காதலி தினம்

என் காதலுக்கு 

உயிரோட்டம் தந்தவளே 

ஒற்றை வார்த்தைச் 

சொல்லில் கட்டிப் போட்ட

வித்தகியே...


இந்த நாளில் 

உன் வாய் திறந்து 

நீ உரைத்த 

தித்திக்கும் செந்தமிழே 

இன்னும் என் 

செவியில் உன் 

நினைவுகளை மீட்டும் 

தாரகை மந்திரமாய்...


ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு வழியிலும் 

என் சிறந்த தோழியாய் 

நீ....


நீ என் இனிப்புப் பெட்டகம் 

அன்பான வார்த்தைகளின் 

சொந்தக்காரி 

கண்களில் 

வைரக்கல் பதித்த 

காதல் ஓவியம் 

நீ உன் செவ்விதழ் என்ற 

காதல் ரோஜாவால் 

என் இதயத்தில் 

பூச்செண்டு முடித்து வைத்தாய்.


உன் மென் விரல்கள் 

என்னைத் தொடும் போதெல்லாம் 

என் இதயம் 

மெல்லிய வெப்பத்தை 

உணர்கிறது.


உண்மையில் நீ 

என் இரத்த ஓட்டமாக 

இருப்பதால் தான் 

நான் - நீ - 

'நாம்' என்றானோம் போலும்.


நீ என் வாழ்க்கைக்கு 

பொருள் கொடுத்திருக்கிறாய் 

நானும் பதிலீடாக 

என் வாழ்நாள் முழுவதையும் 

உனக்கே தந்திருக்கிறேன்


என் இதயம் 

கலவரத்தால் நிரப்பப் பட்டபோது 

ஒளி நிரப்பி புதுப்பித்தவளே 

என் இனிய தோழியே


நம் ஆத்மாவை 

ஒன்று சேர்த்து நெருக்கம் தந்த 

இறைவனுக்கு நன்றி செய்ய 

நாம் இருவரும் 

நமக்கு கிடைத்த இரு 

செல்வங்களுடன் 

என்றும் காதலராக 

மகிழ்வுடன் நிறைவாக 

வாழ்ந்து காட்டுவோம்.

கருத்துகள்

  1. உங்கள் துணையை இதைவிட எப்படி நேசிக்கமுடியும் தியா.என்றும் இதே அன்பு குறையாமல் வாழ என் அன்பான வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்