கதறியழுகிறது கவலையில் கனமழை.....

கொட்டித் தீர்த்த கனமழையில்
நனைந்தபடி நடக்கிறேன்....
வண்டியில் பொதி ஏற்றி இழுத்தபடி
விரைந்து நடக்கிறான் ஓர்
ஏழைப் பொதி வண்டி இழுப்பாளன்....

நெடுவீதியில் பிரித்துப் போட்ட
கால்வாய்கள் அப்படியே
வாய்பிளந்து கிடக்கின்றன.....
நீண்ட பெருந்தெருவின்
நிரம்பிய வெள்ளத்தில் முட்டிமோதி
மல்லுக்கட்டிய வாகனங்கள்
வழியை மறித்தபடி......

கையில் பிடித்த குடையை
"லைலா" பறித்துச் செல்கிறது ......
தெருவோரம் மழையில்
தோணி விடும் சிறுவர்கள்......

அக்கினி வெயிலை
மறைத்த மழை மேகத்துக்கு
நன்றி தெரிவித்தபடி
பேருந்துக்கு நடக்கிறேன்.....

மே மாதம் நம் வாழ்வில்
மறக்கப்படக் கூடியதல்லவே.....
வானம் கண்ணீர் மழை பொழிந்து
மீண்டும் அழுதுதீர்த்தது.........

முள்ளிவாய்க்காலில் விதைக்கப்பட்ட
எம் உறவுகளின்
ஆண்டுத் திவச விழாவில்
கறுப்புக் கொடி (குடை) பிடித்து
இன மத பேதமின்றி
அனுஸ்டிக்க வைத்த "லைலா"வே
உனக்கு ஒரு கொடி வந்தனங்கள்.......

கருத்துகள்

  1. கோடை வெயிலின் பின் குளிர் மழை போல ஆண்டு திவச நாளில் அழுது கொட்டிய மழை போல ..தமிழர் வாழ்வும் வளம் பெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. அடித்த மழை விதைக்கப்பட்ட உறவுகளை வளரச்செய்யட்டும். இருக்கும் உரவுகளின் வாழ்வில் வளமை தரட்டும்.

    பதிலளிநீக்கு
  3. மே மாதம் நம் வாழ்வில்
    மறக்கப்படக் கூடியதல்லவே.....
    வானம் கண்ணீர் மழை பொழிந்து
    மீண்டும் அழுதுதீர்த்தது.........


    ...... கண்ணீர் அஞ்சலி.

    பதிலளிநீக்கு
  4. ///////அக்கினி வெயிலை
    மறைத்த மழை மேகத்துக்கு
    நன்றி தெரிவித்தபடி
    பேருந்துக்கு நடக்கிறேன்.....
    /////////////

    வேகம் எடுக்கும் வார்த்தைகள் வெயில் பற்றி !

    பதிலளிநீக்கு
  5. முள்ளிவாய்க்காலில் விதைக்கப்பட்ட
    எம் உறவுகளின்
    ஆண்டுத் திவச விழாவில்
    கறுப்புக் கொடி (குடை) பிடித்து
    இன மத பேதமின்றி
    அனுஸ்டிக்க வைத்த "லைலா"வே
    உனக்கு ஒரு கொடி வந்தனங்கள்\\\\\\\\


    தியா, உங்கள் குமுறல்கள் அத்தனையும்
    கொட்டி,மழையையும்,குடையையும்
    வைத்து அருமையாய் அஞ்சலி
    செலுத்தி விட்டீர்கள் நன்றி

    நாம் அழுது புரண்டாலும்
    மாண்டோர் வருவரோ ..தியா??

    பதிலளிநீக்கு
  6. முள்ளிவாய்க்காலில் விதைக்கப்பட்ட
    எம் உறவுகளின்
    ஆண்டுத் திவச விழாவில்
    கறுப்புக் கொடி (குடை) பிடித்து
    இன மத பேதமின்றி
    அனுஸ்டிக்க வைத்த "லைலா"வே
    உனக்கு ஒரு கொடி வந்தனங்கள்

    பதிலளிநீக்கு
  7. "
    நிலாமதி சொன்னது…
    கோடை வெயிலின் பின் குளிர் மழை போல ஆண்டு திவச நாளில் அழுது கொட்டிய மழை போல ..தமிழர் வாழ்வும் வளம் பெற வேண்டும்."



    உங்களின் கருத்துக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  8. வானம்பாடிகள் சொன்னது…
    அடித்த மழை விதைக்கப்பட்ட உறவுகளை வளரச்செய்யட்டும். இருக்கும் உரவுகளின் வாழ்வில் வளமை தரட்டும்.

    20 மே, 2010 9:49 pm

    //


    நன்றி சார் எப்பிடி இருக்கிறிங்க
    ரொம்ம்ப நாளுக்கு அப்புறம் வந்திருக்கிறேன்.
    வெயிலோடு போய் மழையோடு
    வந்தாலும் மறக்காமல் பதில் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  9. Chitra சொன்னது…
    மே மாதம் நம் வாழ்வில்
    மறக்கப்படக் கூடியதல்லவே.....
    வானம் கண்ணீர் மழை பொழிந்து
    மீண்டும் அழுதுதீர்த்தது.........





    //



    நன்றி மேடம்

    உங்களின் கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…
    ///////அக்கினி வெயிலை
    மறைத்த மழை மேகத்துக்கு
    நன்றி தெரிவித்தபடி
    பேருந்துக்கு நடக்கிறேன்.....
    /////////////

    வேகம் எடுக்கும் வார்த்தைகள் வெயில் பற்றி !

    21 மே, 2010 2:57 am

    //

    சங்கர் எப்பிடி இருக்கிறிங்க
    உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. கலா சொன்னது…
    முள்ளிவாய்க்காலில் விதைக்கப்பட்ட
    எம் உறவுகளின்
    ஆண்டுத் திவச விழாவில்
    கறுப்புக் கொடி (குடை) பிடித்து
    இன மத பேதமின்றி
    அனுஸ்டிக்க வைத்த "லைலா"வே
    உனக்கு ஒரு கொடி வந்தனங்கள்\\\\\\\\


    தியா, உங்கள் குமுறல்கள் அத்தனையும்
    கொட்டி,மழையையும்,குடையையும்
    வைத்து அருமையாய் அஞ்சலி
    செலுத்தி விட்டீர்கள் நன்றி

    நாம் அழுது புரண்டாலும்
    மாண்டோர் வருவரோ ..தியா??

    21 மே, 2010 6:41 am

    //

    எப்பிடி அக்கா இருக்கிறிங்கள்
    நீண்ட நாளுக்கு பின் நான்
    வந்திருக்கிறேன்
    நீங்களும்
    மறக்காமல்
    பதில் தந்திருக்கிரின்கள்
    நன்றி

    பதிலளிநீக்கு
  12. சுசி சொன்னது…
    :((((((

    //

    ஹாய்
    சுசி
    என்ன??????????????

    பதிலளிநீக்கு
  13. யாதவன் சொன்னது…
    முள்ளிவாய்க்காலில் விதைக்கப்பட்ட
    எம் உறவுகளின்
    ஆண்டுத் திவச விழாவில்
    கறுப்புக் கொடி (குடை) பிடித்து
    இன மத பேதமின்றி
    அனுஸ்டிக்க வைத்த "லைலா"வே
    உனக்கு ஒரு கொடி வந்தனங்கள்

    21 மே, 2010 8:58 am

    //

    யாதவன் உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  14. நீண்ட நாள் கழித்து, உங்கள் எழுத்துகளை படிக்கிறேன்..

    கனமான வரிகள்..

    பதிலளிநீக்கு
  15. பிரேமா மகள் சொன்னது…
    நீண்ட நாள் கழித்து, உங்கள் எழுத்துகளை படிக்கிறேன்..




    ///





    ஆமாம் நீண்ட நாள் தான்

    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  16. நாலைந்து நாட்களுக்கு முன்னால் இதை படித்து முடித்து விட்டு மீண்டும் ஒரு முறை வந்து படிக்க வேண்டும் என்பதற்காக இந்த தாமத வாழ்த்துகள்.
    இருநூறு சதவிகிதம் ஈர்ப்பு.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி