ஏப்ரல் 03, 2013

சமூக வலைத்தளங்களை நினைத்தால்

சில சமயங்களில் சமூக வலைத்தளங்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. இப்படித்தான் ஓரிரு நாட்களுக்கு முன் நான் வேலைக்கு கிளம்புவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். 

அப்போது Facebook  சமூக வலைத்தளத்தில் தொடர்புகொண்ட ஒருவர் தனக்கு என்னைத் தெரியும் எனவும் தான்  என்னை மறக்கவில்லை எனவும் ஆங்கிலத்தில் ஒரு செய்தி அனுப்பியிருந்தார். தான் என்னுடன் Skype இல் உரையாட விரும்புவதாகவும் எழுதியிருந்தார். 

உண்மையில் அவரை எனக்கும் நன்றாகத் தெரியும் ஊரில் இருக்கும் போது அருமையான பையன். சரி வேலைக்கு போக முன்னர் கதைத்துவிட்டு போகலாமே என நினைத்து அவருடன்   Facebook  ஊடாகத் தொடர்பினை ஏற்படுத்தினேன். 

ஐயோ ஏன் தொடர்பு கொண்டேன் என இருந்தது பின்னர். அவரின் அளப்பறை தங்க முடியலை. ரொம்ப பாசக்காரப் பயலாய்  இருந்தான். Advice சொல்லி அறுக்கத் தொடங்கினான். என்ன பேசுகிறார் எதற்கு பேசுகிறார் என்றே புரிய முடியாமல் போய்விட்டது. 

 குறிப்பு:- இப்போது தெரிந்தவர்களை தொடர்பு கொள்ளவே பயமாக இருக்கிறது.

4 கருத்துகள்:

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-