பாலை :- மணலும் மணல் சார்ந்த இடமும். மணல் தின்ற புல்வெளி அனல் தின்ற பனந்தோப்பு புதையுண்டு எரியுண்ட மீதிக் காடுகள் எல்லாம் மணல் மேடாய்த் திட்டுகளாய்... எரியுண்ட தேசத்தில் சிதைவுகள் மட்டுமே மீதியாக... கால் மிதிக்கும் இடமெல்லாம் பல்லிளிக்கும் கூரிய முட்கள் யுத்த காண்டம் முடிந்த பின்னர் சிதைவுகளாய் எச்ச சொச்சம். வாழ்விழந்த வயல்வெளிகள் பொலிவிழந்து... பூவிழந்து தளிரிழந்து... கருகி நிற்கும் மரங்கொடிகள்... சிதைவுகளைச் சுமந்தபடி தனித்திருக்கும் வீதிகளும் வீடுகளும்... மீண்டும் ஓர் நாள் தோண்டப்படுவதற்காய் காத்திருக்கும் மண்தரைகள் எல்லாம் ஒன்றுகூடி எரியுண்ட தேசத்தின் காட்சிகளாகிப் படமெடுக்க நான் மட்டும் ... இழந்தவற்றைத் தேடியபடி மீண்டும்... மீண்டும்...........