ஜனவரி 31, 2013

நீண்ட நாளைக்கு அப்புறம் 2 வருடங்களின் பின்னர் அமெரிக்காவில் ஒரு தமிழ் படம் பார்த்தேன்

நீண்ட நாளைக்கு அப்புறம் 2 வருடங்களின் பின்னர் அமெரிக்காவில் ஒரு தமிழ் படம் பார்த்தேன் "விஸ்வரூபம்" அருமையான படம். தொடக்கம் முதல் முடிவுவரை, மன்னிக்கவும் முடிவில்லை........ இன்னும் தொடருமாம் (ம்... இருக்கிறதை காணலையாம்  பறக்குறதுக்கு........) எது எப்படியோ இது எந்த ஒரு மதத்துக்கும் எதிரான படம் என்று தோன்றவில்லை. கதைக்களம் தமிழ் நாட்டில் இல்லை ஏன் இந்தியாவிலே இல்லை அப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்காவை சுற்றியே கதை நகர்கிறது. கதையின் தொடக்கம் முதல் முடிவுவரை கடமை தவறாத ஒரு இந்திய உளவு அதிகாரியின் கண்ணியமும் மனிதாபிமானமும் முட்டி மோதுகிறது. மற்றபடி மதம்சார்பான மற்றும் எதிரான கருத்துகள் எங்கிருக்கின்றன எனத் தேட முயன்று தோற்று விட்டேன் ஏனெனில் நான் ஒரு இலக்கியவாதி மனிதாபிமானி சாமானியனே அன்றி தமிழ் நாட்டு அரசியல் வாதியல்லவே.

அன்புடன்
-தியா- 

7 கருத்துகள்:

  1. நீண்ட இடைவெலீக்குன் நானும் இங்கு உள் நுழைந்தேன் ,

    நலமா தியா.வீட்டில அனைவரும் சுகமா..

    பதிலளிநீக்கு
  2. ஃஃஃஃமதம்சார்பான மற்றும் எதிரான கருத்துகள் எங்கிருக்கின்றன எனத் தேட முயன்று தோற்று விட்டேன் ஃஃஃஃ

    நீங்கள் மட்டுமில்லை எல்லோருக்கும் தான் சகோ

    பதிலளிநீக்கு

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-