October 19, 2010

என் பழைய நாட்குறிப்பில் இருந்து ஒரு பகுதி















நாள்:-
14 .10 .2000


உன் பேச்சு

என் நெஞ்சில்

தேன் வார்க்கும்

உன் மூச்சு

உள் மனதைத்

தாலாட்டும்


நாள்:- 15 .10 .2000

என் கண்ணும்

உன் கண்ணும்

சங்கமிக்கும்

அந்தச் சங்கமத்தில்

இருவருக்கும்

சுகம் பிறக்கும்


நாள்:- 16 .10 .2000

உன் மனமும்

என் மனமும்

கவி வடிக்கும்

உன் மௌன மொழிக்

கூட்டினுள்ளே

காதல் பிறக்கும்


நாள்:- 17 .10 .2000

உன் செவ்விதழில்

பல்வரிசை

பேச்சுரைக்கும்

அந்தப் பேச்சினிலே

என் நெஞ்சில்

தேன் சுரக்கும்


நாள்:- 18 .10 .2000

நீளும் நாட்களிலே

நீதான்

என் உயிர் மூச்சு

வீசும் காற்றினிலும்

மெதுவாய்

உன் சலனம்


நாள்:- 19 .10 .2000

என் இதயத்துள்

புகுந்து

கொடி நாட்டினாய்

உன் வெட்கத்தால்

என்மேல்

வலை வீசினாய்



October 18, 2010

தேடுகிறேன்...


கொடிய

இருளில்

கைவிடப் பட்ட

ஆத்மாவாய்

காற்றில்

என்

புன்னகையை

விட்டெறிந்து விட்டு

கை

நனைப்பதர்க்காய்

நீர்

தேடுகிறேன்

சுடுகாடாகிப்போன

என்

கிராமத்தில்





October 14, 2010

அனைவரும் வருக

நாளை வெள்ளிக்கிழமை ( 15 /10 /2010 )
மித்ர நிறுவனம் நடாத்தும்
"நூல் அரங்கேறும் மாலை"
நிகழ்வு :- சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமரா நூலகத்தின் அண்ணா சிற்றரங்கில் நடைபெற உள்ளது.

நூலாசிரியர் - வி.டில்லிபாபு ( DRDO விஞ்ஞானி )
நூல் - "ஒரு செல் உயிரிகள்"

அனைவரும் வாரீர்
நன்றி

-தியா-
( மித்ர ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன் )
கோடம்பாக்கம்

October 11, 2010

இது இப்போது பிசாசுகளின் காலம்




















பழைய கவிதைப்

புத்தகங்களைப்

பரப்பியபடி

படுத்துறங்கும்

பிசாசுகள்...


இருளில் இருந்து

மீள மறுத்து

முட்டி மோதுகிறது

இடர்


சமர் நடந்த தேசத்தின்

சிதைவுகளில் இருந்து

மீளமுடியாமல்

திண்டாடுகிறது

கந்தக வாடை


நியூட்டனின்

மூன்றாம் விதியை

நிலத்துக்கும்

வானுக்கும்

கற்பிதம் செய்யும்

ராணுவ முலாம்

பூசப்பட்ட

போதி மரங்கள்


திணிக்கப் படுவதற்காய்

இலவசமாக்கப்பட்ட

நிர்வாண பௌத்தம்

கக்கிய கட்டிடங்கள்

எம் மண்ணில்




October 07, 2010

இருளும் நானும்



















இயலாமைகளுக்குள்

வாழ்ந்து

பழக்கப் பட்டவன் நான்

மீண்டும் மீண்டும்

குழி தோண்டிப்

புதைத்துவிட

முயல்கிறேன்

என் இயலாமைகளை

என்னையும் மீறி

அது வீறுகொண்டு

என்னை அடக்கியாள

நினைக்கிறது...

பெரும் இறுமாப்புடன்

கடிவாளம் பூட்டிய

குதிரையாக

என்னைக் கட்டியாள

நினைக்கிறது

உருவமில்லாத

அந்த மர்மம்...

ஆனாலும்

இயலாமைகளுக்குள்

வாழ்ந்து

பழக்கப் பட்டவன்

நான்



October 06, 2010

காதலியின் விசித்திர ரசனை
















என்

அன்புக்கினிய

நெஞ்சே...

என் பொய்க்

கோபம் கண்டு

என்னவர் அடைகின்ற

துன்பத்தை

சிறிது நான்

ரசிக்கவேனும்
....
என் கைகளுக்கு
உத்தரவிடு
என்னவரை
ஒரு கணமேனும்

கட்டித் தழுவாமல் இருக்க....


புல்லாது இரா அப் புலத்தை அவர் உறும்
அல்லல் நோய் காண்கம் சிறிது

திருக்குறள் - 1301




Chess

வந்திருப்பவர்கள்