இடுகைகள்

வலைப்பூக்களில் சிக்கிய சில கவிதைகள் (கவிஞர்கள்) பற்றிய எனது பார்வை

கவிஞன் , தான் எண்ணும் பொருளை எடுத்துரைக்கக் கையாளும் நடைச்சிறப்பே கவிதைமொழி எனப்படும். கவிதைக்கு உணர்ச்சியை ஊட்டுவதற்கு அதன் மொழி இன்றியமையாதது. இது வடிவத்தின் ஒரு கூறாக இருப்பினும் நுணுக்கமானது. மொழி என்பது கவிஞனின் மேலாடையல்ல மேனியே அதுதான். உணர்த்துமுறையில் கவிஞனின் தனித் தன்மை புலப்படுவது போல, மொழி அமைப்பிலும் கவிஞனின் தனித்தன்மை புலப்படும். உதாரணமாகப் பாரதியாரின் நடையழகினைப் பாரதிதாசனில் முழுமையாக இல்லாவிடினும் ஓரளவுக்கெனினும் காணமுடிகின்றமையினைக் கூறலாம். ஒரு கவிஞனின் நடையழகென்பது அவரது உள்ளத்து இயல்பை ஒட்டி அமைவதாகும். தெளிந்த மொழியியல் அறிவே, மொழி பற்றிய ஆய்வினை முழுமைப்படுத்துகின்றது. கவிதை மொழி என்பது அடிப்படையில் பேச்சு அல்லது கருத்து மாற்றத்தைக் குறிப்பதாகும். பொதுவாக கவிதை மொழியில் பல உறழ்ச்சிகளும் இலக்கண மீறல்களும் காணப்படும். கவிதை மொழியானது வழக்கு மொழியிலிருந்து மாறுபடும் தன்மை கொண்டது. அது கவிஞனின் உரிமம். அதற்காக மொழியை அலட்சியம் செய்யாமல் கவிஞன் ஏதோ ஒருவகையில் பொருள் உணர்த்தக் கையாண்ட உத்தியாக அதைக் கருதுவதே கவிதை மொழியை ஆழமாகப் பார்க்க வழிவகுக்கும். கவிதை மொழியை அம...

முரண்

படம்
நான் கவிஞனா நானும் கவிஞனா நான்தான் கவிஞனா யார்தான் கவிஞர் ????

ஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 06 )

1995இன் பின்னர் இன்றுவரை உள்ள காலகட்டம் 1. மாறும் கதைக் களம் 2. வாழ்க்கைக்கான போராட்டச் சித்திரிப்பு 1. மாறும் கதைக் களம் 1994-1995 களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சந்திரிக்கா அரசுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கிய போது ஏற்பட்ட மகிழ்ச்சி ஆரவாரம் , 1995 ஏப்ரல் 19இல் தொடங்கிய போருடன் தணிந்து போனது. 1995 ஒக்ரோபர் 17ஆம் திகதி ‘சூரியக்கதிர்’ என்ற போர் நடவடிக்கை முடுக்கி விடப்பட்ட போது , நிலையற்ற எதிர்காலமும் பீதியும் தமிழ் மக்களைப் பீடித்தது. யாழ்ப்பாணம் ஒரு மரண களமாக மாறியது. தமிழர் வரலாற்றிலே என்றுமில்லாத பேரவலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து மக்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு பகுதி மக்கள் வன்னிக்குச் செல்ல எஞ்சிய தொகையினர் மீண்டும் ஜெனரல் ஜானக பெரேராவின் ஆக்கிரமிப்பு வலைக்குள் சிக்கிக் கொண்டனர். மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தவர்கள் மக்களின் ஒடுக்கு முறையாளர்களாக மாறினர். சுற்றி வளைப்பு , கைதுகள் , சித்திரவதை , கொலைகள் , கற்பழிப்பு ஆகியன ஆவணப்படுத்தப்பட்ட உண்மைகளாயின. பல நூற்றுக் கணக்கானோர் காணாமற்போக ஒரு தொகையினர் செம்மணியில் புதைக்கப்பட்டனர். வன்னிக்க...

சொற்சிலம்பம் - மூன்று

இலங்கையிலும்தமிழ் நாட்டிலும் தமிழ் பேசபட்டாலும் இரண்டுக்கும் இடையில் பெரியளவிலானஉச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம் . இலங்கையிலும் பிரதேசத்துக்கு பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது . அதேபோல் தமிழகத்திலும் உண்டு . ஆனால் , இலங்கைத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பல சொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம் . அவற்றினை புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன் . '' மொழி என்பது ஒன்றை அடையாளப் படுத்தும் கருவி '' என்ற கொள்கை உடையவன் நான் . ஆதலால் , இங்கு எது சரி எது பிழை என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் நான் இருந்துகொள்ள ஆசைப்பட்டு இதனைத் தொடர்கிறேன் . ( முக்கிய குறிப்பு - இவை என்னால் அவதானிக்கப் பட்ட சொற்கள் மட்டுமேயன்றி ஆய்வல்ல . சில சொற்கள் தமிழ் அல்லவெனினும் தமிழ்போல் வழங்கப்பட்டு வருகின்றமையால் நானும் அப்படியே சொல்லியுள் ளேன் .) இலங்கைத் தமிழ்ச் சொற்கள் தமிழ் நாட்டுத் தமிழ்ச் சொற்கள் வெடி ...