmmm

    nice to read it.

    and also the picture so cute..
    then

    i dont know what to say but

    i can say one thing..

    all will change except"change"

    change is the law of the universe."

    hope it worry all will change..

    your blog nice.

    Valga valamudan
    Varuthapadtha valibarsangam sarbaga
    complan surya.
    //

    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  25. ஜோதிஜி சொன்னது…

    மிக எளிதாக உள்ளே நுழைய முடிகிறது. அந்த Flash தேவையா?

    தொழில் நுட்ப அறிவோடு படைக்கும் உங்கள் படைப்பு நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை எனக்கு உணர்த்துகிறது.

    பதிலளிநீக்கு
  26. வலி தெரிகிறது தியா , அருமையான பதிவு, நிச்சயம் ஒரு நாள் இவையாவும் மாறும் உங்கள் கால்களும் அம்மண்ணை தொடும் ...

    நன்றி
    ஜேகே

    பதிலளிநீக்கு
  27. eniya

    mahilir thina valthukkal madam.

    enrum seerum serapai vala eraivanai prithikiren.

    nandri
    valga valamudan
    complan surya

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி