December 31, 2009

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்





அனைத்து உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
கடந்த வருட சோகங்களை மறப்போம்...
நல்லவைகளை நாளும் நினைப்போம்...
வருகின்ற புத்தாண்டை இனிதே வரவேற்று உறவுகளுடன் கூடியிருந்து மகிழ்ந்திருப்போம்...
அன்புடன்...
- தியா -


December 26, 2009

விழி ... நிமிர்...நட...


"உப்பு மடச்சந்தி" 'ஹேமா' வின் இந்தப்

படத்துக்கான கவிவரிகள் இவை.


விளையாட்டுப் பொம்மையை
கைப்பிடித்த சிறு பிஞ்சே
உன் இள வயதில் ஏனம்மா
இந்தத் தலைவிரி கோலம்???

உன் கைப்பிடியின் உறுதியில்
தெரிகிறது உன் ஓர்மம்.
கண்ணே உன் உறவுகள்
எங்கேயம்மா???

ஓஓஓஓஓஓ!!!!
நீ நிற்கும் வீதியிலே
படிந்திருப்பது உன்
உறவுகளின் உதிரம் படிந்த
கறைதானோ???

அடுத்தபலி நீயாகவும் இருக்கலாம்
அதற்குமுன்
விழித்துவிடு கண்மணியே...
நிமிர்த்திவிடு குனிந்ததலை.


December 22, 2009

இன்றுடன் ஏழுமாசம்...



அழகான அந்தக் குருவிக்கூடு
கலைபட்டுச் சிதைந்துபோய்
இன்றுடன் ஏழுமாசம்...

பொட்டின்றிப் பூவின்றி
ஆன உடையின்றி
முகத்தில் எதுவித சலனமுமின்றி
புகமறுக்கும் உணவை
சுவை மறந்து
வலிந்து திணித்துண்டு
வயிறு வளர்த்துக் காலம் கழிகிறது...





அவள் கணவன் மறைந்து
இன்றுடன் ஏழுமாசம்
அழகிய வதனம் களையிழந்து
ஒளியிழந்து - அவள்
சிரிக்க மறந்து
கவலையில் மூழ்கித்
தனக்குள் தன்னை மறைத்தபடி
தனிமையில் கல்லாய் இறுகி
இன்றுடன் ஏழுமாசம்...

அதன்பின் முதல் முறையாக
அவள் இன்று சிரிக்கக் கண்டேன்.
இன்று பிறந்த அவள் குழந்தை
"அவன் மழலைச் சிரிப்பு
கன்னக்குழி
பெரிய முழி
அத்தனையும் அவன்
அப்பன் போலவே."
பிறர் சொல்லக் கேட்டு
மீண்டும் அவள் சிரிக்கிறாள்.

December 15, 2009

நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்



இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.


ஆராரோ ஆரிவரோ
ஆரடிச்சு நீயழுதாய்
அடித்தாரை சொல்லியளு
ஆய்கினைகள் பண்ணி வைப்பேன்

காத்து நுழையாத வீட்டினுள்ளே
காவாலி அவன் நுழைந்தான்
பாத்துப்பாத்து கட்டி வைச்ச
செல்வமெல்லாம் கொண்டுபோனான்

முகமூடி கொண்டொருவன்
படியேறி வருவானென்று
அடிபாவி நான் நினைக்க
ஆதாரம் ஏதுமுண்டோ

கடிகாவல் செய்து வைக்க
காவலர்கள் யாருமில்லை
கடிநாயும் வளர்க்கவில்லை
காவலுக்கு வைக்கவில்லை

அந்தாளும் சிவனேன்னு
ஆகாயம் போயிட்டார்
இந்த உலகமதில் எங்களுக்கு
வேறு துணை யாருமில்லை

சிறுக்கி செம சிறுக்கி
சின்னமகள் இவளிருக்க
பொறுக்கி எடுத்த முத்து
வேறெதற்கு உலகினிலே

பொன்னனான பொன்மணியை
பொத்திப் பொத்தி வளர்க்கையிலே
கண்ணான கண்மணிகள்
கருவிழியும் மங்குதடி

கருவிழிகள் மங்கி மங்கி
காவல் செய்யும் வேளையிலே
இரவுதனில் எவன் வருவான்
எதையெடுப்பான் என்று பயம்

இரவு வரும் வேளையிலே
காடையர்கள் வீடு வந்தால்
இரவி வரும் வேளைக்குமுன்
பாடையெல்லோ கட்டிடுவார்

பொழுதேறிப் போகையிலே
வருவதுவோ நித துக்கம்
அழுதழுது கண்கள் மங்கும்
அனுதினமும் முகஞ்சினுங்கும்

கள்ளன் வந்தான் என்ற சேதி
வெள்ளம் போல பரவமுன்னர்
உள்ளங் கொள்ளை போனதென்று
ஊர் முழுக்க கதையுரைப்பார்

பருத்தி இலை போல நெஞ்சு
படபடக்கச் செய்யுதடி
நெருடி நெருடி நெஞ்சம்
பயத்தில் திணறுதடி

சிறு பெண்ணும் நானுமிங்கே
உறு மீனாய் தவிக்கையிலே
சிலவேளை வருநாளில்
வயசுக்கு வந்து விட்டால்

காப்பாற்ற நாதியற்று
கலங்கியெல்லோ போயிடுவேன்
பாப்பாரும் யாருமில்லை
பாவிநான் தவிக்கையிலே

கண்ணான கண்மணியே
காலந் தாழ்த்தி வயசுக்கு வா
மண் மீட்கும் காலம் வந்தால்
மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…

ஆராரோ ஆரிவரோ
ஆரடிச்சு நீயழுதாய்
அடித்தாரை சொல்லியளு
ஆய்கினைகள் பண்ணி வைப்பேன்…

December 11, 2009

எண்மர் என் காதலர்கள்


புத்தகம்

என் உழைப்பில் பாதி
கொடுத்துச் சேர்த்த சொத்து
தாலாட்டுப் பாடித்
தூங்கவைக்கும்
இன்னொரு தாய்...

மடிக்கணிணி

என் பத்து விரல்களும்
தூக்கி மகிழ்ந்து
விளையாடும்
இன்னொரு குழந்தை

இணையம்

உலகைச் சுருக்கி
என்
மடிக் கணிணிக்குள்
பூட்டிவிட்ட
விசித்திர விஸ்வரூபம்

பாதணி

மிதிபட்டுத்
தேய்ந்துபோகும்
வாய்பேசா அநாதை.

கைப்பேசி

சட்டைப் பையில்
பதுங்கியிருந்து
பணம் பறிக்கும்
இரகசிய கொள்ளைக்காரன்.

பேனா

என்றுமே என்னை
வழிநடத்தும்
வெள்ளைப்பிரம்பு.

கடிகாரம்

நேரமுகாமை கற்றுத்தந்த
நல்லாசான்..
தூக்கத்தைக் கெடுக்க
மணியடிக்கும் வில்லன்.

கண்ணாடி

என் சுக துக்கம்
மறைக்க மூக்கின்
மேல் பூட்டிய
கருப்பு ஆடை.



December 10, 2009

இன்றுடன் நூறு சொந்தங்கள்


இன்றுடன் நூறு சொந்தங்கள் சேர்ந்திருக்கிறீர்கள் மிகச் சந்தோசமாக இருக்கிறேன். என்னைப் பின் தொடரும் சொந்தங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தொடர்ந்து நல்ல பின்னூக்கங்கள் எழுதி என்னை ஊக்குவித்ததுடன் எனது வளர்ச்சியில் பங்கெடுத்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி கூறுவதுடன் இனிவரும் நாட்களிலும் "தியாவின் பேனா"வில் இருந்து வரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களிடமிருந்து ஆக்கபூர்வமான பின்னூக்கங்களை எதிர்பார்த்து மீண்டும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

அன்புடன்...
-தியா-

பின்பற்றுபவர்கள் (101)
பலா பட்டறை
sarathy
ரசிக்கும் சீமாட்டி
guna
சிங்கக்குட்டி
நா.முத்துக்குமார் தமிழன்
kovai sakthi
Gobenath Muthusamy
viswam
malarvizhi
காவிரிக்கரையோன் MJV
இராகவன் நைஜிரியா
Shanthru
kalyani suresh
பித்தனின் வாக்கு
ஜெகநாதன்
pavi
நசரேயன்
ரெத்தினசபாபதி
வன்னி தகவல் தொழில்நுட்பம்
Surya Kannan

க.பாலாசி
vasanth kumar
அகல்விளக்கு
கதிர் - ஈரோடு
ஈழத்து நிலவு
susi
தேவன் மாயம்
கவிக்கிழவன்
நட்புடன் ஜமால்
sakthi
Vidhoosh
nige k
தியாவின் பேனா
nila mukilan
maha
Sujatha Jr
Muthamizh Vendhan
வினோத்கெளதம்
velan rajan
velji
ramesh kumar
velu mani
jeewa chennai
mithra nesamithran
tamilvanan vanan

Didik Anantha
விக்னேஷ்வரி
shirdi.saidasan@gmail.com
Eliane Jany Barbanti
RAD MADHAV
ஈ ரா
ஊடகன்
rajan RADHAMANALAN
திருப்பூர் மணி Tirupur mani
Siva
மண்குதிரை
nilaamathy
தமிழ் குடும்பம்
iniya
புலவன் புலிகேசி
நீரோடை
கலகலப்ரியா
G.S.Dhayalan
sivatharisan paranirupasingam
anto
நாகு
arur
மன விலாசம் "நவாஸ்"
வானம்பாடிகள்

Balavasakan
Muthu

navina14
vnthangamani mani
அத்திரி
ஜோதிஜி
D.R.Ashok
நாஞ்சில் பிரதாப்
சுந்தரா
இன்றைய கவிதை
அனுபவம்
அகநாழிகை
சி.கருணாகரசு
உலவு.காம் (www.ulavu.com)
பா. ராஜாராம்
Achilles
Sridhar
சத்ரியன்
Ramya
சங்கர்
மா.குருபரன்
ammu
Shankar
வால்பையன்
தமிழ் நாடன்
Arun
kasthuri v

oorthther
Ravishanth Selvanayagam








Chess

வந்திருப்பவர்கள்