இடுகைகள்

என் தேவதை

படம்
உன் இருண்ட முடியும்  நீண்ட கூரிய மூக்கும்  என்னைக் குஷிப்படுத்தும்  அழகிய இரு சாதனங்கள்  நான் உனக்கு ஒரு  செவ்விதழ் ரோஜா கொடுத்துப்  பின் ஒரு சிறு  முத்தமிட்ட பின்னர்  உன் காந்தக் கண்கள்  இயக்கம் பெற்றன. அது அமைதியான  என் மனதில்  ஒரு சலனத்தை  விதைத்துச் சென்றது. மென்மையான உன் குரலும்  செவ்விதழில் புன்னகையும்  நீண்ட நேரம் நிலைக்கவில்லை நான் உட்கார்ந்தேன்  உன்னுடன்  நிரந்தர சொல்லாடலுக்காக அதற்கான முயற்சியில் தோற்றுப் போய் நான்  மீண்டும் வேதாளமாய் நீ எட்ட நின்று ஹாய் சொல்லி  பின் ஹலோ சொல்லி  கையசைத்துப் பிரிந்தாய்  அந்த அற்புதக் கனவில்  மிதந்தபடி இன்றும் நான் 

நான் வாழ்ந்து கொண்டிருந்தால்.......

படம்
காயம் மற்றும் வலி   இங்கே இருக்கிறது .   அமைதி மற்றும் காதல்   இது அனைத்து ம்   இங்கே இருக்கிறது .   குழப்பம் மற்றும் சந்தேகம்   அதுவும் கூடவே வாழ்கிறது. நாங்கள் இல்லாமல்   நாங்கள் இல்லை .   நாம் அழ அழுகிறோம்.   நாம் முயற்சி செய்து   நாமாகவே சிரிக்கிறோம் .   நாங்களாகவே   காயப்பட்டுக் கொள்கிறோம்.   நாங்களாகவே வலிகளில் இருந்து   மீண்டெழுகிறோம்.   கடைசியாக சோதனை முடிவில்   வாழ்க்கை   ஒரு பாடமாக உள்ளது.   மிகவும் நன்றாக கற்றுக்கொள்ள   என்னுள்   நிறையவே உள்ளது.   ஒருவேளை , ஒரு நாள் ,   என் கதை  என்னால் மட்டுமே  எழுத ப் படக் கூடியதாக    என் வாழ்க்கை  அர்த்தப் பட்டு போகலாம்  அப்போதும்   நான்  வாழ்ந்து கொண்டிருந்தால்.......

காதல் எழுதப்படாத விதி...

படம்
ஒரு அமைதியான மாலை நேரம் நட்சத்திரங்கள் மற்றும் மெழுகுவர்த்தி... அலைகளின் ஒலி மிகவும் இறுக்கமான நடைப் பயணம் நம் நிழல்கள் மணல் தரையில் கூடவே... தீவிரமாக ஒருவருக்கொருவர் இன்னும் அதி தீவிரமாக கைப் பிடித்து நெருக்கமாக.... நவ நாகரிக உலக த்தில் காதல் எழுதப்படாத விதி... காற்று ஊடுருவி ய நெருக்கமான நேரத்தில் ஒன்றும் ஒப்பிட்டுக்கொள்ள முடியாது நாம் சந்தித்து வந்ததிலிருந்தே என்னுடைய எண்ணங்கள் அவளால் மாற்றம் பெற்றுள்ளன என் இதயம் மனம் மற்றும் உடல் இன்னும்.... நான் எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும் நீ என் வாழ்வின் ஊற்றாக இருக்கிறாய் அழகான மற்றும் விலைமதிப்பற்ற என் சொத்து நீ... நீ என் மனைவி

மனம்

படம்
மீண்டும் முன் போல் முயன்று பார்க்கிறேன் காற்றைப் பிடித்துக் கடிவாளம் கட்டியது போல் தோற்றுப் போகிறது

வாழும் தமிழ்

படம்
இது அமெரிக்காவின் மினேசொட்ட மாநிலத்தில் உள்ள ஒரு நூலகத்தின் வரவேற்பு பதாதை இது. இதில் தமிழ் இடம்பெற்றுள்ளது ஒரு சிறப்பாகும். அதை நீங்களும் பாருங்கள் நட்புகளே.

ஒரு கவிஞனின் உள்ளக் குமுறல் (ஏப்ரல் 13)

இது எனது 200 வது இடுகை ஏப்ரல் 13 தமிழரின் ( தமிழ் நாட்டு ) மாற்றத்துக்கான நாள். இதோ ஒரு கவிஞனின் உள்ளக் குமுறல் நான் பார்த்ததை உங்களுடன் பகிர்கிறேன். .

அப்பாடா

அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக இந்தியர்கள் மத்தியில் ஒருவித துடுப்பாட்ட காய்ச்சல் நிலவி அது முடிவுக்கும் வந்து விட்டது. அதிகமாக தெலுகர்களும் இந்தியத் தமிழர்களும் வாழும் "மினிசொட்டா" என்ற மாநிலத்தில் தினமும் இந்தியர்கள் அதிகம் பேரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இப்போதும் உண்டு. நான் கண்டு மனம் மகிழ்ந்த ( கசந்த ) அனுபவங்கள் இதோ சில.... அமெரிக்கர்கள் இங்கு நிற இன பாகுபாடு பார்ப்பதில்லை. தமிழர்கள் அதிகமாக ஆங்கிலம் பேசுகிறார்கள் தெலுகர்கள் தாய்மொழியில் பேசுகிறார்கள் ( எம்மிடம் கூட தெலுகு தெரியுமா? என கேட்கிறார்கள். அதிகமான அமெரிக்கர்கள் ஹிந்தி மட்டுமே இந்திய மொழி என நினைக்கிறார்கள். ஆனால்.... இங்கு ஒரு நூலகத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட மொழிகளில் வரவேற்பு பலகை போடப்பட்டிருந்தது. அதில் தமிழும் ஒரு மொழி. அதில் சிங்களம் இடம் பெறவில்லை. அது மகிழ்ச்சி. இருநூறாவது பதிவில் சந்திப்போம்...